Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை நாளான இன்று இந்த தவறை செய்யாதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துவிடும்...
Akshaya Tritiya 2024: இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் மங்களகரமான நாளாகும். இந்த அட்சய திருதியை நாளில் என்ன செய்தாலும், என்ன வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது மே 10 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் விநாயகர், லட்சுமி தேவி, குபேரர், விஷ்ணு ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை செய்து மக்கள் வழிபடுவார்கள். இந்த நாளில் தான்குபேரர் சிவன் மற்றும் பிரம்மாவிடம் ஆசியை பெற்று, சொர்க்கத்தின் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.

அட்சயம் என்பது ஒருபோதும் வற்றாது பெருகக்கூடியது என்று பொருள். எனவே இந்த அட்சய திருதியை சுப நாளில் மக்கள் நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள். பொதுவாக இந்நாளில் செழிப்பான வாழ்க்கையை வாழ மக்கள் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவார்கள். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையைப் பார்க்கும் போது, அனைவராலும் தங்கத்தை வாங்க முடியாது.
இந்நிலையில் லட்சுமி தேவிக்கு இணையான பொருளாக கருதப்படும் உப்பு, மஞ்சள் தூள், மல்லிகைப் பூ மற்றும் வாசனைமிக்க பொருட்களை வாங்கலாம். இவ்வளவு மங்களகரமான சுப நாளில் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் என்று சில உள்ளன. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
1. அசைவம் கூடாது
அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் செழிப்பான வாழ்க்கையை வாழ மக்கள் லட்சுமி தேவி, குபேரர், விநாயகர், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு, சிறப்பு பூஜைகளை செய்து, அவர்களது ஆசியை பெற முயற்சிப்பார்கள். இந்த நாளில் அசைவ உணவுகளை உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சைவ உணவுகளான காய்கறிகள், பழச்சாறுகள், பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
2. ஆபரணங்கள் வாங்குவது
அட்சய திருதியை நாளில் வாங்கும் பொருட்கள் பலமடங்கு பெருகும் என்று மக்கள் நம்புவதால், நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ தங்கம், வெள்ளி மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லது. அதோடு இந்நாளில் சொத்துக்கள், புதிய வாகனங்கள் மற்றும் புதிய தொழில்களை தொடங்கவும் செய்வார்கள்.
3. கோவிலுக்கு செல்வது
நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்த மிகவும் புனிதமான இடம் தான் கோவில். கோவிலுக்கு செல்வதன் மூலம் ஒருவர் மன அமைதியையும், நிம்மதியையும், ஒருவித பாதுகாப்பு உணர்வையும் பெறலாம். ஒரு நல்ல நாளில் கோவிலுக்கு சென்று தெய்வங்களை பூஜித்து வணங்கி, அவர்களின் ஆசியை பெறுவது நல்லது.
4. தான தர்மங்கள்
பொதுவாக ஒரு நல்ல நாளில் தான தர்மங்களை செய்வது மிகவும் நல்லது. அதுவும் அட்சய திருதியை நாளில் ஏழை எளியோருக்கு ஆடை, உணவுகள், தண்ணீர் போன்றவற்றை தானம் செய்வதால் ஒருவர் நல்ல கர்மாவைப் பெறுவதோடு, தெய்வங்களின் ஆசியையும் பெறலாம்.
5. ஆன்மீக நடவடிக்கைகள்
அட்சய திருதியை நாளன்று புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர நகங்களை வெட்டுவது, சூதாட்டம் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இந்த நாள் மிகவும் புனிதமான நாள், இந்நாளில் ஒருவர் தங்களின் நேரத்தை கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆன்மீக நடவடிக்கைகளில் நேரத்தை செலவிடுவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
6. கடன் கூடாது
அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் கடன் வாங்குவதையோ அல்லது லோன் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆண்டு முழுவதும் கடன் அதிகம் வாங்க நேரிட்டு, கடன் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications