டே 3 ஃபேஷன் வீக் 2013: ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் கலெக்ஷன்ஸ்

By Maha

டெல்லியில் நடக்கும் இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளன்று மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் என்னும் இரட்டையர்களின் ஆடைகள் காண்பிக்கப்பட்டது. இவர்கள் இந்த வருட பிரைடல் ஃபேஷன் வீக்கில் பாரம்பரிய மற்றும் நேர்த்தியான திருமணப் பெண்ணுக்குரிய கலெக்ஷன்களை வெளியிடுகின்றனர்.

இதில் பல அழகான அனார்கலி கவுன்கள், லெஹெங்கா புடவைகள் போன்றவை உள்ளன. மேலும் இந்த ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில், ஃபல்குளி மற்றும் ஷேக் பீக்காக்கின் ஆடைகளில் ஒரு நீளமான வெல்வெட் கவுனை அணிந்து, நேஹா தூபியா ராம்ப் வாக் நடக்கிறார்.

சரி, இப்போது இந்திய பிரைடல் ஃபேஷன் வீக் 2013 ஆம் ஆண்டின் மூன்றாவது நாளில் வெளிவந்த ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக்கின் ஆடைகள் உங்கள் பார்வைக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெட்டாலிக் ஓபிஇ பெல்ட்

மெட்டாலிக் ஓபிஇ பெல்ட்

இது ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைத்த ஒரு வகையான கவுன். பொதுவாக இநத் ஆடையில் உள்ள ஓபிஇ பெல்ட் மிகவும் பெரியது மற்றும் மிகவும் பிரபலமானதும் கூட.

ப்ரில் கவுன்

ப்ரில் கவுன்

இந்த ஸ்ட்ராப்லெஸ் பீச் நிற ப்ரில் கவுனின் மேலே தங்க நிற கண்ணாடிகள் பதிக்கப்பட்டு, மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைத்துள்ளனர் வடிவமைப்பாளர்கள்.

ப்ரில் ஜாக்கெட்

ப்ரில் ஜாக்கெட்

இந்த கவுனில் உள்ள பிரமாதமே, கவுனின் மேலே ப்ரில் ஜாக்கெட் இருப்பது தான்.

ஸ்குயின்ட்டு புடவை

ஸ்குயின்ட்டு புடவை

ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் கலெக்ஷனில், இந்த ஸ்குயின்ட்டு புடவையும் மிகவும் க்யூட்டான ஒன்று.

ஏற்ற இறக்கமான ஹெம் அனார்கலி கவுன்

ஏற்ற இறக்கமான ஹெம் அனார்கலி கவுன்

ஏற்கனவே ஏற்ற இறக்கமான சுடிதார்கள் மிகவும் பிரபலமானதாக உள்ளது. அதிலும் அந்த ஏற்ற இறக்க டிசைனில் அனார்கலி கவுன்கள் வந்திருப்பது, அநேகமாக பெரும்பாலானோருக்கு பிடிக்கும். குறிப்பாக இந்த கவுன் மிகவும் சிறந்ததாக இருக்கும்.

லேயர் அனார்கலி கவுன்

லேயர் அனார்கலி கவுன்

இந்த அனார்கலி கவுனில் நெட்டட் துப்பட்டா இருப்பது, வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது.

வெல்வெட் மற்றும் நெட் புடலை

வெல்வெட் மற்றும் நெட் புடலை

தற்போது வெல்வெட் ஆடைகளும் பிரபலமாகிவிட்டது. ஆகவே ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக், வெல்வெட் மற்றும் நெட் உள்ள ஒரு அழகான புடவையை வடிவமைத்துள்ளனர் போலும்.

மீன் உடல் போன்ற லேஸ் கவுன்

மீன் உடல் போன்ற லேஸ் கவுன்

இந்த கவுனின் ஸ்பெஷல் என்னவென்றால், இதன் தோள்பட்டையில் முந்தானை இணைந்திருப்பது தான்.

லெஹெங்கா சேலை கவுன்

லெஹெங்கா சேலை கவுன்

ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் மிகவும் நேர்த்தியாக புடவை மற்றும் கவுனை ஒன்றாக சேர்த்து ஒருவிதமான பாரம்பரிய தோற்றமுடையதான இந்த அழகிய ஆடையை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். அதிலும் சிவப்பு நிறம் கொண்ட இந்த கவுன் மிகவும் சூப்பராக உள்ளது.

மணப்பெண்ணுக்குரிய லெஹெங்கா

மணப்பெண்ணுக்குரிய லெஹெங்கா

இந்த சிவப்பு நிற அதிக எம்பிராய்டரி கொண்ட லெஹெங்கா, கண்ணாடி வேலைபாடுகளுடன், மிகவும் ஆரம்பரமாக காணப்படுகிறது. உண்மையில் இது மணப்பெண்ணுக்கு ஏற்ற ஆடை தான்.

சிவப்பு மற்றும் கோல்டன் லெஹெங்கா புடவை

சிவப்பு மற்றும் கோல்டன் லெஹெங்கா புடவை

தற்போது லெஹெங்கா மிகவும் ட்ரெட்டிங் ஆக உள்ளது. அதனால் தான் அனைத்து ஆடை வடிவமைப்பாளர்களும் லெஹெங்கா மாடலை தவறாமல் மனதில் கொண்டு வடிவமைக்கின்றனர். அந்த வகையில் அந்த சிவப்பு மற்றும் கோல்டன் நிற லெஹெங்கா புடவை குறிப்பிடத்தக்கது.

நேஹா தூபியா

நேஹா தூபியா

மிகவும் பிரபலமான நடிகையான நேஹா தூபியா, ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக்கின் ஆடைகளுள் ஒன்றான நீளமான கருப்பு நிற வெல்வெட் பெப்லம் கவுனை அணிந்து, ராம்ப் வாக் நடந்தார்.

வெள்ளை நிற நெட் புடவை

வெள்ளை நிற நெட் புடவை

இந்திய பிரைடல் ஃபேஷன் வீக்கின் மூன்றாவது நாளில் காண்பிக்கப்பட்ட சிறந்த பாரம்பரிய உடைகளுள் ஒன்று தான், கோல்டன் வேலைபாடுகளுடன் கூடிய வெள்ளை நிற நெட் புடவை. அதிலும் இந்த புடவையில் ஜாக்கெட் மிகவும் ஆரம்பரமாக இருக்கும்.

பழுப்பு நிற தாவணிப் பாவாடை

பழுப்பு நிற தாவணிப் பாவாடை

இந்த தாவணிப் பாவாடையில் கோல்டன் நிற மணிகள் கோர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆடையில் முந்தானையானது நெட் கொண்டது மற்றும் அதன் முனைகளில் நூல் வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

டிசைனர்கள்

டிசைனர்கள்

இவர்கள் தான் மேற்கூறிய அனைத்து ஆடைகளையும் வடிவமைத்த ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக். நடுவில் இருப்பவர் தான் நேஹா தூபியா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion