Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
ஃபேஷன் வீக் 2013-இன் இரண்டாம் நாளில் ஜோஸ்னா திவாரி கலெக்ஷன்!!!
இந்திய பிரைடல் ஃபேஷன் வீக் 2013 ஆம் ஆண்டின் இரண்டாம் நாளில் மிகவும் பிரமாதமான பல ஆடைகளை மாடல்கள் அணிந்து வந்தனர். இந்த ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் ஜோஸ்னா திவாரியின் கலெக்ஷன்கள் பலவற்றைப் பார்க்கலாம். இவர் வடிவமைக்கும் லெஹெங்கா அல்லது புடவைகள் அனைத்தும் வித்தியாசமானதாகவும், மிகவும் ஃபேஷனாகவும் இருக்கும்.
இந்த வருடம் இவர் மிகவும் பிரமாதமான பல கவுன்கள், லெஹெங்கா மற்றும் சோளிக்களை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார். அதிலும் தற்போது பிங்க் மற்றும் நீல நிறங்கள் ட்ரெண்ட் என்பதால், அந்த நிறங்களிலும் பல ஆடைகளை வெளியிட்டுள்ளார். இந்த ஆடைகளைப் பார்த்தால், இந்த வருட பிரைடல் ஃபேஷன் வீக்கில் வெளிவரும் அனைத்து உடைகளையும் விட, இவரது இந்த ஆடைகளே சிறந்ததாக காணப்படும் வகையில் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஜோஸ்னா திவாரியின் உடைகளை, மிகவும் பிரபலமான ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிங்க் நிற பியூஷன் கவுன் அணிந்து ராம்ப் வாக் மேற்கொள்கிறார். சரி, இப்போது பிரைடல் ஃபேஷன் வீக்கில் இரண்டாம் நாளில் வெளிவந்த ஜோஸ்னா திவாரியின் கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

நீல நிற மெர்மெயிடு கவுன்
ஜோஸ்னா திவாரியின் கவுனிலேயே மிகவும் சிறந்த கவுனாக, இந்த நீல நில மெர்மெயிடு கவுன் உள்ளது.

கோபால்ட் நீல உடை
இந்த கோபால்ட் நீல உடையானது முழங்கால் அளவில், எம்பிராய்டரி செய்யப்பட்டது.

ராயல் நீல உடை
இந்த ஸ்லீவ்லெஸ் ராயல் நீல உடையானது, முழங்காலுக்கு மேல் வரை மட்டும் இருக்கும். மேலும் இந்த உடையின் மேலே டிசைன் எதுவும் இல்லாமலும், கீழே எம்பிராய்டரி செய்யப்பட்டும் இருக்கும்.

ஊதா நிற காலணி
இந்த உடையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த உடைக்கு ஊதா நிற ஹீஸ்க் காலணி அணிந்திருப்பது தான்.

சில்க் டாப்ஸ் மற்றும் ட்ரௌசர்
இந்த கோபால்ட் நீல நிற ப்ரில் கொண்ட டாப்ஸிற்கு, கருப்பு நிற ட்ரௌசர் அணிந்திருப்பதும் ஒரு ஃபேஷனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஜோஸ்னா.

ஆரஞ்சு நிற மெர்மெயிடு கவுன்
இந்த ஆரஞ்சு நிற மெர்மெயிடு கவுன், முதலில் நீல நிறத்தில் காண்பிக்கப்பட்டது போன்றது தான். ஒரு வித்தியாசம் நிறம் மட்டும் தான்.

பிங்க் மற்றும் கோல்டன் லெஹெங்கா
இந்த லெஹெங்காவில் நீளமான சோளி உள்ளது. சொல்லப்போனால், இந்த பிங்க் நிற சோளி ஒரு டாப்ஸ் தான். இந்த டாப்ஸில் இடுப்பு வரை இறுக்கமாகவும், அதற்கு பின் ப்ரில் கொண்டும் உள்ளது.

பிங்க் பியூஷன் லெஹெங்கா
இந்த பிங்க் நிற லெஹெங்கா, பாவாடையில் டிசைன் எதுவும் இல்லாமலும், ஸ்லீவ்லெஸ் சோளியும் கொண்டது.

காஃப்தான் டாப் மற்றும் லெஹெங்கா
இந்த ஆரஞ்சு நிற எம்பிராய்டரி லெஹெங்கா பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும். ஏனெனில் இந்த லெஹெங்காவின் டாப்ஸ் ஒற்றை தோள்பட்டைக் கொண்டது.

பெப்லம் சோளி
இந்த ஆரஞ்சு மற்றும் கோல்டன் பியூஷன் லெஹெங்கா, பெப்லம் கவுன் போன்று தான் காணப்படும். ஆனால் என்ன இந்த சோளியின் டாப்ஸ் ஸ்லீவ்லெஸ் மற்றும் முனையில் அதிகப்படியான ப்ரில் கொண்டது.

பிங்க் நிற லெஹெங்கா/சோளி
இந்த பிங்க் நிற உடையானது இடுப்பு வரைக்கும் இறுக்கமாகவும், அதற்கு பின் கவுன் போன்றும் காணப்படும். மேலும் இந்த உடையின் நடுவே நீள்வட்ட வடிவில் ஒரு சிறிய இடைவெளி இருக்கும்.

பேபி பிங்ப் பியூஷன் கவுன்
இதுவும் ஜோஸ்னா திவாரியின் படைப்புக்களில் ஒன்றாகும். இந்த பேபி பிங்க் கவுனின் முன்புறம் கிளித்து விட்டது போன்றும், நீல நிற லெக்கிங்ஸையும் கொண்டது.

பிரகாசமான பிங்க் பியூஷன் கவுன்
இந்த பிங்க் பியூஷன் கவுனை அணிந்திருப்பவர் தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

பிங்க் பியூஷன் கவுனின் பின்புறம்
இது தான் பெர்னாண்டஸ் அணிந்திருந்த பிங்க் பியூஷன் கவுனின் பின்புறம்.

ஜோஸ்னா திவாரி
ஜாக்குலின் பெர்னாண்டஸ் அணிந்திருக்கும் ஆடையை வடிவமைத்தவர் தான் வலது புறத்தில் இருக்கும் ஜோஸ்னா திவாரி.



Click it and Unblock the Notifications
