Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
எப்போதும் போடக் கூடாத டி-சர்ட்கள்!!!
அடிக்கிற வெயிலில் இன்றைய ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி டி-சர்ட் போன்ற இதமான ஆடை எதுவும் இருக்க முடியாது. டி-சர்ட்களில் பல வகை உள்ளது. தேவைக்கேற்ப நமக்கு ஏற்ற டி-சர்ட் வகைகளை வாங்கலாம். அவ்வளவு வகையான டி-சர்ட்கள் சந்தையில் கிடைக்கின்றன. இன்றைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது படங்கள் மற்றும் வாக்கியங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்கள் தான்.
அவ்வாறு விரும்பும் வாக்கியங்கள் அச்சடித்த டி-சர்ட்களை அணிந்தால், அது அணிந்தவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி பலவற்றை கூறும். ஆனால் சில வகைகள், பெரும் தோல்வியாளராக அடையாளம் காட்டும் வகையில் அமையும். ஆகவே டி-சர்ட் அணியும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
நுட்பமான விளம்பரம் அவசியம் தான். அதற்காக கத்தும் போது தொண்டைக் குழியையும் சேர்த்து காட்டுவது என்பது சற்று அதிகமல்லவா? எனவே ஒரு நல்ல மனிதனாக இருக்க, விருப்பங்களை அநாகரீகமாக வெளிப்படுத்த நினைக்கக்கூடாது. என்ன உண்மை தானே?
இப்போது எந்த வகையான டி-சர்ட்களை அறவே தவிர்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

நிறுவனத்தின் பெயர்
அணியும் சில டி-சர்ட்களில் நிறுவனத்தின் முத்திரைப் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு FCUK, UMM அல்லது யூனைடட் கலர் ஆப் பெநேட்டோன் போன்றவைகள். இப்படிப்பட்ட டி-சர்ட்களை அணியும் போது, அது அனைவரின் கண்ணில் தெரியும் படி அமைவதால், பல பேருக்கு அது எரிச்சலை ஏற்படும்.

நடுவிரல் படத்தை கொண்ட டி-சர்ட்கள்
நடுவிரல் வானை நோக்கி காட்டப்படும் படம் மிகவும் அநாகரீகமான அர்த்தத்தை விளக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். பின் அப்படிப்பட்ட படம் அச்சிடப்பட்ட டி-சர்ட்களை எதற்காக அணிந்து பார்ப்பவர்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும். மேலும் இது மனித நேயத்திற்கு எதிரான குற்றமாகும். எனவே இதனையும் அறவே தவிர்க்க வேண்டும்.

குறைபாடுடைய வாக்கியங்கள்
"இந்த ஃபேஷன் 80-களிலே இறந்து விட்டது அல்லவா?", "இவர்கள் இறந்தால் நல்லது, ஆனால் இன்னும் சிலர்..." மற்றும் இன்னும் ஆபாசமாக "நான் நிர்வாணமாக இன்னும் அழகாக இருப்பேன்", "F.B.I பீமேல் பாடி இன்ஸ்பெக்டர்" (பெண்களின் உடம்பை சோதனை செய்பவர்) போன்ற பல வகையான குறைபாடுடைய வாக்கியங்கள் நிறைந்த டி-சர்ட்கள் அணிவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.

முட்டாளுடன் நான் இருக்கிறேன்!
பத்து வருடம் முன்னாள், இந்த வாக்கியம் இருந்த டி-சர்ட்களை முதன் முதலில் அணிந்தவர்களைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். பின்னர் போக போக, அதுவே பழக்கப்பட்டு போனது. இருப்பினும் இதை படிப்பவர்களுக்கு அணிந்தவர் மீதும், அவரது குணத்தின் மீதும் நல்ல எண்ணம் எழாது.

எழுத்துப்பிழை வாக்கியங்கள்
எழுத்துப்பிழை கொண்ட வாக்கியம் அச்சிடப்பட்ட டி-சர்ட்கள், முதல் முறை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால் திரும்ப திரும்ப பார்க்கும் போது எரிச்சல் அடையச் செய்யும்.

மதுபான படங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்கள்
பார்டிகளில் இந்த வகையான டி-சர்ட்களை அணிவது வேடிக்கையாக இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ளலாம். அனால் இவைகளை பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ, அலுவலகத்திற்கோ அல்லது பார்ட்டிகளை தவிர வேறு எங்காவது அணிந்து சென்றால், நம் மீது நல்ல எண்ணத்தை ஏற்படுத்தாது.

போலி தசைகளின் படங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்கள்
அமீர்கான் ரசிகர்களின் மத்தியில் எப்படி ஒரு சல்மான் கான் ரசிகரை அடையாளம் காண்பீர்கள்? சுலபம், அந்த கூட்டத்தில் நல்ல உடல் கட்டமைப்பு உள்ள படம் அச்சடிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்தவரை தேடுங்கள். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அது ஈர்த்தாலும், அருகில் பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் படி இருக்கும்.
ஆகவே இந்த வகையான டி-சர்ட்கள் இருந்தால், தயவு செய்து உடனே அவைகளை முதலில் கொளுத்துங்கள். அப்படிப்பட்ட டி-சர்ட்கள் இருந்ததற்கான அடையாளத்தையே அழித்து விடுங்கள்.



Click it and Unblock the Notifications
