Latest Updates
-
ஹைதராபாத் ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, அட்டகாசமாக இருக்கும் -
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்திய பிரைடல் ஃபேஷன் வீக் 2013 விழாவின் முதல் நாள்!!!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பிரைடல் ஃபேஷன் வீக் 2013 (India Bridal Fashion Week 2013) ஆரம்பமானது. இந்த ஃபேஷன் ஷோவின் முதல் நாளில் மிகவும் அழகான டிசைன்கள் உள்ள பல ஆடைகளை அணிந்து அழகிகள் ராம்ப் வாக் மேற்கொண்டனர். அதிலும் இந்த ஷோவின் முதல் நாளில் ஜெ.ஜே. வலாயாவின் "தி மஹாராஜா ஆப் மாட்ரிட்" கலெக்ஷன்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி சாந்தனு மற்றும் நிகில் என்னும் இரட்டையர்கள் வடிவமைத்த "டூ டை ஃபார்" கலெக்ஷனும் காண்பிக்கப்பட்டது. இவ்விரண்டு டிசைனர்களும் முகலாய கால ஆடை வடிவமைப்பினை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
சரி, இப்போது அந்த இந்திய பிரைடல் ஃபேஷன் வீக் 2013-இன் முதல் நாளில் காண்பிக்கப்பட்ட ஆடைகள் உங்கள் பார்வைக்காக...

வெல்வெட்
வெல்வெட் லெஹெங்கா, ஏற்ற இறக்க அனார்கலி, ஷார்ட் சுடிதார், சஹாரா, பந்த் காலா ஷெர்வானி போன்ற ஜே.ஜே.வலாயாவின் உடைகளுடன் ஃபேஷன் வீக்கின் முதல் நாள் துவங்கப்பட்டது.

கபீர் பேடி
கபூர் பேடி தான் ஜே.ஜே.வலாயாவின் மஹாராஜா கலெக்ஷன் ஆடைகளை துவக்கி வைத்தார்.

ஷெர்வானி
கபீர் பேடி, தங்க வேலைபாடுகளுடன் கூடிய நீளமான, ஆரம்பரமான, வெல்வெட் ஷெர்வானியை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

கங்கனா ரானாட்
ஜே.ஜே.வலாயாவின் உடைகளை அணிந்து வரும் மற்றொரு மாடல் இவர் தான். கங்கனா தங்க வேலைபாடுகளுடன் கூடிய நீளமான லெஹெங்காவை அணிந்து நடந்தார்.

ஆபணங்கள்
கங்கனா, இந்த நீளமான லெஹெங்காவிற்கு, மரகதம், ரூபி மற்றும் முத்துக்களால் ஆன நகைகள், தலைக்கு ஸ்கார்ப், சிவப்ப நிற வளையல்கள் அணிந்து உடையின் அழகை கூட்டி வெளிப்படுத்தியுள்ளார்.

ஜே.ஜே.வலாயா
கபீர் பேடி மற்றும் கங்கனா ரானாட்டிற்கு நடுவே இருப்பவர் தான், இவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை வடிவமைத்த வடிவமைப்பாளர் ஜே. ஜே. வலாயா.

சாந்தனு மற்றும் நிகில்
சாந்தனு மற்றும் நிகில் இருவரும் சேர்ந்து பல அழகான உடைகளை வடிவமைத்துள்ளனர். இந்த படத்தில் உள்ள மாடல் அழகி அணிந்திருப்பது, ஃபால் வின்டர் 2013 கலெக்ஷன் உடை.

கருப்பு மற்றும் கோல்டன் லெஹெங்கா
சாந்தனு மற்றும் நிகில் தயாரித்த மற்றொரு அழகான மற்றும் ஸ்டைலான ஆடை தான், இந்த கருப்பு மற்றும் கோல்டன் ப்ரில் கொண்ட லெஹங்கா.

சிவப்பு லெஹெங்கா
இந்த சிவப்பு நிற லெஹெங்காவின் கீழ்ப்பகுதி, நூல் வேலைபாடுகளுடன் கூடியது. மேலும் இதன் ஜாக்கெட் காலர் உள்ள கோல்டன் நிற ப்ரில் கொண்டது.

கோல்டன் கவுன்
இந்த கோல்டன் நிற கவுனின் கீழே உள்ள சில்க் ப்ரில்லானது, பூவின் இதழ் போன்று விரிந்து, சற்று ஆரம்பரமான தோற்றத்தைக் கொடுக்கிறது.

சிவப்பு லெஹெங்கா மற்றும் கோல்டன் ஜாக்கெட்
இந்த சிவப்பு நிற லெஹெங்காவிற்கு கோல்டன் நிற ஜாக்கெட் உள்ளது. இதில் உள்ள ஜாக்கெட் இலைகளைப் போன்று இருக்கும்.

வெள்ளை நிற ஜம்ப்சூட்
இது சாந்தனு மற்றும் நிகிலால் வடிவமைக்கப்பட்ட மற்றொரு உடை. இந்த வெள்ளை நிற ஜம்பசூட்டில் ஆங்காங்கு தங்க இலைகள் பரவிக் காணப்படும்.

மஞ்சள் மற்றும் நிலக்கரி கருப்பு லெஹெங்கா
சாந்தனு மற்றும் நிகிலின், டூ டை ஃபார் கலெக்ஷனைக் சேர்ந்தது தான் இந்த லெஹெங்கா.

மஞ்சள் கவுன்
இந்த ஆடையை பார்த்தார் ஒருவகையான உயர்த்த பட்டால் செய்யப்பட்டது போன்று, மேட்சாக மஞ்சள் நிற சில்க் பெல்ட் கொண்ட கவுனாகும்.

சிவப்பு கவுன்
இந்த சிவப்பு நிற கவுன், மேல் பகுதியில் கோல்டன் நூல் வேலைபாடுகளைக் கொண்டுள்ளது. ஆகவே இந்த ஆடையை திருமண வரவேற்பின் போது அணிந்தால் அழகாக இருக்கும்.

மஞ்சள் நிற ஸ்கர்ட் மற்றம் பிரிண்டட் ஜாக்கெட்
இந்த ஆடையும், சாந்தனு மற்றும் நிகில் வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டது தான்.

ஷீர் கோல்டன் கவுன்
மாடல் அழகியால் அணியப்பட்டுள்ள, இந்த ஷீர் கோல்டன் கவுனும் சாந்தனு மற்றும் நிகிலின் வடிவமைப்பே.

கருப்பு மற்றும் கோல்டன் கவுன்
கருப்பு கவுனின் மேல் பகுதியில் மிகவும் அதிகமாக சிவப்பு மற்றும் கோல்டன் நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்டிருப்பதால், இதனை விழாக்களுக்கு அணிந்து சென்றால், சிம்பிளாகவும் அழகாகவும் இருக்கும்.

பந்த் காலா ஷெர்வானி
இது சாந்தனு மற்றும் நிகிலின் 'டூ டை ஃபார்' கலெக்ஷனில் இருந்து, இந்திய பிரைடல் ஃபேஷன் வீக் 2013 இன் முதல் நாள் வெளிவந்தது.



Click it and Unblock the Notifications