Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பிலிம்பேர் விருது விழாவின் தேதியை அறிவிக்க க்யூட்டாக வந்த தமன்னா!!!
இந்தியாவில் உள்ள அனைத்து பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களும் பெற நினைக்கும் ஒரு விருது தான் பிலிம்பேர் விருது. இந்த பிலிம்பேர் 60-வது விருது விழா, இந்த வருடம் எப்போது நடைபெறப் போகிறது என்பதை செய்தியாளர்கள் மாநாட்டில் தமன்னா அறிவித்தார். தமன்னா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ஹீரோயின். இவர் தற்போது தான் பாலிவுட்டில் நுழைந்தார். நுழைந்த சில நாட்களிலேயே அவரது அழகான தோற்றத்தாலும், ஸ்டைலாலும் அனைவரையும் கவர்ந்துவிடுவதோடு, பிலிம்பேர் விருது விழாவின் தினத்தை அறிவிக்கும் வகையில் புகழ்பெற்றவராகிவிட்டார். ஏற்கனவே கடந்த வருடம் இவர் பிலிம்பேர் விருது விழாவில் நீல நிற கவுனில் வந்தார்.
இது ஒரு பெரிய விருது விழா என்பதால், தமன்னா பிலிம்பேர் விருது விழா நடைப்பெற போகும் நாளை செய்தியாளர் முன் அறிவிக்க வருகை தரும் போது, கரேன் மில்லன் என்பவர் டிசைன் செய்த ஆடையை அணிந்து வந்துள்ளார். இந்த ஆடையில் தமன்னா மிகவும் வசீகரிக்கும் அழகில் காணப்படுகிறார். சாதாரணமாகவே இவர் நல்ல நிறம் என்பதால், இவருக்கு எந்த ஒரு ஆடையும் அழகாகவே தெரிகிறது.
சரி, இப்போது 60-வது பிலிம்பேர் விருது விழாவின் தினத்தை பத்திரிக்கையாளர் முன் அறிவிக்க அழகாக வந்த தமன்னாவைப் பார்ப்போம்.

கரேன் மில்லன்
தமன்னா அணிந்திருக்கும், இந்த எலுமிச்சை பச்சை நிற ட்வீடு ஆடையானது கரேன் மில்லன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

நீல நிற ஹீல்ஸ்
தமன்னா அணிந்துள்ள முட்டி அளவுள்ள எலுமிச்சை பச்சை நிற ஆடைக்கு, நீல நிற ஹீல்ஸை அணிந்து பக்காவாக வந்துள்ளார்.

ஹேர் ஸ்டைல்
இந்த ஆடையில் எப்படி சாதாரணமாக காணப்படுகிறாரோ, அதேப் போல் சாதாரணமாக கொண்டையுடன் கூடிய குதிரைவால் ஹேர் ஸ்டைலில் வந்துள்ளார்.

பளிச்சென்ற மேக்-கப்
தமன்னா பில் போன்ற நிறம் என்பதால், அவருக்கு அதிகமான மேக்-கப் தேவைப்படாது. இருப்பினும் அவர் லைட்டாக, ஜொலிக்கும் வகையில் மேக்-கப் போட்டு, உதட்டுகள் மின்னும் வகையில் லிப்-கிளாஸ் போட்டு வந்துள்ளார்.

நகைகளே இல்லை
பொதுவாக பெண்கள் நகைகள் போடாமல் வெளியே வரமாட்டார்கள். ஆனால் தமன்னா, இந்த மாநாட்டிற்கு நகைகளே அணியாமல் சிம்பிளாக வந்திருக்கிறார்.

நீல நிற கவுன்
கடந்த வருடம் தமன்னா பிலிம்பேர் விருது விழாவில், இந்த நீல நிற ஆடையைத் தான் அணிந்திருந்தார்.

கருப்பு நிற பேக்
சிவப்பு கம்பளத்தில் கடந்த வருடம் நடக்கும் போது, கைகளில் அழகான கருப்பு நிற பையை கொண்டு வந்தார்.

குளறுபடியான கொண்டை
மேலும் அப்போது அந்த நீல நிற ஆடைக்கு, தலையை சீவாமல் இருந்தால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரியான ஒரு குளறுபடியான கொண்டையில் வந்தார்.



Click it and Unblock the Notifications
