Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
முதுமையிலும் ஜொலிக்கும் ரேகாவின் சில ஸ்பெஷல் லுக்...
எவ்வளவு தான் வயதானாலும், இன்றும் இளமை மாறாமல் இருப்பவர் தான் பாலிவுட்டில் கலக்கிய நடிகை ரேகா. இன்று அவரது 58 ஆவது பிறந்தநாள். இவ்வளவு வயதான பின்னரும், நடிகை ரேகாவின் ஸ்டைல் மற்றும் ஆடை அலங்காரத்தில் குறைவு ஏதும் இல்லை என்று சொல்லலாம்.
இந்த அழகு ராணி எப்போதும் எந்த விழாவிற்கும், பெரும்பாலும் புடவையில் தான் வருவார். அதிலும் மேக்-கப் போட்டு தான் வெளியே வருவார். அப்போது அவரைப் பார்த்தால் பொம்மை போன்று தான் இருப்பார்.
சரி, இப்போது ரேகாவின் பிறந்தநாளான இன்று, அவர் விழாக்களில் பங்கு கொள்ளும் போது மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பிங்க் நிற கோல்டன் பியூட்டி
இது ரேகா பில்ம்ஃபேர் விருது விழாவில் பங்கு கொள்ளும் போது, பிங்க் மற்றும் கோல்டன் கலந்த பட்டுப்புடவைக்கு, அதிகப்படியான மேக்-கப் போட்டு வந்திருந்த போது எடுத்தது.

வெள்ளை மற்றும் தங்க நிற புடவை
இது விழா ஒன்றில், வெள்ளை மற்றும் தங்க நிற புடவையில் ரேகா வந்த போது எடுத்த படம்.

பாரம்பரிய தோற்றம்
ரேகா இந்த பட்டுப் புடவையில் மிகவும் அழகாக இளமைத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார் தானே! அதுவும் இது சமீபத்தில் எடுத்த படம்.

அழகான மாம்பழம்
இது சமீபத்தில் நடிகை ரேகா மாம்பழ நிற பட்டுப்புடவையில் வந்த போது எடுத்தது. இதிலும் இவரது அழகிற்கு அளவே இல்லை.

சந்தன நிற புடவை
ரேகாவிடம் தான் அனைவரும் புடவையை கட்டுவதை கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் அந்த அளவில் மிகவும் சூப்பராக புடவையை அணிந்துள்ளார். அதிலும் இந்த சந்தன நிற புடவைக்கு இவர் மேற்கொள்ள ஸ்டைல் சூப்பரோ சூப்பர்.

காஞ்சிபுரப் பட்டு
ரேகா அணிந்திருக்கும் இந்த புடவை எம்பிராய்டரி செய்யப்பட்ட காஞ்சி பட்டுப் புடவையாகும். இவரது ஸ்டைலை பார்த்தால், இவரிடம் பல புடவை கலெக்ஷன்கள் இருக்கும் போல என்று சொல்லாம்.

சுடிதார்
இதுவரை ரேகாவை புடவையில் தான் பார்த்திருப்போம். இது வெள்ளை நிற சுடிதாரில் சல்மான் கானுடன் எடுத்த போட்டோ.

கோல்டன் புடவை
ரேகா இந்த கோல்டன் புடவையில் ராணி போன்று, மிகவும் க்யூட்டாக உள்ளார். இந்த புடவையை இவர் 2013 ஆம் ஆண்டு 58 ஆவது பிலிம்பேர் விருது விழாவிற்கு அணிந்து வந்திருந்தார்.

சிவப்பு மற்றும் வெள்ளை நிற புடவை
இது ரேகா வெள்ளை மற்றும் சிவப்பு நிற புடவையை அணிந்து, விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது எடுத்த படம்.



Click it and Unblock the Notifications
