Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜோதிகாவின் லேட்டஸ்ட் ஸ்டைல்கள்!!!
தமிழ் திரையுலகில் குறும்புத்தனமான நடிப்பால், அனைவரது மனதை மட்டுமின்றி, பிரபல நடிகர் சூர்யாவின் மனதையும் கவர்ந்த ஒரு க்யூட்டான நடிகை தான் ஜோதிகா. ஆரம்ப காலத்தில் அமுல் பேபி போல் நன்கு குண்டாக இருந்த ஜோதிகா, அப்போது பலரது மனதில் கனவுக்கன்னியாக இருந்தார். நடிகர் சூர்யாவை காதலித்து வெற்றிகரமாக திருமணம் செய்து கொண்ட பின்னர், நடிக்காமல் இருந்தாலும், இன்றும் மறக்க முடியாத நடிகையாக இருப்பவர் தான் ஜோதிகா.
அத்தகைய ஜோதிகா திருமணத்திற்கு பின்னரும் கூட, மிகவும் அழகாக ஃபிட்டாக உள்ளார். மேலும் அவருக்கு அனைத்து ஆடைகளும் மிகவும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக சுடிதார் மற்றும் புடவையில் மிகவும் அழகாக இருப்பார். திருமணத்திற்கு பின்னரும் கூட, விழாக்களில் சூர்யாவுடன் சேர்ந்து வருவார். அப்போது அவரைக் காணும் போது, அனைவருக்குமே மனதில் ஒருவித சந்தோஷம் இருக்கும்.
அதிலும் இன்று ஜோதிகாவின் பிறந்தநாள். ஆகவே இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் வெளியிடங்களுக்கு செல்லும் போது மேற்கொண்ட சில ஸ்டைகள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற சுடிதார்
ஜோதிகாவின் சிறப்பே அவரது சிரிப்பு தான். பால் போன்ற நிறமுள்ள ஜோதிகா, இந்த வெள்ளை நிற உடையில் படு க்யூட்டாக உள்ளார். அதிலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்ட ஹேர் ஸ்டைல் சூப்பர்.

பச்சை நிற புடவை
ஜோதிகா, பச்சை நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் செம அழகாக உள்ளார் தானே! அதிலும் அந்த புடவைக்கு அவர் போட்டிருக்கும் நெக்லேஸ் மற்றும் கம்மல் அவரை ஸ்டைலாக வெளிக்காட்டுகிறது.

பிங்க் நிற புடவை
பிங்க் நிற புடவையில் ஜோதிகா அழகிய ரோஜா போன்று உள்ளார்.

கருப்பு நிற குர்தா
நல்ல பால் போன்ற நிறம் உள்ளதால், இவருக்கு இந்த கருப்பு நிற உடை மிகவும் பொருத்தமாக உள்ளது. அதுமட்டுமின்றி, இவரது ஹேர் ஸ்டைல் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், அது ப்ரீ ஹேர் தான்.

சந்தன நிற புடவை
ஜோதிகா இந்த சந்தனம் மற்றும் கோல்டன் கலந்த புடவையில் லட்சணமாக உள்ளார். அதிலும் இந்த படத்தை பார்க்கும் போது, சூர்யா கொடுத்து வைத்தவர் என்று தான் சொல்ல வேண்டும்.

கருப்பு மற்றும் பச்சை பார்டர் புடவை
கருப்பு நிற புடவையில் கோல்டன் கோடுகளுடன், பச்சை நிற பார்டர் கொண்ட இந்த உடைக்கு ஜோதிகா மேற்கொண்டிருக்கும் ஸ்டைல் நச்சென்று உள்ளது. மேலும் இதில் இவர் இன்னும் இளமையாகவே உள்ளார்.

வெள்ளை மற்றும் கோல்டன் கலந்த புடவையில் ஜோதிகா
இது பிரசன்னா-ஸ்நேகாவின் திருமண வரவேற்பு விழாவின் போது எடுத்தது.

சிம்பிளான தோற்றம்
ஜோதிகா பிரசன்னா-ஸ்நேகாவின் திருமணத்திற்கு சென்ற போது, அவர் மேற்கொண்ட ஸ்டைல் சிம்பிளாக இருந்தாலும், அழகாக உள்ளது.

சூர்யாவுடன் ஜோதிகா
இது விஜய் விருது விழாவின் போது, ஜோதிகா சூர்யாவுடன் ஜோடியாக போஸ் கொடுத்த போடு எடுத்தது.



Click it and Unblock the Notifications
