Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
Akshaya Tritiya 2025: அட்சய திருதியை அன்று தங்கத்தை தவிர வேறு எதெல்லாம் வாங்கலாம் தெரியுமா?
Akshaya Tritiya 2025: இந்து மதத்தில் அட்சய திருதியைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சொல்லப்போனால் அட்சய திருதியை தினமானது மிகவும் மங்களகரமான நாளாகும். இந்நாளில் எந்த செயல்களை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் மற்றும் எதை வாங்கினாலும் அது பெருகும்.
இப்படிப்பட்ட புனிதமான அட்சய திருதியை நாளானது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் வரக்கூடிய திருதியை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த அட்சய திருதியை நாளில் லட்சுமி தேவியை பூஜை செய்து வணங்கினால், லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசி கிடைக்கும். மேலும் இந்த நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் தங்கம் பெருகும் என்ற நம்பிக்கையினால், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் அட்சய திருதியை நாளுக்காக காத்திருந்து தங்கத்தை வாங்குவார்கள்.
ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலைக்கு, அதை வாங்குவது என்பது அனைவராலும் இயலாத ஒன்று. இந்நிலையில் லட்சுமி தேவி வாசம் செய்யும் வேறுசில பொருட்களை வாங்கலாம். இப்போது அட்சய திருதியை நாளில் தங்கத்திற்கு பதிலாக வேறு எந்த பொருட்களை வாங்கலாம் என்பதைக் காண்போம்.
1. மண் பானை
அட்சய திருதியை நாளில் மண் பானை வாங்குவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த மண் பானையை வாங்குவது வீட்டிற்கு நிதி ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. இந்த மண் பானையில் தினமும் நீரை ஊற்றி பயன்படுத்தலாம். கோடையில் மண் பானையில் நீரை ஊற்றி குடித்தால், ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடித்தது போன்று ஜில்லென்று இருக்கும்.
2. பித்தளை அல்லது செம்பு பாத்திரங்கள்
உங்களால் அட்சய திருதியை நாளில் தங்கம் அல்லது வெள்ளி பாத்திரங்களை வாங்க முடியாவிட்டால், வருத்தம் கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களை வாங்குவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இந்த வகையான உலோக பொருட்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவுவதாக நம்பப்படுகிறது.
3. சோழி
சோழி லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சோழியை அட்சய திருதியை நாளில் வாங்குவது நல்லது. அதுவும் 11 சோழிகளை வாங்கி, அவற்றை சிவப்பு துணியில் சுற்றி, லட்சுமி தேவியின் முன் வைத்து வழிபட்டு, பின் அவற்றை பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால், பணம் பெருகும்.
4. பார்லி
பூமி தாயால் பரிசளிக்கப்பட்ட முதல் தானியமாக பார்லி கருதப்படுகிறது. இந்த பார்லி விஷ்ணுவின் அடையாளமாகும். இந்த பார்லியை அட்சய திருதியை நாளில் வாங்குவது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
5. வெண்கடுகு
அட்சய திருதியை நாளில் வெண்கடுகு விதைகளை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த வெண்கடுகை வீட்டில் வைத்திருப்பது லட்சுமி தேவியை மகிழ்விப்பதாகவும், மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தருவதாகவும் நம்பப்படுகிறது.
6. காட்டன் பஞ்சு
உங்களால் விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாவிட்டாலும், காட்டன் பஞ்சு வாங்கலாம். இந்த பஞ்சு பிரார்த்தனையின் போது விளக்குகளை ஏற்ற பஞ்சு திரி போல பயன்படுத்தப்படுவதால், இவற்றை வாங்குவது வீட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது.
7. கல் உப்பு
அட்சய திருதியை தினத்தில் வேறு எந்த பொருட்களை வாங்க முடியாவிட்டாலும் கல் உப்பை ஒரு பாக்கெட்டை வாங்குங்கள். ஏனெனில் கல் உப்பு லட்சுமி வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே கல் உப்பை வாங்குங்கள்.
8. துடைப்பம்
அட்சய திருதியை நாளில் வாங்க ஏற்ற மற்றொரு பொருள் தான் துடைப்பம். வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் துடைப்பம், லட்சுமி தேவி குடியிருக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே முடிந்தால் வீட்டில் ஒரு துடைப்பத்தை வாங்கி போடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications