Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆடி மாத மூன்றாம் பிறை.. இன்று சந்திரனை பார்த்தால் வறுமை நீங்குமாம்.. எப்படி தெரியுமா?
காலை நேரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் சூரியனை வணங்குவது நல்லது.. அதுபோல மாலை நேரம் எப்பொழுதுமே விஷ்ணுவின் நேரமாகும். அப்போது சந்திரனை தரிசனம் செய்வது நல்லது.. அதிலும் அமாவாசைக்கு மூன்றாவது நாள் வரும் சந்திரனை தரிசிப்பது சிறப்பு..
அந்த வகையில் இன்று ஆடி மாத மூன்றாம் பிறை.. மாலை நேரத்தில் மேற்கு திசையில் வானத்தில் அமாவாசையின் மூன்றாவது தினம் சந்திர தரிசனம் பார்த்து வணங்குதல் சிறப்பு. அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் தெரியும் நிலவுதான் மூன்றாம் பிறை என அழைக்கப்படுகிறது.

சந்திர தரிசனம்
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கும் பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
புராணக்கதை
ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து சிரித்தான்..
இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் சிவனை நோக்கி கடும் தவம் செய்தார்.. அந்த தவத்தின் விளைவாக தன்னுடைய பழைய அழகை பெற்றான்.
சந்திர தரிசனம் செய்தால் கிடைக்கும் பலன்கள்
1. இன்று சந்திரனை பார்க்கும் போது கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்கினால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.
2. அமாவாசையின் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
3. சந்திரனின் பரிபூரண அருளைப் பெற, சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்ட பலன் கிடைக்குமாம்..
4. மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனை நேரிலேயே தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.
5. அந்த வகலியில் இன்று ஆடி செவ்வாய்க்கிழமையும் கூடி வருகிறது அதனால் இன்றைய தினம் மிக மிக சிறப்பான நாளாகும்.. இன்று இரவு 8:48 மணி முதல் 9:43 மணி வரை சந்திர தரிசனம் காணும் நேரமாகும்.. அடுத்த சந்திர தரிசனம் செப்டம்பர் 4ஆம் தேதி புதன் கிழமை வருகிறது..



Click it and Unblock the Notifications