Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
அர்பிதா மெஹ்தா வடிவமைத்த ஆடைகளில் கலக்கிய சில பிரபலங்கள்!!!
பாலிவுட் பிரபலங்களுக்கிடையே பிரபலமானவர் தான் அர்பிதா மெஹ்தா. இவர் ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளர். அதிலும் கண்ணாடி வேலைபாடுகளுடன் கூடிய ஆடைகளை வடிவமைப்பதில் மிகவும் சிறந்தவர். தற்போது இவரது ஆடைகளை இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் அணிந்து, பல விழாக்களில் கலந்து கலக்கி வருகின்றனர். அதிலும் பாலிவுட்டில் 'ஸ்ருதி ஹாசன்' நடித்து வெளிவரப் போகிற 'ராமையா வஸ்தாவய்யா' படத்தை விளம்பரப்படுத்துவதற்கு, அர்பிதா மெஹ்தாவின் பல உடைகளைத் தான் அணிந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஸ்ருதிஹாசனைத் தவிர வேறு சில பிரபலமான நடிகைகளும், இவரது ஆடைகளை அணிந்து தான் கலக்குகின்றனர். இப்போது அர்பிதா மெஹ்தாவின் ஆடைகளை அணிந்து கலக்கிய பிரபலங்களின் படங்களைப் பார்ப்போம்.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன், தனது ராமையா வஸ்தாவய்யா படத்தின் பிரஸ் விழாவில் கலந்து கொள்ளும் போது, கண்ணாடி வேலைபாடுகளுடன் கூடிய வெள்ளை நிற அனார்கலியை அணிந்தார்.

எலுமிச்சை பச்சையில் தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் அர்பிதா வடிவமைத்த எலுமிச்சை பச்சை நிறம் கொண்ட நெட்டட் சேலைக்கு, கண்ணாடி வேலைபாடுகளுடன் கூடிய ஜாக்கெட் அணிந்து சூப்பராக காணப்படுகிறார்.

சிவப்பு அனார்கலியில் தீபிகா
தீபிகா அணிந்துள்ள இந்த சிவப்பு நிற அனார்கலி கூட, அர்பிதா வடிவமைத்தது தான்.

மாதுரி தீட்சித்
மாதுரி தீட்சித் அணிந்திருக்கும் கண்ணாடி வேலைபாடுகளுடன் கூடிய பச்சை, வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற புடவையானது, அர்பிதா வடிவமைத்த ஆடைகளிலேயே மிகவும் சூப்பரானது.

மேக்ஸி உடையில் ஸ்ருதி
ஸ்ருதி அணிந்துள்ள கண்ணாடி பதித்த பீச் நிற ஸ்லீவ்லெஸ் மேக்ஸி கவுன் அர்பிதா வடிவமைத்தது தான்.

ஷில்பா ஷெட்டி
ஷில்பாவின், இந்த பிங்க் நிற கருப்பு கண்ணாடி வேலைபாடுகளுடன் கூடிய புடவையும் அர்பிதாவுடையது தான்.

ஜூஹி சாவ்லா
கோடையில் வந்த அனார்கலிகளில் ஜூஹி சாவ்லா அணிந்திருக்கும் அனார்கலி கூட அர்பிதா மெஹ்தா வடிவமைத்தது தான்.

லெஹெங்காவில் ஜூஹி
ஜூஹி சாவ்லா அணிந்திருக்கும், இந்த தங்க நிற கண்ணாடி வேலைபாடுகளுடன் கூடிய லெஹெங்காவும் அர்பிதா வடிவமைத்த ஆடைகளுள் ஒன்றாகும்.

கருப்பு நிற புடவையில் மாதுரி
மாதுரியின் இந்த கருப்பு நிற புடவைக்கு, பலவண்ண கண்ணாடி வேலைபாடுகள் நிறைந்த ஜாக்கெட் கூட அர்பிதாவின் வடிவமைப்பே.

குர்தாவில் ஸ்ருதி
ஸ்ருதியின் அழகான கண்ணாடி வேலைபாடுகளுடன் கூடிய சந்தன நிற குர்தாவும், அர்பிதா வடிவமைத்த ஆடைகளுள் ஒன்றே.



Click it and Unblock the Notifications
