Latest Updates
-
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா?
ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் இதை மட்டும் செய்யாதீர்கள்..!
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வெரு செவ்வாய்க்கிழமையும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.. இன்று அம்மனையும் முருகனையும் சேர்ந்து வழிப்பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.. வறுமை நீங்கும்..
அத்துடன் ஆடிச் செவ்வாய்க்கிழமையில் சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.. மறந்தும் கூட இவற்றையெல்லாம் செய்து விடாதீர்கள் என சாஸ்திரம் சொல்லுகிறது.. சரி ஆடி செவ்வாயில் என்னவெல்லாம் செய்யலாம்? என்னென்ன வேலைகள் செய்யக்கூடாது? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. ஆடி செவ்வாய்க்கிழமையில் வீட்டை துடைத்து சுத்தம் செய்யக்கூடாது. பொதுவாகவே எல்லா வாரத்திலும் வரும் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் வீட்டை துடைத்து சுத்தம் செய்தால் லட்சுமி கடாட்சம் வீட்டை விட்டு வெளியே சென்று விடும் என்பார்கள்.. அதிலும் ஆடி செவ்வாய் மிகவும் விஷேசமானது. அதனால் அன்றைய தினம் வீட்டையும் பூஜையறையையும் சுத்தம் செய்யக் கூடாது. முதல்நாளே செய்து வைப்பது நலம்..
2. அதுமட்டுமல்லாமல், ஆடி செவ்வாய்க்கிழமை காலையில் முருகனையும் அம்மனையும் சேர்ந்து வழிப்படுவது சிறப்பு.. அதிலும் இன்று 2வது ஆடிச் செவ்வாய்க்கிழமை. அதனால் இன்று காலையிலேயே அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு செய்யக்கூடிய பூஜை தவறி விடக்கூடாது.. கண்டிப்பாக செய்து விட வேண்டும்.. அதனாலேயே முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
3. ஆனால் சில வீடுகளில் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் இருப்பார்கள்.. அவர்கள், எங்களால் அந்தக் கிழமையில் சுத்தம் செய்ய முடியாது என்றால், உங்களுக்கு எந்த கிழமை சவுகரியமுமோ, செவ்வாய்க் கிழமை வெள்ளிக் கிழமையை தவிர்த்துவிட்டு, மாலை 6 மணிக்கு முன்பாக உங்களுடைய வீட்டையும் பூஜை அறையையும், பூஜை பாத்திரங்களையும் சுத்தம் செய்து கொள்ளலாம்...
4. ஆடிச்செவ்வாய்க்கிழமையில் வீட்டில் உள்ள குப்பைகளை சூரிய உதயத்திற்கு முன்பே அதாவது காலை 6 மணிக்கு முன்பே வெளியில் கொட்டி விட வேண்டும்.. அன்றைய தினம் எந்தவித தேவையில்லாத பொருளையும் குப்பையில் போடக்கூடாது.. அது வீட்டில் இருக்கு ஐஸ்வர்யத்தை போகச்செய்து விடும்..
5. ஆடிச் செவ்வாய்க்கிழமையில் உப்பு வாங்கலாம்.. ஆனால் அதை யாருக்கும் கடனாகவும் அல்லது தானமாகவும் வழங்கக்கூடாது.. உப்பு லட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது.. அதனால் ஆடிச் செவ்வாயில் மட்டும அல்ல மற்ற எந்த நாளாகவும் இருந்தாலும் உப்பை கடனாகவும் அல்லது தானமாகவும் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால் நம்ம வீட்டில் உள்ள லட்சுமி தேவி வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம்..
6. அத்துடன் இன்று ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.. அதிலும் ஆடி மாத 2ஆம் செவ்வாய்கிழமையான இன்று ராகு கால நேரத்தில் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றினால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.. திருமணம் ஆனவர்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
7. ஆடிச் செவ்வாய்க்கிழமையில் கோவிலுக்கு சென்று சுமங்கலி பெண்களுக்கு வலையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பூ, பழம், ஆகியவற்றை தானமாக வழங்கினால் அது நமக்கு மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்..
8. நவகிரகங்களில் மங்கலகாரகன் என அழைப்படுபவர் செவ்வாய் பகவாந்தான். இவருக்குரிய கிழமைக்செவ்வாய். வீடு, நிலம், மங்கல காரியங்கள் நடப்பதற்கு காரணமான கிரகம் இவர்தான். அதே போல் கடனை அடைப்பதற்கு ஏற்ற நாளும் செவ்வாய்கிழமை தான். அந்த செவ்வாய்க்கு உரிய கடவுள் முருகன் என்பதால் இன்று முருகனை வழிபட ஏற்ற கிழமையாக சொல்லப்படுகிறது. அதனால் இன்று யாருக்கும் கடன் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள்.. மேற்கூறிய அனைத்தும் ஆடி மாதம் கடைபிடித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் நிறைந்து இருக்கும்..



Click it and Unblock the Notifications











