Latest Updates
-
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க!
மோனி அகர்வால் கலெக்ஷன்கள்!!!
இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் இரண்டாம் நாளில் மோனி அகர்வாலின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. அதிலும் முத்து, வைரம் மற்றும் தங்கம் என பல விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு பலவாறு நகைகளை டிசைன் செய்து வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஜூவல்லரி வீக்கில் மோனி அகர்வால் நெக்லேஸ், கம்மல், ப்ரேஸ்லெட் போன்றவற்றோடு மட்டும் நிறுத்தவில்லை. சில புதிய படைப்புக்களை உருவாக்கியும் வெளிப்படுத்தியுள்ளது. அதில் இடுப்புக்கு அணியுமாறான கமர்பந்த் என்னும் ஆபரணம் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், முதல் நாளில் எப்படி 5 பிரலங்கள் வந்து அசத்தினார்களோ, அதேப் போன்று மோனி அகர்வாலின் கலெக்ஷன்களை வெளிப்படுத்த மிகவும் பிரபலமான நடிகைகளான காஜல் அகர்வால் மற்றும் டாப்ஸி போன்றோர், நகைகளை அணிந்து அழகாக ராம்ப் வாக் நடந்தனர். ஜூவல்லரி வீக்கில் நடிகைகள் மட்டும் தான் நடப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். இரண்டாம் நாளிலும் ராணா டகுபதி என்னும் நடிகர் மோனி அகர்வாலின் நகை ஒன்றை அணிந்து நடந்தார்.
இப்போது இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த மோனி அகர்வால் கலெக்ஷன்களைப் பார்ப்போமா...

வைரம் மற்றும் ரூபி
இதுவரை எத்தனையோ வைரம் மற்றும் ரூபி இணைப்பில் பல நெக்லெஸ்களைப் பார்த்திருப்போம். இருப்பினும், மோனி அகர்வால் சற்று வித்தியாசமாக முத்து, வைரம் மற்றும் ரூபி கலந்த இடுப்பில் அணியக்கூடிய அழகான கமர்பந்த்தை வெளியிட்டுள்ளனர்.

பல அடுக்குகளைக் கொண்ட முத்து நெக்லேஸ்
இந்த முத்து நெக்லேஸ் பல அடுக்குகளைக் கொண்டு, சற்று ராயல் லுக்கைக் கொடுக்கிறது. மேலும் இந்த நெக்லேஸிற்கு ரூபி டாலர்கள் இருப்பது, இந்த ஆபரணத்திற்கே தனி அழகைக் கொடுக்கிறது.

முத்து கம்மல்
முத்து நெக்லேஸிற்கு மேட்ச்சாக முத்து வைத்த கம்மல் அணிந்திருப்பது, அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது.

வைரம் மற்றும் மரகத நெக்லேஸ்
மோனி அகர்வால் வைர நெக்லேஸின் நடுவில் ஒரே ஒரு மரகதக் கல்லை பதித்து செய்திருப்பது, இந்த நகைக்கே தனி அழகை வெளிப்படுத்துகிறது.

வைர நெக்லேஸ்
இந்த நெக்லேஸில் வெறும் வைரம் மட்டும் இருப்பதோடு, நகையில் முனைகள் சிறு டாலர் போன்ற தொங்கவிட்டிருப்பது, நகைக்கே மிகவும் சூப்பரான தோற்றத்தைக் கொடுக்கிறது.

வைரம் மற்றும் முத்து ஆபரணம்
வைரம் மற்றும் முத்து கலந்த புதுமாடல் நகை வேண்டுமானால், இதை முயற்சி செய்யுங்கள்.

வைரம், முத்து மற்றும் ரூபி நெக்லேஸ்
மோனி அகர்வாலின் கலெக்ஷன்களிலேயே ஜூவல்லரி வீக்கில் வெளிக்காட்டிய நகைகளில் இது மிகவும் வித்தியாசமான ஆபரணமாகும்.

காஜல் அகர்வால்
மோனி அகர்வால் கலெக்ஷன்களில் ஒன்றான வைர நெக்லேஸ் அணிந்து, காஜல் கொடுத்த போஸ் தான் இது.

டாப்ஸி
டாப்ஸி இந்திய பாரம்பரிய உடையில், மோனியின் நகைகளான முத்து நெக்லேஸ், ப்ரேஸ்லெட் மற்றும் முத்து ஹேர்பின் போன்றவற்றை அணிந்து அழகாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

ரானா டகுபதி
மிகவும் அழகான நடிகரான ரானா டகுபதி, மோனி அகர்வாலின் பல அடுக்கு கொண்ட முத்து நெக்லேஸ் அணிந்து க்யூட்டாக நடந்தார்.



Click it and Unblock the Notifications
