Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
புடவை கட்டுவதில் உள்ள சில லேட்டஸ்ட் ட்ரெண்ட்...
இந்தியாவின் பாரம்பரிய உடை தான் புடவை. இத்தகைய புடவையை பல்வேறு ஸ்டைலில் உடுத்தலாம். அதிலும் தற்போது புதுப்புது புடவைகள் வந்திருப்பதோடு, அவற்றை உடுத்தும் ஸ்டைல்களும் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றன. குறிப்பாக புடவைக்கு அணியும் ஜாக்கெட்டின் மாடல்கள் கூட மாறிவிட்டன. இதுவரை ஜன்னல் வைத்த ஜாக்கெட் தான் பிரபலமாக இருந்தது.
ஆனால் தற்போது வரும் ஜாக்கெட்டுகளின் டிசைன்களைப் பார்த்தால், அது ஜாக்கெட் தானா என்று கேட்கும் அளவில் இருக்கும். அதிலும் ஜாக்கெட் டிசைன்கள் மட்டுமின்றி, தற்போது வரும் புடவையின் ஸ்டைல்களும் மாறிவிட்டன.
அக்காலத்தில் எல்லாம் புடவையின் உடல் ஒரு நிறத்திலும், பார்டர் ஒரு நிறத்தில் என்று மட்டும் தான் இருக்கும். ஆனால் தற்போது வரும் புடவைகள் அனைத்தும் பல்வேறு நிறங்கள் கலந்து வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகின்றன. இப்போது அப்படி வித்தியாசமான ஸ்டைலைக் கொண்ட சில புடவைகளின் ஸ்டைல் உங்கள் பார்வைக்காக...

புடவையை சுற்றிக் கொள்வது
இந்த மாடலைப் பார்த்தால், மேல் புறம் புடவையை சாதாரணமாக சுற்றிக் கொண்டது போன்று இருக்கும்.

ஸ்ட்ராப்பி ஜாக்கெட்
இந்த புடவையில் பல்வேறு நிறங்கள் இருப்பதோடு, ஜாக்கெட்டில் புடவையின் முந்தானையை டக் செய்தது போன்று இருக்கும்.

நெட்டட் புடவை
இந்த புடவை நெட் போன்று ஆங்காங்கு சிறிய கற்கள் பதிக்கப்பட்டு இருக்கும்.

ஜாக்கெட்டில் வளையம்
இந்த புடவையை உற்று கவனித்தால், இதன் முந்தானையை ஜாக்கெட்டில் உள்ள வளையத்தில் மாட்டி வைத்தது போன்று இருக்கும். இது தான் தற்போது இருக்கும் ட்ரெண்ட்.

தங்க நிற புடவை
தற்போது தங்க நிற புடவைகள் பிரபலமாக உள்ளது. ஏனெனில் இந்த புடவை ஒரு ஒரு ஹை லுக்கை கொடுக்கும்.

மூன்று வண்ண புடவை
சோனம் கபூர் அணிந்திருக்கும் புடவையின் உடல் வெளிர் பிங்க் நிறத்திலும், முந்தானை ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். அதே சமயம் இந்த புடவையை பளிச்சென்று காண்பிக்கும் வண்ணம், இதன் ஜாக்கெட் பச்சை நிறத்தில் உள்ளது.

இரட்டை நிற புடவை
இந்த வகையான புடவையில் ஒரு பாதி ஒரு நிறத்திலும், மற்றொரு பாதி வேறொரு நிறத்திலும் இருக்கும்.

பெல்ட் கொண்ட புடவை
தற்போது நிறைய புடவைகளுக்கு பெல்ட் வந்துள்ளது. இந்த பெல்ட்டை சாதாரண புடவைக்கு அணிந்தாலும், ஒரு வித்தியாசமான தோற்றத்தைத் தரும்.

இரட்டை முந்தானை
இந்த வகையான புடவையில் இரட்டை முந்தானைகள் இருக்கும்.

ஒற்றை தோள்பட்டை ஜாக்கெட்
இந்த புடவை சாதாரணமாக இருந்தாலும், இதன் தோற்றத்தை அதற்குரிய ஜாக்கெட் மாற்றுகிறது. அதிலும் இந்த புடவைக்கான ஒற்றை தோள்பட்டை கொண்ட ஜாக்கெட் முற்றிலும் வித்தியாசமானவை.

பேண்ட் ஸ்டைல் புடவை
பொதுவாக புடவைக்கு பாவாடை அணிந்து தான் புடவையை கட்டுவோம். ஆனால் இந்த புடவைக்கு பேண்ட் அணிவதோடு, இடுப்பில் பெல்ட் கட்ட வேண்டும்.

முந்தானை இல்லாத புடவை
பொதுவாக புடவையின் முந்தானையை பின்புறம் தான் விடுவோம். ஆனால் இந்த புடவையின் ஸ்டைலில் முந்தானையை முன்புறமே ஜாக்கெட்டுடன் ஊக்கு வைத்து குத்திக் கொள்ள வேண்டும்.

சோளி வடிவ புடவை
இந்த மாதிரியான புடவையின் ஜாக்கெட் சோளி வடிவத்தில் இருக்கும். இது முழுவதும் விசித்திரமான தோற்றத்தைக் கொடுக்கும்.

வெல்வெட் முந்தானை
இந்த புடவையில் ஸ்பெஷல் என்னவென்றால், இதன் உடல் லேஸ் கொண்டும், முந்தானை வெல்வெட்டிலும் இருக்கும்.

லெக்கின்ஸ் ஸ்டைல் புடவை
இதுவும் பேண்ட் ஸ்டைல் புடவை போன்றது. ஆனால் இதில் லெக்கின்ஸ் அணிந்து புடவையை மேலே சுற்றிக் கொள்ள வேண்டும்.

லேஸ் மற்றும் சாட்டின்
இந்த புடவையில் லேஸ் மற்றும் சாட்டின் சில்க் கலந்து வித்தியாசமானதாக இருக்கும். அதிலும் இந்த புடவையின் உடலில் லேஸூம், முந்தானையில் சாட்டின் சில்க்கும் இருக்கும்.

மும்தாஜ் புடவை
இந்த புடவையின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இதன் முந்தானை ஒரே ஒரு பட்டையை மட்டும் கொண்டிருக்கும்.

கோட்டுடன் கூடிய புடவை
இந்த புடவையின் ஜாக்கெட்டைப் பார்த்தால் கோட் போன்று இருக்கும். இது தான் இதன் ஹைலைட்.

கொக்கிப்பின்னல் லேஸ்
பொதுவாக புடவையில் இந்த மாதிரியான கொக்கிப்பின்னல் வேலைபாடு வராது. ஆனால் இந்த கருப்பு நிற லேஸ் புடவையில் கொக்கிப்பின்னல் இருக்கிறது.

சட்டையுடன் கூடிய புடவை
குளிர்காலத்தில் இந்த மாதிரியான புடவையை அணிந்து கொள்ளலாம். இதில் ஜாக்கெட்டிற்கு பதிலாக முழு நீள கையுடன் கூடிய சட்டையை அணியலாம். இது ஒருவித ஸ்டைலாக இருப்பதோடு, வசதியானதாகவும் இருக்கும்.
இதுல உங்களுக்கு எந்த புடவையோட ஸ்டைல் புடிச்சுருக்கு...?



Click it and Unblock the Notifications
