Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ப்ளெண்டர்ஸ் பிரைட் ஃபேஷன் டூரில் ஷோஸ்டாப்பராக வந்த இஷா, ஈவ்லின் மற்றும் ஆயுஷ்மான்...
ப்ளெண்டர்ஸ் பிரைட் ஃபேஷன் டூர் 2013 ஆம் ஆண்டின் முதல் நாள் ஆரம்பமாகிவிட்டது. பெங்களூரில் நடக்கும் இந்த ஃபேஷன் டூரின் முதல் நாளில் ஃபல்குனி-ஷேன் பீக்காக் மற்றும் வென்டல் ராட்ரிக்ஸ் என்னும் ஃபேஷன் டிசைனர்களது ஆடைகள் வெளிவந்தன. மேரும் இந்த ஃபேஷன் டூரில் பாலிவுட் ராணியான இஷா குப்தா, ஃபல்குனி-ஷேன் பீக்காக் என்னும் டிசைனர் வடிவமைத்த ஆடையில் ராம்ப் வாக் நடந்தார். அதுமட்டுமல்லாமல், ஈவ்லின் ஷர்மா, ஆயுஷ்மான் போன்ற பிரபலங்களும் ஷோ ஸ்டாப்பராக வந்திருந்தனர். மேலும் பலவண்ண உடைகளில் மாடல்கள் ராம்ப் வாக் நடந்தனர்.
அதுமட்டுமின்றி, இந்த ப்ளெண்டர்ஸ் பிரைட் ஃபேஷன் டூரில் வென்டல் ராட்ரிக்ஸ் என்னும் சிறந்த டிசைனரும் மிகவும் நேர்த்தியான பல்வேறு ஆடைகளை வெளியிட்டார். இப்போது அந்த ப்ளெண்டர்ஸ் பிரைட் ஃபேஷன் டூரின் முதல் நாளில் கலக்கலாக வெளிவந்த டிசைனர்களின் உடைகள் உங்கள் பார்வைக்காக...

இஷா குப்தா: ஷோ ஸ்டாப்பர்
நடிகை இஷா குப்தா ப்ளெண்டர்ஸ் பிரைட் ஃபேஷன் டூரில், ஃபல்குனி-ஷேன் பீக்காக் வடிவமைத்த ப்ரில் கொண்ட கருப்பு நிற உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

ஈவ்லின் ஷர்மா
நடிகை ஈவ்லின் ஷர்மா அதிக கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட, கழுத்தில் ப்ரில் கொண்ட ஷீர் உடையில் ராம்ப் வாக் நடந்தார்.

நீல நிற பூப்போட்ட கவுன்
இந்த நீல நிற பூப்போட்ட கவுன் சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், நன்றாக உள்ளது.

மினி ட்ரஸ்
இந்த சில்க் மினி ட்ரஸ் பார்ப்பதற்கு க்யூட்டாக உள்ளது.

கோடு மற்றும் பூப்போட்ட சில்க் கவுன்
இந்த உடையில் இரண்டு பேட்டர்ன்கள் உள்ளன. அது கோடு மற்றும் பூ டிசைன் கலந்திருப்பது தான். இது வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கிறது.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
இந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் வெள்ளை மற்றும் சாம்பல் கலந்து, கீழே வித்தியாசமான கட் கொண்டு உள்ளது.

ப்ளாரல் பேண்ட்
இது தான் ப்ளெண்டர்ஸ் பிரைட் ஃபேஷன் டூரில் வெளிவந்த ப்ளாரல் பேண்ட் மற்றும் டாப். இதுவரை பார்த்த உடைகள் அனைத்தும் ஃபல்குனி-ஷேன் பீக்காக் என்னும் டிசைனர் வடிவமைத்தது. இனி பார்க்கப்போவது டிசைனர் வென்டல் ராட்ரிக்ஸ் வடிவமைத்த ஆடைகள்.

ஆயுஷ்மான்: ஷோ ஸ்டாப்பர்
நடிகர் ஆயுஷ்மான் கடல் பச்சை நிற ட்ரான்ஸ்பரண்ட் குர்தா மற்றும் கருப்பு நிற ஃபார்மல் பேண்ட்டில் வித்தியாசமான தோற்றத்தில் ராம்ப் வாக் நடந்தார்.

பிங்க் நிற உடை
படத்தில் உள்ள மாடல் அணிந்துள்ள ஒற்றை தோள்பட்டைக் கொண்ட பிங்க் நிற ப்ரில் உடை மிகவும் அழகாக உள்ளது.

பிங்க் நிற மினி ட்ரஸ்
இந்த பிங்க் நிற மினி ட்ரஸின் ஸ்பெஷல் என்னவென்றால், அதற்கு உள்ள பெல்ட் தான்.

எலுமிச்சை பச்சை நிற ஆடை
இது ப்ளெண்டர்ஸ் பிரைட் ஃபேஷன் டூரில் வெளிவந்த எலுமிச்சை பச்சை நிற நென்லைன் கவுன்.

சாக்லெட் நிற ஆடை
இந்த சாக்லெட் நிற ஆடையின் ஸ்பெஷாலிட்டி என்றால், அதற்கு உள்ள ஷீர் கை தான்.

ஸ்ட்ராப்லெஸ் பிங்க் நிற ஆடை
ஏற்கனவே இந்த மாதிரியான ஆடையை பார்த்தோம். ஆனால் இநத் ஆடையில் பச்சை நிற பெல்ட்டானது பார்டர் போன்று உள்ளது.

பச்சை நிற ஷீர் ஆடை
இந்த பச்சை நிற ஷீர் ஆடை பார்ப்பதற்கு பேய் போன்று ஆடை வென்டல் ராட்ரிக்ஸ் என்னும் டிசைனர் வடிவமைத்தது தான்.

டிசைனர் வென்டல் ராட்ரிக்ஸ்
இது டிசைனர் வென்டல் ராட்ரிக்ஸ் கருப்பு நிற சூட்டில் மாடல்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
