Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஆடி வெள்ளியில் மகாலட்சுமியின் அருளைப்பெற வீட்டில் இந்த எளிய பூஜையை பண்ணுங்க... பணம் வீடு தேடிவரும்..!
Aadi Special: மகாலட்சுமி விஷ்ணு பகவானின் துணைவி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அனைத்து செல்வ செழிப்பையும் பெற மகாலட்சுமி தான் வணங்குவோம். ஆனால் மகாலட்சுமியை வணங்கும் நம்மில் பலருக்கும் அவர் தோன்றிய வரலாறு தெரியாது.
முன்னோர் செய்த வழிபாட்டை நாமும் தொடர்ந்து செய்கிறோம் என்பது தான் பலரின் காரணம். சரி வாங்க மகாலட்சுமி தோன்றிய வரலாறு, வழிபாட்டு முறை, நெய்வேத்தியம், மற்றும் வழிபட உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் பற்றி பார்க்கலாம்.

மகாலட்சுமி
மனிதர்களை போலவே தேவர்களுக்கும் வயது முதிர்ச்சி, முடி நரைப்பு, மற்றும் மரணம் போன்றவை இருந்திருக்கின்றன. அதிலிருந்து தப்பிக்க விரும்பிய தேவர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் முறையிட, அவரோ எனக்கும் தான் அவை ஏற்படுகின்றன என்றார். மேலும் வாருங்கள் காக்கும் கடவுளான விஷ்ணுவிடம் முறையிடலாம் என்றார். அவரிடம் முறையிட்ட போது பாற்கடலில் அமிர்தம் இருக்கிறது அதை சாப்பிட்டால் மரணம் மற்றும் வயது முதிர்வில் இருந்து தப்பித்து விடலாம். ஆனால் அதற்கு பாற்கடலை கடைய வேண்டும் என்றார்.
மேலும் தேவர்களால் மட்டும் முடியாது, அசுரர்களின் உதவியையும் பெறுங்கள் என்றார். பாற்கடலை கடைய மேருகிரி மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகள் கடைந்தார்கள். அப்போது வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்க, அதை சாப்பிட்ட சிவ பெருமான் திருநீலகண்டர் என பெயர் பெற்றார். அப்படி கடைசியாக அமிர்தம் வரும் முன் பாற்கடலில் இருந்து சிந்தாமணி, சூடாமணி, கௌத்துவ மணி, மூதேவி, ஸ்ரீதேவி, அகலிகை, காமதேனு, கற்பக மரம், மற்றும் துளசி போன்றவை வெளிவந்தன.
கடலில் இருந்து கிடைத்த இந்த பொருட்களை பாற்கடலை கடைந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாக எடுத்து கொள்ளும் போது, மஹாலட்சுமியை விஷ்ணு பெருமான் மணந்து கொள்கிறார். அலை கடலில் இருந்து தோன்றியதால் மஹாலட்சுமியை அலை மகள் எனும் பெயராலும் அழைக்கிறார்கள்.
பூஜைக்கான பொருட்கள் - மஹாலக்ஷ்மி படம், சிவப்பு தாமரை, பழங்கள், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, மற்றும் குங்குமம்.
மந்திரம் - நமேஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீ
ஸ்ரீ பீடே ஸூரபூஜிதே சங்க சக்ர
கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி
நமோஸ்து தே
நெய்வேத்தியம் - நெல்லிக்காய் சாதம், கேசரி, சர்க்கரை பொங்கல். {இனிப்பான பொருட்கள் அனைத்தையும் செய்யலாம்}
எளிய முறை:
கடவுள்கள் எப்போதும் எனக்கு இதெல்லாம் இருந்தால் ஏற்பேன் என சொல்வதில்லை. உங்களால் முடிந்ததை செய்தாலே அவர்கள் அருள் உங்களுக்கு கிடைக்கப் பெறும். எல்லாருக்கும் மேற்சொன்ன பொருட்களை வைத்து வழிபாடு செய்வது சற்று கடினமாக இருக்கலாம். இதற்கு காரணம் பொருளாதாரா நிலை அல்லது அனைத்தையும் செய்து வழிபட நேரம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் இந்த எளிய முறையில் முயற்சி செய்து மகாலட்சுமியின் அருளை பெறலாம்.
பூஜைக்கான பொருட்கள் - மகாலக்ஷ்மி படம், பூக்கள், மற்றும் குங்குமம்.
மந்திரம் - நமேஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீ
ஸ்ரீ பீடே ஸூரபூஜிதே சங்க சக்ர
கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி
நமோஸ்து தே
நெய்வேத்தியம் - பெரிய நெல்லிக்காய், நாட்டு சர்க்கரை சேர்த்த பால் ஒரு கப்.
சரி ஆடி மாதத்தில் விதவிதமாக நெய்வேத்தியம் செய்து கடவுளை வழிபடுவோம். இரண்டாம் வெள்ளிக்கிழமையான நாளை மஹாலட்சுமியை வழிபாட்டிற்கு உகந்த நெய்வேத்தியம் இனிப்பான பொருட்கள். வித்தியாசமாக ஆடி கும்மாயம் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
- உளுந்தம் பருப்பு - 1 கப்
- பாசிப்பருப்பு - ½ கப்
- பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
- வெல்லம் அல்லது கருப்பட்டி - 2 கப்
- நெய் - 1 கப்
- ஏலக்காய் பொடி - ¼ டீ ஸ்பூன்
செய்முறை:
- வாணலியை அடுப்பில் வைத்து உளுந்தம் பருப்பு மற்றும் பாசி பருப்பை தனித்தனியாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆற விடவும். பின் அரிசியை சேர்த்து லேசாக பொரியும் வரை வறுத்து ஆற வைத்து பொடியாக அரைத்து 1 கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து சூடானதும் வெல்லம் சேர்த்து கரைத்து கொதிக்க விட்டு வடித்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து ½ கப் நெய் சேர்த்து சூடானதும் மிதமான தீயில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து, வடித்து வைத்த வெல்லத்தை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து ஏலக்காய் பொடி மற்றும் மீதமிருக்கும் நெய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- கையில் ஒட்டாத பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான ஆடி ஸ்பெஷல் கும்மாயம் ரெடி!



Click it and Unblock the Notifications

