For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமான் அணிந்திருக்கும் ஆபரணங்களின் முக்கியத்துவம்!!!

By Ashok CR
|

நம் இந்து புராணத்தில் மிகவும் தனித்துவத்துடன் உடை அணியும் கடவுள்களில் சிவபெருமானுக்கு முக்கிய பங்கு உள்ளதை நாம் ஒத்துக் கொள்ள தன் வேண்டும். அவர் அணியும் அணிகலன்களின் தனித்துவமே அவர் மீதான சுவாரசியத்தை அதிகரிக்கிறது.

அவசியம் படிக்க வேண்டியவை: மகா சிவராத்திரியின் முக்கியத்துவம்...!

சிவபெருமானின் திருவுருவம் உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்றென்றால், உங்கள் அமாந்தில் இவையெல்லாம் வருவது உறுதி - அவர் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு, அவர் உடலை போர்த்தியுள்ள புலித்தோல், படர்ந்த தலை முடி, நெற்றியில் இடப்பட்டுள்ள விபூதி, தேய்பிறை மற்றும் பல. சிவபெருமான் அணியும் அணிகலன்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா? தன்னை அலங்கரிக்க ஏன் இவ்விதமான தனித்துவமான அணிகலன்களை அவர் அணிகிறார்?

மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள்!!!

இந்த கேள்விகள் என்றாவது உங்களுக்கு எழுந்திருந்தால், அதற்கான விடைகளை தெரிந்து கொள்வதற்கான நேரம் இது. இந்த சிவாராத்திரிக்கு, சிவபெருமானின் ரகசியங்களை நாங்கள் கூறப் போகிறோம். சரி, சிவபெருமான் அணிந்துள்ள அணிகலன்களின் முக்கியத்துவத்தை பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாம்பு

பாம்பு

சிவபெருமான் கழுத்தில் இருக்கும் பாம்பு, அவர் மீது ஓய்வெடுக்கும் 'ஜீவன்' அல்லது தனிப்பட்ட ஆன்மாவை குறிக்கும். ஒவ்வொரு உயிரினமும் தன் நலனுக்கு, உச்ச கடவுள் சக்தியை நம்பியிருப்பதை இது குறிக்கிறது. மேலும் பாம்புகள் என்றால் நாம் பயம் கொள்வோம். ஆனால் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் சிவபெருமான் துறந்துள்ளதால், அவருக்கு பயம் இருக்காது. அதனால் அவர் கழுத்தை சுற்றி அவர் பாம்பை வைத்திருக்கிறார்.

விபூதி

விபூதி

சிவபெருமான் எப்போதுமே தன் உடம்பின் மீது சாம்பல் அல்லது விபூதி பூசிக்கொண்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். விபூதி என்பது மனித வாழ்க்கையின் முடிவை குறிக்கும். மனிதன் தன் முடிவை மறந்து விடக்கூடாது என்பதற்காக தான் தன் உடம்பு முழுவதும் விபூதியை பூசிக்கொண்டுள்ளார் சிவபெருமான். உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினமும் சாம்பலாக வேண்டும் என்பது தான் இயற்கை.

படர்ந்த தலை முடி ஜடை

படர்ந்த தலை முடி ஜடை

ஜடையிட்ட சிவபெருமானின் படர்ந்த தலை முடி என்பது அவர் 'வாயு', அதாவது காற்றின் தலைவர் என்பதை குறிக்கும். காற்று என்பது ஒவ்வொரு உயிரினமும் வாழ்வதற்கு அதிமுக்கியமானதாகும்.

ருத்ராட்சை

ருத்ராட்சை

ருத்ராட்சையில் செய்யப்பட கழுத்து மாலை மற்றும் கை காப்பையும் சிவபெருமான் அணிந்திருக்கிறார். அவரின் கழுத்து மாலை 108 மணியை கொண்டுள்ளதாகும். அது இந்த அண்டத்தை உருவாக்க உதவும் கூறுகளை குறிக்கும். அனைத்து வித கூறுகளுக்கும் சிவபெருமானே தலைவர் என்பதையும் அது குறிக்கிறது.

புலித்தோல்

புலித்தோல்

புலித்தோல் என்பது சக்தியை குறிக்கும். சக்தி என்பது சிவனின் பாதி என்பதால், அண்டத்தில் உள்ள அனைத்து வலிமைகளையும் அவர் வெற்றிக்கொண்டதை புலித்தோல் குறிக்கும்.

பிறை

பிறை

'சந்திரசேகரா' அல்லது தலையில் நிலவை வைத்திருப்பவர் என்றும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார். அவர் தலையில் இருக்கும் பிறை, ஐந்தாம் நாள் நிலையை குறிக்கும். உருவாகும் செயல்முறையின் கால சுழற்சியை, ஆரம்பம் முதல் இறுதி வரை, அது குறிக்கும். அதனால் தான் நிலவு என்பது நேரத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது. நேரத்தின் மீது அவருக்கு இருக்கும் கட்டுப்பாட்டை தான் அவர் தலையில் இருக்கும் பிறை குறிக்கிறது. சிவபெருமான் என்பவர் காலத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றும் நிலையான நிஜம் என்றும் குறிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shivratri Spcl: Significance Of Lord Shiva's Ornaments

Let us find out about the significance of Lord Shiva's ornaments. The uniqueness of His ornaments is what makes Him all the more interesting to us. Take a look.
Desktop Bottom Promotion