Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கில் வந்த அகாரோ கலெக்ஷன்கள்!!!
தற்போது நடந்து கொண்டிருக்கும் வில்ஸ் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் மிகவும் ஸ்டைலான வசந்தகால மற்றும் கோடைகால உடைகளை கவுரவ் ஜெய் குப்தா என்னும் டிசைனர் வெளியிட்டார். இந்த உடைகள் தான் அகாரோ கலெக்ஷன். இந்த அகாரோ கலெக்ஷன்களில் பெரும்பாலும் சாம்பல் நிறமானது கலந்திருக்கும். மேலும் இவை அனைத்தும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இந்த கலெக்ஷன்களில் ஜம்ப்சூட், முழங்கால் அளவுள்ள ஆடைகள், மேக்ஸிஸ் மற்றும் ஹாட் பேண்ட் போன்ற பல உள்ளன. இவை அனைத்திலும் சாம்பல் நிற பிரிண்ட் கொண்டது மற்றம் ப்ளைனான சாம்பல் நிற ஜாக்கெட் இருக்கும்.
இங்கு அந்த வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த அகாரோ கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்காக...

நீளமான பாவாடை
அகாரோ கலெக்ஷன்களில் பிரிண்ட் மட்டுமின்றி, ப்ளைனான நீளமான பாவாடைகளும் உள்ளது.

முழங்கால் அளவுள்ள பாவாடைகள்
இந்த பாவாடையின் ஸ்பெஷல் என்னவென்றால், தொப்புளுக்கு மேலே போடுமாறான முழங்கால் அளவுள்ள பாவாடை லூசாக இருப்பது தான். மேலும் இந்த பாவாடை அனைத்து பெண்களும் கூச்சப்படாமல் உடுத்துமாறு இருக்கும்.

ஹாட் பேண்ட் மற்றும் முழங்கால் அளவுள்ள ஜாக்கெட்
பிரிண்ட் போட்ட ஹாட் பேண்ட் மற்றும் அதற்கு பொருத்தமான சட்டைக்கு மேலே முழங்கால் அளவில் ஜாக்கெட் அணிவது தான் இதன் ஸ்பெஷல்.

பிரிண்ட்டட் புடவை
கோடையில் உடுத்துவதற்கு ஏற்றவாறு இந்த பிரிண்ட் போட்ட டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்பெஷல், இதற்கான ஜாக்கெட் தான்.

சில்க்
தொடை வரை இருக்கும் இந்த கோட் மாடல் சில்க் உடைக்கு, பிரிண்ட் போட்ட நீளமான ஷீர் ஜாக்கெட் டிசைன் செய்திருப்பது, இந்த உடைக்கு ஹை லைட்டாக உள்ளது.

கருப்பு புடவை மற்றும் சாம்பல் நிற ஜாக்கெட்
அகாரோ கலெக்ஷன்களில் வித்தியாசமான ஒரு புடவை தான் இது. இந்த கருப்பு நிற புடவைக்கு இடுப்பளவுள்ள ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டிருப்பது சூப்பராக உள்ளது.

சைடு ஹெம் ப்ரில் ஆடை
அகாரோ கலெக்ஷன்களில் கருப்பு நிற உடை கூட அதிகம் உள்ளது. இந்த ப்ரில் ஆடையின் ஸ்பெஷல் ஒரு பக்கத்தின் பக்கவாட்டில் மட்டும் நீளமாக இருப்பதாகும்.

ஷீர் குர்தா மற்றும் பிரிண்டட் ஜாக்கெட்
இது சாதாரண சாம்பல் நிற ஷீர் குர்தாவிற்கு, முழு கையுள்ள பிரிண்ட்டட் ஜாக்கெட் கொண்டது.

சில்க் பாலஷோ பேண்ட்
இது பார்ப்பதற்கு பாவாடை போன்று இருந்தாலும், உண்மையில் இது பேண்ட். இது கோடையில் அணிவதற்கு அருமையாக இருக்கும். ஏனெனில் அந்த அளவில் இது லூசாக இருக்கும்.

குட்டையான டாப்ஸ்
இது கூட பாலஷோ பேண்ட் தான். இந்த உடைக்கு ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ் உடன், அதற்கு மேலே இடுப்பளவுள்ள கருப்பு நிற ஜாக்கெட் அணிந்திருப்பது நல்ல லுக்கை தருகிறது.



Click it and Unblock the Notifications
