Latest Updates
-
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
லேக்மி ஃபேஷன் வீக் 2013 இல் ராம்ப் வாக் நடந்த பிரபலங்கள்!!!
அனைவரும் எதிர்பார்த்திருந்த 2013 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக் மும்பையில் கடந்த 23 ஆம் நாள் ஆரம்பமானது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த லேக்மி ஃபேஷன் வீக்கில் பல்வேறு ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது ஆடைகளை வெளிப்படுத்தினார்கள். அதில் மனிஷ் மல்ஹோத்ரா, ஸ்ருதி சஞ்செட்டி, விக்ரம் பாட்னிஸ், அனிதா டாங்ரே, ப்ரியா கத்ரியா பூரி மற்றும் பல ஆடை வடிவமைப்பாளர்கள் விதவிதமான மற்றும் மிகவும் கவர்ச்சியான ஆடைகள் பலவற்றை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் ஒவ்வொரு ஆடை வடிவமைப்பாளரும், தனது ஆடைகளை பிரபலப்படுத்த சில பாலிவுட் பிரபலங்களை அழைத்தனர். அதில் பிரியங்கா சோப்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், நேஹா தூபியா, லாரா தத்தா, கஜோல், கரிஷ்மா கபூர், ஊர்மிளா மடோன்கர், சோனாலி பிந்த்ரே, ஜூஹி சாவ்லா, நர்கிஸ் ஃபேக்ரி, சஞ்சய் கபூர் மற்றும் பல பிரபலங்கள் ஷோ ஸ்டாப்பர்களாக வந்தார்கள்.
இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அனைத்தும் மிகவும் பிரமாதமாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தன. இப்போது 2013 ஆம் ஆண்டு நடந்த லேக்மி ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் நடந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக...

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் மனீஷ் மல்ஹோத்ரா
மிகவும் க்யூட்டான ஜாக்குலின் அணிந்திருந்தும் பிங்க் நிற லெஹெங்கா ஆடையானது மனீஷ் மல்ஹோத்ராவால் டிசைன் செய்யப்பட்டது. இது அவர்கள் இருவரும் மேடையில் போஸ் கொடுத்தப் போது எடுத்தது.

நிம்ரத் கவுர் மற்றும் மனீஷ்
நிம்ரத் அணிந்திருக்கும் இந்த ப்ரௌன் நிற பிரிண்டட் புடவைக்கு மேட்ச்சாக கல் பதித்த கோல்டன் ஜாக்கெட்டை மனீஷ் வடிவமைத்துள்ளார். இது கரன் ஜோஹர் மற்றும் மனீஷ் மல்ஹோத்ரா உடன் நிம்ரத் கொடுத்த போஸ்.

நேஹா தூபியா
நேஹா தூபியா அணிந்திருக்கும் இந்த வெள்ளை நிற சட்டைக்கு, கருப்பு நிற பிளாசோ பேண்ட்டை வடிவமைத்தவர் மனீஷ் மல்ஹோத்ரா.

லாரா தத்தா
கருப்பு நிற முழங்கால் அளவுள்ள லேஸ் கவுனை வடிவமைத்தவரும் மனீஷ் மல்ஹோத்ரா. இந்த ஆடை லாரா தத்தா அணிந்து நடந்தது, அந்த ஆடைக்கு இன்னும் அழகை அதிகரித்தது.

கஜோல் மற்றும் மனீஷ் மல்ஹோத்ரா
மனீஷ் மல்ஹோத்ரா அவரது நெருங்கிய நண்பரான கஜோலை அழைக்க மறக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், கஜோல் அணிந்து நடந்து வந்த கருப்பு நிற ஆடை மிகவும் அழகாக இருந்தது. இது தான் மனீஷ் மற்றும் கஜோல் ராம்ப் நடந்த மேடையில் எடுத்த போட்டோ.

