Latest Updates
-
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க
கவர்ச்சி புயல் கிம் கர்தஷியான் பிரசவத்திற்கு பின் மேற்கொண்ட சில ஸ்டைல்கள்!!!
அனைத்து பெண்களுக்குமே பிரசவத்திற்கு பின்னரும் நல்ல அழகான கட்டழகைப் பெற ஆசை. இருப்பினும் குழந்தையை பராமரிக்க வேண்டியிருப்பதால், தங்களது உடல் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலை உண்டாகிறது. ஆனால் அப்படி கவலை படுவதை முதலில் அனைத்து தாய்மார்களும் நிறுத்திவிட்டு, பிரசவத்திற்கு பின்னரும் அழகில் சிறிது கவனம் செலுத்தி, சிறிது ஸ்டைலை மாற்ற வேண்டும்.
ஏனெனில் தற்போது ஷில்பா ஷெட்டி முதல் கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியான் வரை, பிரசவத்திற்கு பின்னர் தங்களது ஸ்டைலை மாற்றி கலக்கி கொண்டுள்ளார்கள். ஏன், கேட் மிடில்டன் கூட பிரசவத்திற்கு பின் சரியான ஸ்டைலைப் பின்பற்றி அருமையான தோற்றத்தில் காணப்படுகிறார்.
இப்போது சமீபத்தில் புதிய தாயான கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியான், பிரசவத்திற்கு பின் பல விழாக்களில் இன்னும் இளமையான தோற்றத்திலேயே காட்சியளிக்கிறார். மூன்று மாத பெண் குழந்தையை வைத்துக் கொண்டு, கிம் விழாக்கள் பலவற்றில் மிகவும் ஸ்டைலாகவும், கவர்ச்சி குறையாமலும் காணப்படுகிறார்.
இப்போது பிரசவத்திற்கு பின் கிம் கர்தஷியானின் சில லேட்டஸ்ட் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக....

பச்சை நிற சூட்
இது பிரசவத்திற்கு பின், கிம் கர்தஷியான் பச்சை நிற ஜம்ப்சூட் அணிந்த போது எடுத்தது.

கருப்பு நிற உடை
பிரசவத்திற்கு பின்னரும் கிம்மின் கவர்ச்சி குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவர் சமீபத்தில் இந்த மாதிரியான ஒரு கருப்பு நிற உடையை அணிந்து வந்திருந்தார்.

வெள்ளை நிற லேஸ் ஆடை
கிம், தனது 33 ஆவது பிறந்த நாளன்று, பென்சில் கட் கொண்ட வெள்ளை நிற லேஸ் ஆடையை அணிந்திருந்தார்.

வெள்ளை நிற ஆடை
இது கிம் தர்தஷியான் சமீபத்தில் கென்யேவுடன் விழா ஒன்றில் பங்கு கொள்ளும் போது ஹை நெக் கொண்ட வெள்ளை நிற ஆடை அணிந்த போது எடுத்தது.

ஹாட் பேண்ட்
அமெரிக்காவின் கவர்ச்சி நாயகியான கிம், பிரசவத்திற்கு பின்னர், முன்பிருந்த தோற்றத்தைப் பெற்றுவிட்டார். இது அவர் பிரசவத்திற்கு பின் வெள்ளை நிற டாப் மற்றும் ஹாட் பேண்ட் போட்டு வெளியே வந்த போது எடுத்தது.

முழங்கால் அளவுள்ள பூட்ஸ்
கிம் கர்தஷியானை ஆடையுடன் பார்ப்பது மிகவும் அதிசயம். இது அவர் சுற்றுலாவின் போது முழங்கால் அளவுள்ள பூட்ஸ் அணிந்து, உடலின் சிறு பகுதி கூட வெளியே தெரியாதவாறு வந்த போது எடுத்த படம்.

சாம்பல் நிற வ்ராப் ஆடை
பிரசவத்திற்கு பின்பு கிம் கர்தஷியான் மேற்கொண்ட ஸ்டைல்களிலேயே மிகவும் சிறந்து என்றால், அது சாம்பல் நிற வ்ராப் ஆடை அணிந்து வந்தது தான்.

நீல நிற ஆடை
இது கிம் நீல நிற முழங்கால் அளவிள்ள ஆடைக்கு, கோட் மற்றும் முழங்கால் அளவுள்ள பூட்ஸ் அணிந்த போது எடுத்தது.

ஸ்கின்னி ஜீன்ஸ்
இவ்வளவு பிட்டாக கிம் இருப்பதற்கு, இவர் மேற்கொள்ளும் டயட் தான் காரணம் என்று சொல்ல வேண்டும். அதனால் தான் இவருக்கு கர்ப்பத்திற்கு முன் இருந்த ஸ்கின்னி ஜீன்ஸின் அளவு மாறாமல் இருக்கிறது.

ஷீத் ஆடை
கிம் நியூடு கலர் கொண்ட முழங்கால் அளவுள்ள ஆடைக்கு, பொருத்தமாக ப்ளைன் ஓவர்கோட் போட்டிருப்பது, அவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

டெனிம் சர்ட்
இது பிரசவத்திற்கு பின் கிம் மேற்கொண்ட ஸ்டைலிலேயே சிறந்த ஸ்டைல் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த டெனிம் சர்ட் மற்றும் ஜீன்ஸில், இவர் மிகவும் ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.

க்ரே கார்டிகன்
இது கிம் கர்தஷியானின் மற்றொரு அழகான தோற்றம். இந்த கார்டிகன் உடையில் கிம் சிம்பிளாக காணப்படுகிறார்.

நீல நிற உடை
நீல நிற உடை அணிந்திருந்த இந்த நாள், கிம் கர்தஷியானுக்கு ஒரு ஸ்பெஷலான நாள் என்று சொல்லலாம். ஏனெனில் இது காதலர் கென்யே திருமணம் செய்து கொள்வதாக, அனைவரது முன்னிலையிலும் ஒப்புக் கொண்ட நாள்.



Click it and Unblock the Notifications
