Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
லக்ஷ்மி தேவியின் கால் தடங்களின் சிறப்புகள்!!!
நாம் இன்று வாழும் வாழ்க்கை இறைவன் நமக்கு அளித்த உன்னத பரிசாகும். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்கும் நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இதனை நமது இந்து மத பண்டிகைகள் பெரிதும் வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும், நாம் ஒவ்வொரு விதமாக பூஜைகளை செய்து, நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.
இந்து மதத்தில் செல்வ செழிப்பிற்கும், செல்வ வளத்திற்கும் தேவியாக விளங்குபவர் தான் லக்ஷ்மி தேவி. லக்ஷ்மி தேவி நிறைந்திருக்கும் இடத்தில் செல்வ செழிப்பும், அதிர்ஷ்டமும், செல்வ வளமும் தன்னோடு இருப்பதாக கருதுகின்றார்கள். அதனால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் லக்ஷ்மியை வழிபடுகின்றார்கள். வருடத்தின் நாட்கள் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடலாம். ஆனால், லக்ஷ்மி தேவியை சந்தோஷத்துடன் ஒவ்வொரு வருடமும் தீபாவளி, கொஜகிரி லக்ஷ்மி பூஜை என பல்வேறு சமயங்களில் வரவேற்கின்றனர்.
கோலமிடுதல் மற்றும் அல்பனா செய்தல் ஆகியவை பல பண்டிகைகளில் பின்பற்றும் பிரபலமான ஒன்றாகும். லக்ஷ்மி பூஜைகளில் பின்பற்றும் லக்ஷ்மிதேவியின் பாதங்களை வீட்டின் நுழைவாயிலில் வரைவது ஒரு சிறந்த கலாச்சாரம். இந்த பாதங்களை 'ஸ்ரீபாதா' என்று அழைப்பார்கள். இந்த பாதங்களை உள்நோக்கி வரைவதன் மூலம் லக்ஷ்மி நமது வீட்டிற்குள் நுழைந்து நம்முடன் எப்பொழுதும் இருப்பதாக கருதுவார்கள்.

லக்ஷ்மியின் கால்தடங்கள்:
தீபாவளி பண்டிகையின் போது, லக்ஷ்மி தேவியை வரவேற்பதற்காக வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்தல் என்பது முக்கியமான மரபு ஆகும். தாயான லக்ஷ்மி தேவி சுத்தமான இடங்களில் மட்டுமே வசிப்பதாக நம்புகின்றோம்.
மேலும் லக்ஷ்மி பூஜையின் போது, கோல மாவு கொண்டு லக்ஷ்மியின் கால்தடங்களை வரைவார்கள். இதை வீட்டின் நுழைவாயிலில் ஆரம்பித்து, பூஜை வழிபடும் இடம் வரை வரைவார்கள். இதனை பெரும்பாலும் செந்நிறம் மற்றும் வெள்ளை நிறத்தில் வரைவார்கள். ஒரு சிலர் சாக்பீஸ் கொண்டும் ஒரு சிலர் அரிசி மாவிலான பேஸ்ட் கொண்டும் வரைவார்கள்.
சிறப்புகள்:
லக்ஷ்மியின் கால்தடங்கள் அல்லது ஸ்ரீபாதா வரைவதால், லக்ஷ்மி நமது வீட்டில் நுழைவதை குறிக்கின்றது. இதனால் நாம் லக்ஷ்மி பூஜை அன்று வீட்டில் வாசலை திறந்து வைப்பதால், லக்ஷ்மி தேவி எந்த தடங்கலும் இல்லாமல் நமது வீட்டிற்குள் நுழைவாள். இந்த தடங்களை சாயங்கால சந்தியா வேளையில் வரைந்தால் லக்ஷ்மி தேவி நமக்கு பெரும் செல்வச் செழிப்பையும், வளத்தையும் கொடுப்பாள் என்றும் நம்புகின்றனர்.
சில நேரங்களில், நம் வீட்டில் உள்ள பணப்பெட்டிகளிலும், இரும்பு பீரோக்களிலும் லக்ஷ்மியின் கால்தடங்களை வரைவார்கள். இந்த கால்தடங்கள் ஒருவனது வாழ்வில் நிறைவையும், பணக்காரனாகும் வாய்ப்பையும் வழி நடத்துவதாக நம்புகின்றார்கள். அதனால், லக்ஷ்மியின் கால் தடங்களை தீபாவளி, லக்ஷ்மி பூஜை, வரலக்ஷ்மி விரதம் போன்ற சமயங்களில் வரைவது மிகவும் சிறப்பிற்கு உரியது.



Click it and Unblock the Notifications
