Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
வில்ஸ் ஃபேஷன் வீக்கில் வெளிவந்த லேட்டஸ்ட் டாப்ஸ்!!!
வில்ஸ் ஃபேஷன் வீக்கின் மூன்றாவது நாளில், ருச்சிகா சச்தேவ் பல்வேறு ஸ்டைலான டாப்ஸ்களை வெளியிட்டார். மேலும் சில பேண்ட்களையும் டிசைன் செய்து வெளியிட்டார். இவை அனைத்தும் கோடைகாலத்தில் அணியக்கூடியவாறு இருக்கும். அதுமட்டுமின்றி, அவர் டிசைன் செய்த ஆடைகள் அனைத்தும் வெளிர் நிறங்களைக் கொண்டவை. மேலும் இவர் கண்ணாடி, பர்ஸ் போன்ற ஒருசில பெண்கள் பயன்படுத்தும் பொருட்களையும் வெளியிட்டார்.
இங்கு வில்ஸ் ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த ருச்சிகா சச்தேவ் என்னும் டிசைனர் வடிவமைத்த லேட்டஸ்ட் டாப்ஸ் உங்கள் பார்வைக்காக...
ருச்சிகா சச்தேவ் என்னும் டிசைனரின் ஆடைகள்!!!

கட்டம் போட்டது
இது சச்தேவ் வடிவடிமைத்த கட்டம் போட்ட முழங்கால் அளவுள்ள கவுன். இந்த கவுனில் இவர் நீல நிறத்தை பயன்படுத்தியுள்ளார். இது கோடையில் உடுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.

காலர் குர்தா
இது தான் சச்தேவ்வின் சட்டை போன்ற தோற்றமுடைய முழங்கால் அளவுள்ள காலர் கொண்ட குர்தா.

சாம்பல் நிற டாப்ஸ்
இது சாம்பல் நிற மிகவும் லூசான ஷீர் டாப்ஸ்.

வெள்ளை நிற ஜாக்கெட்
இது வெள்ளை நிற வட்டமான கழுத்து கொண்ட ஜாக்கெட். இதனை எந்த ஒரு உடைக்கும் மேலே அணியலாம்.

கருப்பு நிற பை
பெண்கள் எப்போதும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான கருப்பு நிற பேக் கூட, ருச்சிகா சச்தேவ்வின் கலெக்ஷன்களில் ஒன்றாகும்.

கட்டம் போட்ட நீல நிற ஜாக்கெட்
சச்தேவ், கட்டம் போட்ட நீல நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை பெண்கள் எந்த உடைக்கு வேண்டுமானாலும் உடுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளார்.

காப்ரி
இந்த படத்தில் உடைக்கு மேலே அணியப்பட்ட ஒரு ஜாக்கெட் போன்றது தான் காப்ரி. இந்த ப்ளைன் நிற காப்ரியானது எந்த உடைக்கு வேண்டுமானாலும் பொருத்தமானதாக இருக்கும்.

க்ராப் டாப் மற்றும் பேண்ட்
இடுப்பிற்கு மேலே போடக்கூடியவாறான ப்ளைன் நிற பேண்ட்டிற்கு மேட்ச்சாக போட்டிருப்பது தான் க்ராப் டாப்.

ரெட்ரோ ஸ்டைல்
இது தான் ரெட்ரோ லுக். இந்த உடையின் ஸ்பெஷல், இடுப்பிற்கு மேலே காலர் வைத்த வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடையும், கீழே கட்டம் போட்ட பாவாடையும் இருப்பது தான்.

ப்ரௌன் பாலஷோ பேண்ட்
இது தான் லைட் ப்ரௌன் நிற பாலஷோ பேண்ட். இது மிகவும் க்யூட்டாக இருப்பதோடு, இதற்கு போடப்பட்டுள்ள வெள்ளை நிற காலர் வைத்த டாப்ஸ் அருமையான தோற்றத்தைக் கொடுக்கிறது.



Click it and Unblock the Notifications
