Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
சிமா விழாவின் இரண்டாம் நாளில் கலக்கலாக வந்த நடிகைகள்!!!
துபாயில் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச விருது விழாவின் இரண்டாம் நாளில், விருதுகளைப் பெறுவதற்கு பல நடிகர் நடிகைகள் வந்திருந்தனர். இந்த விழா விருது விழா என்று சொல்வதை விட, ஒரு க்ளாமர் நிறைந்த ஃபேஷன் விழா என்றும் சொல்லலாம். மேலும் இந்த விழாவில் பிரபலங்கள் பல நாட்களுக்கு பிறகு ஒன்று சேர்வதால், பல பிரபலங்கள் மிகவும் அழகாக வருவார்கள்.
தற்போது தென்னிந்திய திரையுலகில் பல கனவுக்கன்னிகள் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் இந்த சிமா விருது விழாவிற்கு பல அழகான மற்றும் கவர்ச்சி நிறைந்த ஆடைகளில் வந்து கலக்கியுள்ளனர்.
இப்போது சிமா விருது விழாவின் இரண்டாம் நாளில் கலக்காக வந்திருந்த நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

ஸ்ரேயா சரண்
ஸ்ரேயா சிமா விருது விழாவின் இரண்டாம் நாளில் பாரம்பரிய உடையான புடவையில் வந்திருந்தார். அதிலும் சில்வர் வேலைபாடுகள் செய்யப்பட்ட சில்க் புடவைக்கு, மிகுந்த சில்வர் நூலால் வேலைபாடுகள் செய்யப்பட்ட ஷீர் ஜாக்கெட் அணிந்து, கவர்ச்சி கன்னியாக வந்திருந்தார்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதி எப்பவுமே இப்படிதானா என்று தெரியவில்லை. பல விழாக்களுக்கு ஒரே மாதிரியான உடையிலேயே வருகிறார். அதிலும் கருப்பு நிற உடையில் தான் பெரும்பாலும் கலந்து கொள்கிறார். அந்த வகையில் சிமா விழாவின் முதல் நாளிலும் கருப்பு கலந்த உடை, இரண்டாம் நாளிலும் கருப்பு கலந்த உடையில் வந்துள்ளார். பரவாயில்லை, இந்த உடையில் அழகாகத் தான் உள்ளார்.

அமலா பால்
கேரளா குட்டியான அமலா பால் சிமா விழாவின் இரண்டாம் நாளில் நீல நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

ப்ரியாமணி
சிமா விழாவின் முதல் நாளில் கருப்பு நிற கவுனில் வந்த ப்ரியாமணி, இரண்டாம் நாளில் கண்களை பறிக்கும் கிளிப்பச்சை கலந்த பஞ்சு மிட்டாய் கலர் புடவையில் வந்திருந்தார்.

லட்சுமி ராய்
நடிகை லட்சுமி ராய் மொசுமொசுவென இருக்கும் வெள்ளை நிற ஸ்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார். உண்மையில் லட்சுமி ராய் மார்டன் தேவதைப் போல் உள்ளார்.

காஜல் அகர்வால்
சிமா விழாவின் முதல் நாளில் படு கேவலமான ஹேர் ஸ்டைலில் வந்த காஜல் இரண்டாம் நாளில், ஒற்றை தோள்பட்டைக் கொண்ட கோல்டன் நிற கவுனில் வந்திருந்தார்.

த்ரிஷா
க்யூட் என்றால் த்ரிஷா என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அளவில் அவர் அழகான சிவப்பு நிற சுடிதாரில் வந்திருந்தார்.

ஹன்சிகா
அமுல் பேபி என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா, சிமா விழாவின் இரண்டாம் நாளில் பிங்க் மற்றும் மஞ்சள் கலந்த நீளமான அனார்கலி உடையில் வந்திருந்தார்.

ஜனனி ஐயர்
சிமா விழாவின் முதன் நாளில் நீல நிற புடவையில் வந்த ஜனனி ஐயர், இரண்டாம் நாளில் வெள்ளை நிற சைடு டீப் கட் ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

இலியானா
நண்பன் படம் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான இலியானா, கருப்பு நிற உடையில் கோல்டன் நிற நூலால் வேலைபாடுகள் செய்யப்பட்ட உடையில் அழகாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
