Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
அட்சய திருதியை அன்று தெரியாம கூட இந்த விஷயங்களை பண்ணாதீங்க... இல்லனா துரதிர்ஷ்டம் தேடிவருமாம்...!
அட்சய திருதியை இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் இந்த பண்டிகை இந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் தேதி வருகிறது. அட்சய திருதியை நாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அட்சய திருதியை அன்று நீங்கள் எதைச் செய்தாலும், அது நேர்மறை/எதிர்மறையாக இருந்தாலும், அது எதிர்காலத்தில் பத்து மடங்காக உங்களுக்கு கிடைக்கும்.
அன்றைய தினம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பொறுத்து பலன்கள் இருக்கும். எனவே இந்த நாளில் நீங்கள் எதைச் செய்தாலும் அல்லது பேசினாலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாளில் நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அட்சய திருதியை அன்று நீங்கள் செய்ய வேண்டியவை
தங்கம் வாங்குதல்
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது ஒரு பாரம்பரியமாகிவிட்டது, இதற்கு முன் இந்த நாளில் நீங்கள் தங்கம் வாங்கவில்லை என்றால் இந்த வருடம் வாங்குங்கள். தங்கம் வாங்குவது ஒரு நல்ல முதலீடு என்பதைத் தவிர, இது செல்வத்தையும் குறிக்கிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாகவும் நம்பப்படுகிறது. தங்கம் வாங்குவது புனிதமானதாகக் கருதப்படுவதுடன், உங்கள் குடும்பத்திற்கு பொருளாதார நல்வாழ்வையும் தரும்.
புதிய முயற்சியைத் தொடங்குங்கள்
நீங்கள் புதிதாக தொழில் தொடங்க விரும்பினாலும், இணையதளம், நிறுவனம் அல்லது நீங்கள் விரும்பும் வாழ்க்கை தொடர்பான எதையும் இந்த நாளில் தொடங்குங்கள். இந்த நாளில் எந்த புதிய தொடக்கமும் எதிர்காலத்தில் செழிப்பைக் கொடுக்கும்.
வாகனம் வாங்குங்கள்
நீங்கள் கார் அல்லது மோட்டார் பைக் வாங்க நினைத்தால், அட்சய திருதியை அன்று வாங்குங்கள். இந்த நாளில் வாகனங்கள் வாங்குவது நீண்ட ஆயுளைக் குறிக்கிறது. நீங்கள் பாதுகாப்பாக பயணிப்பதையும் இது உறுதிசெய்யும். பல கார் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அட்சய திருதியை அன்று சிறந்த சலுகைகளை வழங்குகின்றன, எனவே இந்த நாளில் வாகனம் வாங்குவது நல்லது.
புதிய வீடு வாங்குங்கள்
புதிய வீடு வாங்க அட்சய திருதியை சிறப்பான நாளாகும். புதிய வீடு வாங்குவது தம்பதிகளை ஆசீர்வதிக்கிறது, மேலும், 'கிரஹ பிரவேஷ்' விழாவைச் செய்ய இது ஒரு நல்ல நாள். இந்த நாளில் தீய சக்திகள் விரட்டப்பட்டு, வீட்டில் நேர்மறை ஆற்றலுடன் ஆசீர்வதிக்கப்படும். இந்த நாளில் புதிய சொத்து வாங்குவது உங்கள் வீட்டில் நேர்மறையான அதிர்வுகளைக் கொண்டு வந்து அந்த வீட்டில் நீங்கள் வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதிசெய்யும்.
அட்சய திருதியை அன்று நீங்கள் செய்யக்கூடாதவை
ஆத்திரம் கொள்ளக்கூடாது
அட்சய திருதியை நாளில் ஆத்திரம் கொள்ள வேண்டாம், ஏனெனில் அது லட்சுமி தேவியை வருத்தப்படுத்தலாம். லட்சுமி தேவியை வழிபடும் போது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
வீட்டை இருட்டாக வைத்திருக்கக்கூடாது
புராணக்கதைகளின் படி, இந்த நாளில் வீட்டின் எந்த பகுதியையும் இருட்டில் வைக்கக்கூடாது. வீட்டின் ஏதாவது ஒரு பகுதி இருளாக இருந்தால், உடனடியாக விளக்கு ஏற்றவும். இதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் வீட்டிற்குள் இருக்கும்.
வெறும் கையுடன் வீட்டிற்கு திரும்பக்கூடாது
நீங்கள் ஷாப்பிங்கிற்காக வெளியே சென்றிருந்தால். வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டாம், ஏனெனில் இது அசுபமாக கருதப்படுகிறது. இந்த நாளில் வெள்ளி அல்லது தங்கம் கிடைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இருப்பினும், விலை அதிகமாக இருந்தால், உலோகத்தால் செய்யப்பட்ட நகைகளை அல்லது தானியங்களை வீட்டிற்கு வாங்கி வரலாம்.



Click it and Unblock the Notifications

