Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
மார்கெட்டுகளில் கிடைக்கும் தரமான சில அழகுப் பொருட்கள்!!!
இன்றைய காலத்தில் அழகுப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்கேற்றாற் போல் மார்கெட்டில் நிறைய அழகுப் பொருட்களும் வந்துள்ளன. அதிலும் ஓரிஃப்ளேம் (Oriflame), சமாயா (Samaya) மற்றும் அரோமா மேஜிக் (Aroma Magic) போன்ற கம்பெனிகளின் அழகுப் பொருட்கள் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாக உள்ளன. எனவே உங்களுக்கு அழகான, மென்மையான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமென்றால், இந்த கம்பெனிகளின் அழகுப் பொருட்களை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து உங்களுக்கு வேண்டியதை வாங்கி பயன்படுத்தி மகிழுங்கள்.
மேலும் மேலே குறிப்பிட்டுள்ள அழகுப் பொருட்களின் கம்பெனிகள் சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் ஏற்ற சில பொருட்களை தயாரித்து, வெளியிட்டுள்ளன. உதாரணமாக, ஷாம்பு, கண்டிஷனர் போன்றவை. இந்த கம்பெனிகளின் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தினால், அவை, சருமத்திற்கும், கூந்தலுக்கும் எந்த பிரச்சனை வந்தாலும் சரிசெய்துவிடும் அளவு தரமானவையாக உள்ளன. இப்போது அந்த கம்பெனிகளின் அழகுப் பொருட்கள் உங்கள் பார்வைக்காக பட்டியலிட்டுள்ளோம்.

கற்றாழை ஷாம்பு மற்றும் கண்டிஷனர்
சமாயா கம்பெனி, வறட்சியான கூந்தலுக்கும், அதிக பாதிப்படைந்த கூந்தலுக்கும் கற்றாழையால் ஆன ஷாம்பு மற்றும் கண்டிஷனரை வெளியிட்டுள்ளது. இந்த ஷாம்புவை பயன்படுத்தினால், அவை கூந்தலை வலுவடைய வைக்கும். இந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் மூலப்பொருள் கற்றாழை.
விலை:
ஷாம்பு - ரூ.265 (200 ml)
கண்டிஷனர் - ரூ. 295 (200 ml)

சருமத்திற்கான பாடி லோஷன்
ஓரிஃப்ளேம் சருமத்திற்கான பாடி லோஷனை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பாடி லோஷனில் சருமத்திற்கு ஏற்றவாறு லோஷன்கள் தனித்தனியாக உள்ளன. இதனை உடலுக்குப் பயன்படுத்தினால், ஒரு நாள் முழுவதும் சருமத்தை வறட்சியின்றி வைத்துக் கொள்ளலாம்.
விலை:
பாடி லோஷன் - ரூ. 490 (400 ml)

ஃபேஸ் பேக்
சமாயா கம்பெனி கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் காம்பினேஷனில் சருமத்தை அழகாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள சிறந்த ஃபேஸ் பேக்குகளை தயாரித்துள்ளது. இந்த ஃபேஸ் பேக்குகள் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது.
விலை:
ஃபேஸ் பேக் - ரூ. 225 (100 ml)

ஹைப்பர் ஸ்ட்ரெட்ச் மஸ்காரா
ஓரிஃப்ளேம் தயாரித்த அற்புதமான அழகுப் பொருட்களில் கண்களுக்கு தடவ பயன்படுத்தும் ஹைப்பர் ஸ்ட்ரெட்ச் மஸ்காரா சூப்பராக இருக்கும். இதனால் கண் இமைகள் நன்கு வலுவோடும், ஆரோக்கியமாகவும் 4 நாட்களில் வளரும்.
விலை:
ஹைப்பர் ஸ்ட்ரெட்ச் மஸ்காரா - ரூ. 398 (8 ml)

லிட்சி குளியல் சோப்
சமாயா தயாரித்த லிட்சி குளியல் சோப்பு, சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்துவிடும் ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. குறிப்பாக இந்த சோப்பை பனிக்காலத்தில் பயன்படுத்துவது நல்லது.
விலை:
லிட்சி குளியல் சோப் - ரூ. 75

6-இன்-1 ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு ஆறு வழிகளில் நன்மையை அளிக்கிறது. ஏனெனில் இதில் பூமியில் இருந்து கிடைக்கும் பொருட்களையும், நல்ல மணமுள்ள வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தியதால், அதனை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகவும், ஈரப்பசையுடனும் இருக்கும்.
விலை:
ஃபேஸ் பேக் - ரூ. 300 (ஸ்பெஷல் தள்ளுபடி)

பாத பராமரிப்பு பொருள்
ஓரிஃப்ளேம் நிறுவனம், ஃபீட் அப் ரேஞ்ச் என்ற பெயரில் பாதங்களை பராமரிக்க ஒரு க்ரீமை வெளியிட்டுள்ளது. இந்த க்ரீமைப் பயன்படுத்தினால், பாதங்களில் ஏற்படும் வறட்சி, வெடிப்புகள், பாதங்களில் நாற்றம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.



Click it and Unblock the Notifications