கஜோல், தனிஷா மற்றும் லாரா
இது கஜோல், தனிஷா மற்றும் லாராவுடன், மனீஷ் மல்ஹோத்ரா எடுத்த போட்டோ. இதில் தனிஷா, மனீஷின் நியூட் நிற நெட்டட் புடவையை அணிந்திருந்தார்.

கரிஷ்மா கபூர்
மனீஷ் மல்ஹோத்ராவின் ஆடையில் ஒன்றான வெள்ளை நிற அனார்கலி கவுனில், கரிஷ்மா நடந்து வந்தார். ஆனால் என்ன இந்த ஆடை அவரது முகத்தில் உள்ள பொலிவை மறைத்துவிட்டது.

ஊர்மிளா மடோன்கர்
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ஊர்மிளா ராம்ப் வாக் நடந்தார். எவ்வளவு தான் அவரை பார்க்காவிட்டாலும், அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற ஸ்டாப்லெஸ் கவுன், அவரது அழகை அழகாக வெளிக்காட்டியது. இது தான் ஊர்மிளா மனீஷ் உடன் கொடுத்த போஸ்.

ஷபானா ஆஸ்மி
ஷபானா ஆஸ்மி கூட மனீஷ் மல்ஹோத்ராவின் ஆடையை அணிந்து, ராம்ப் வாக் நடந்தார்.

சஞ்ஜய் கபூர்
அனில் கபூரின் சகோதரரான சஞ்ஜய் கபூர், லேக்மி ஃபேஷன் வீக்கில் மனீர் மல்ஹோத்ராவின் ஆடையை அணிந்து நடந்தார்.

கரண் ஜோஹர்
இயக்குநரான கரண் ஜோஹர், மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த கட்டம் போட்ட ஜாக்கெட் அணிந்து ராம்ப் மேற்கொண்டார்.

யாமி கவுதம்
ரான்னா கில் தனது கலெக்ஷன்களை வெளிப்படுத்த ஷோ ஸ்டாப்பராக பிரபலமான யாமி கவுதமை அழைத்திருந்தார். இது தான் யாமி கவுதம், ரான்னா கில்லின் வெள்ளை நிற மேக்ஸி கவுனை அணிந்து ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.

இஷா கோபிகர்
ஹர்சிதா சி டாஷ்பான்டே, மராட்டிய வீரர் உடையை வெளிக்கொணர்ந்தார். அதில் இஷா கோபிகர் வெள்ளை நிற நீளமான கவுனிற்கு, பட்டு பெல்ட் மற்றும் கையில் வாள் எடுத்துக் கொண்டு வீரமான பாணியில் ராம்ப் வாக் நடந்தார். இது தான் அந்த படம்.

சோனாலி பிந்த்ரே
சோனாலி பிந்த்தே ஹர்சிதாவின் மற்றொரு கலெக்ஷனான மராத்திய ஸ்டைல் மணப்பெண் உடையில் ராம்ப் வாக் நடந்தார். இந்த உடையில் சோனாலி மிகவும் பாரம்பரிய தோற்றத்தில் அழகாக காணப்படுகிறார்.

ஆடை வடிவமைப்பாளர் ஹர்சிதா
இவர் தான் இஷாகோபிகர் மற்றும் சோனாலி பிந்த்ரே அணிந்திருந்த ஆடைகளை வடிவமைத்தவர். இது அவர்கள் இருவருடன் ஹர்சிதா ராம்ப் நடந்த போது எடுத்தது.

ஸ்ருதி உடையில் ஜூஹி சாவ்லா
இது ஸ்ருதி சஞ்செட்டி வடிவமைத்த பிங்க் நிற அனார்கலியில் ஊதா மற்றும் தங்க நிற எம்பிராய்டரி செய்த ஆடையை ஜூஹி சாவ்லா அணிந்து ராம்ப் வாக் நடந்த போது எடுத்த படம்.

