Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
ஆடி அமாவாசை 2024 காகத்திற்கு ஏன் உணவு வைக்க வேண்டும் தெரியுமா?
பொதுவாகவே இந்துகள் படையல் வைத்த உடனேயே காகத்திற்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.. அதிலும் அமாவாசை தினத்தில் காக்கைகளுக்குதான் முதல் உணவை வைப்பார்கள்.. காராணம் அமாவாசை தினம் என்பது முன்னோர்களுக்கான தினம்.. முன்னோர்களை வழிப்படுவதற்குரிய தினமாகும்..
அதிலும் ஆடி அமாவாசையானது என்பது மிகவும் சிறப்புக்குரிய தினமாக கருதப்படுகிறது. காரணம் இந்த ஆடி அமாவாசையில் நம் முன்னோர்கள் பூலோகத்திற்கு இறங்கி வருவார்கள் என்று நம்மப்படுகிறது.. அப்படி அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் நம் வீட்டிற்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்வார்கள் என்று கூறுவது ஐதீகம். அதனால் காகத்திற்கு உணவு கொடுப்பதன் மூலம் பித்ருக்களின் ஆசி கிடைக்கும் முழுவதுமாக நமக்கும் நம் சந்ததிகளுக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலத்தை தட்சிணாயனம் என்று கூறுவார்கள். சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. இது தேவர்களுக்கு தட்சிணாயனம் இரவுப் பொழுது. எனவே, இந்த காலகட்டத்தில் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குவார்கள் என்பது ஐதீகம்.
அதனாலேயே ஆடி அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் தந்தை வழி உறவுகளுக்கு காரணமான கிரகமான சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையிலும், கர்மகாரகன் என சொல்லப்படும் சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்திலும் இணைந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 04ம் தேதி ஆடி அமாவாசை அமைகிறது. இதனால் இது தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
ஏன் காகத்திற்கு உணவு படைக்க வேண்டும்?
பொதுவாக அமாவாசை என்றாலே காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் நம்முடைய வழக்கம். காகத்திற்கு இலை போட்டு, உணவு வைத்து விட்ட பிறகே நாம் உணவு சாப்பிடும் வழக்கம் உள்ளது. எத்தனையோ பறவைகள், உயிரினர்கள் இருக்கும் போது அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் உணவு வழங்கப்படுவது ஏன் தெரியுமா? இதற்கு ஜோதிட ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் பல காரணங்கள் உண்டு..
காகம் சனிபகவானின் வாகனமாகும்
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், எமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் மகிழ்ச்சியுடன் நமக்கு ஆசி வழங்குவார்கள். எனவேதான் அமாவாசை நாளில் நாம் காகங்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
மேலும் காகம் பூலோகத்தில் நாம் செய்யும் திதி, தர்ப்பணம் போன்ற சிரார்த்த காரியங்களை பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களிடம் கொண்டு போய் சேர்க்கின்றன என சொல்லப்படுகின்றன. காகம், சாதாரணமாக குப்பையில் கிடக்கும் பொருட்களையும், சாப்பிடும். அதே சமயம் நாம் இலை போட்டு வைக்கும் உணவுகளையும் சாப்பிடும். அது போல கர்ம வினைகளால் நாம் எவ்வளவு கீழான நிலையில் இருந்தாலும், அவற்றை நீக்கி, வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்கும் நிலையை கொடுக்கும் என்பதாலேயே காகத்திற்கு அமாவாசை நாளில் உணவு வைக்கப்படுகிறது.
ஆடி அமாவாசையில் காகத்திற்கு உணவு அளித்தால் கிடைக்கும் பலன்கள்
ஆடி அமாவாசையில் விரதம் கடைபிடிப்பது மட்டுமின்றி காகத்திற்கு உணவு வைப்பதற்கும் சில முறை உள்ளது. அதன் படி உணவளித்தால் முன்னோர்களின் ஆசிகள் நமக்கு கிடைப்பதுடன், நமக்கு வாழ்க்கையில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். நம்முடைய பாவங்கள் குறையும். பித்ருதோஷம் உள்ளிட்ட தோஷங்களில் இருந்து விட முடியும். அதனால் ஆடி அமாவாசையில் தவறாமல் காக்த்திற்கு உணவு வையுங்கள்..



Click it and Unblock the Notifications