அனிதா டாங்ரே உடையில் ஊர்மிளா மடோன்கர்
மனீஷ் மல்ஹோத்ராவுக்காக ராம்ப் வாக் நடந்த ஊர்மிளா, அனிதா டாங்ரேவுக்காக, ஸ்ட்ராப்லெஸ் ஊதா நிற ஆடையில் ராம்ப் வாக் நடந்தார்.

குல் பனாக்
அனிதா வடிவமைத்த கருப்பு நிறத்தில் கோல்டன் பார்டர் கொண்ட புடவையை குல் பனாக் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

ஜூஹி சாவ்லா
இந்த மஞ்சள் நிற அனார்கலி உடையில் ஜூஹி சாவ்லா மிகவும் க்யூட்டாக உள்ளார். இந்த உடையும் அனிதா டாங்ரேவால் தான் வடிவமைக்கப்பட்டது

புரவ் கோஹ்லி
லேக்மி ஃபேஷன் வீக்கில் அனிதா டாங்ரே ஷோ ஸ்டாப்பராக அழைத்த மற்றொரு பிரபலம் தான் புரவ் கோஹ்லி. இந்த ஃபேஷன் வீக்கில், புரவ் கோஹ்லி, கோடு போட்ட பந்த்கலா ஜாக்கெட் சட்டையை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

ஷெஹலா கான் உடையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்
ஷெஹலா கான் என்னும் ஆடை வடிவமைப்பாளர், ஜாக்குலின் பெர்னாண்டஸை ஷோ ஸ்டாப்பராக கொண்டு வந்தார். இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிர் பிங்க் நிற லேஸ் லெஹெங்கா சோளியில் ராம்ப் வாக் நடந்தார். உண்மையில் இந்த உடையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குட்டி தேவதைப் போன்று இருந்தார்.

ஷெஹலா கான்
இவர் தான் ஷெஹலா கான். இது ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் ஷோவின் இறுதியில் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

மஹி கில்
ப்ரியா கட்டாரியா பூரியின் கோல்டன் மற்றும் வெள்ளை நிற மெட்டாலிக் கற்கள் பதித்த மினி ஆடையை மஹி கில் அணிந்து ராம்ப் வாக் நடந்தார். இதில் இவர் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் காணப்படுகிறார்.

ப்ரியா கட்டாரியா பூரி
இவர் தான் மஹி கில்லின் ஆடையை வடிவமைத்த ப்ரியா.

கரிஷ்மா கபூர்
ஆடை வடிவமைப்பாளர் விக்ரம் அவர்களின் ஆடையில் ஒன்றான கோல்டன் நிற லேஸ் கொண்ட கவுனை கரிஷ்மாக கபூர் அணிந்து க்யூட்டாக ராம்ப் வாக் நடந்தார். இதில் இவர் தேவதைப் போன்று அழகாக ஜொலிக்கிறார்.

விக்ரம் பாட்னிஸ்
கரிஷ்மா அணிந்த லேஸ் கொண்ட கோல்டன் கவுனை வடிவமைத்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் விக்ரம். இது கரிஷ்மா மற்றும் விக்ரம் ராம்ப் நடந்த போது எடுத்தது.

நர்கிஸ் ஃபேக்ரி
ஆடை வடிவமைப்பாளர் ரித்து குமார் நர்கிஸ் ஃபேக்ரியை ஷோ ஸ்டாப்பராக கொண்டு வந்தார். இதில் நர்கிஸ், வெள்ளை நிற லேஸ் அனார்கலி கவுனில் மிகவும் அழகாக இருந்தார்.

பிரியங்கா சோப்ரா
பிசோ பிசோ என்பவருக்காக பிரியாங்கா சோப்ரா, அவர் வடிவமைத்த கருப்பு நிற லெதர் பெப்லம் டாப் அணிந்து, கவர்ச்சியான பாணியில் ராம்ப் வாக் நடந்தார்.



Click it and Unblock the Notifications











