Latest Updates
-
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
60வது பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள்!!!
தென்னிந்திய திரைப்பட விருது விழாவில் மிகவும் பிரபலமானது தான் பிலிம்பேர் விருது விழா. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விழாவில் பல நட்சத்திரங்கள் பங்கு கொள்வார்கள். மேலும் நடிகர், நடிகைகள் அனைவரும் ஒன்றாக சந்திப்பதால், பலர் மிகவும் அழகான உடைகளில் வருவார்கள். இந்த விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் பல நடிகர் நடிகைகள், மிகவும் பிரபலமான சில ஃபேஷன் டிசைனர்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து வந்துள்ளனர்.
மேலும் இந்த விழாவிற்கு நதியா, குஷ்பு போன்ற தமிழில் மிகவும் பிரபலமான நடிகைகளும், பூமிகா, ஐஸ்வர்யா தனுஷ், சார்மி, பிரியாமணி, ஸ்ருதி ஹாசன் போன்ற நடிகைகளும் அழகான உடையில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பிலிம்பேர் விருது விழாவில் தனுஷ் சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார்.
சரி, இப்போது 60வது தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவில் பங்கு பெற்ற நடிகர் நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக....

பிரியாமணி
'பருத்திவீரன்' என்னும் தமிழ் படத்தில் மிகவும் பிரபலமான பிரியாமணி, கருப்பு மற்றும் பப்பிள்கம் பிங்க் நிற புடவையில் கலக்கலாக வந்து, சிறந்த கன்னட நடிகைக்கான விருதினை வாங்கினார்.

பூமிகா சாவ்லா
பூமிகா, சப்யசாச்சி (Sabyasachi) வடிவமைத்த கருப்பு நிற ஆடையில், மிகவும் அழகாக வந்து, பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்டார்.

சார்மி கவுர்
சார்மி, பிலிம்பேர் விருது விழாவில் கருப்பு நிற ஒற்றை தோள்பட்டை கொண்ட ஸ்லீவ் கவுன் அணிந்து அசத்தலாக வந்துள்ளார்.

ரெஜினா கஸ்ஸாண்ட்ரா
ரெஜினா, இந்த விருது விழாவில் பச்சை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்தார்.

சஞ்சனா
கன்னட நடிகையான சஞ்சனா, பச்சை, பிங்க், நீலம் என பலவண்ணம் கலந்த சோளியை அணிந்து, பிலிம்பேர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடந்தார்.

மீனாட்சி திட்சித்
பிலிம்பேர் விருது விழாவில் மீனாட்சி தீட்சித், கோபால்ட் நீலம் மற்றும் வெள்ளை கலந்த நெட்டர் புடவையில் செம அழகாக வந்திருந்தார்.

ஸ்ருதி ஹாசன்
கமல் மகளான ஸ்ருதி ஹாசன் ஸ்ட்ராப்லெஸ், டீப் கட் மெட்டாலிக் கவுன் அணிந்து விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார்.

ஜ்வாலா குட்டா
பூப்பந்து வீராங்கனையாக இருந்து நடிகையான ஜ்வாலா, பிலிம்பேர் விருது விழாவின் போது நீளமான வெள்ளை நிற ஸ்கர்ட் மற்றும் ஃபுல் ஸ்லீவ் டாப் அணிந்து, சிம்பிளாக வந்திருந்தார்.

குஷ்பு
தமிழில் மிகவும் பிரபலமான நடிகையான குஷ்பு, பிலிம்பேர் விருது விழாவிற்கு சந்தன நிற புடவையில், ப்ரீ ஹேர் விட்டு இளமை மாறாத அழகுடன் வந்திருந்தார்.

நிக்கிதா நாராயண்
நிக்கிதா நாராயண், நீளமான மற்றும் அதிக வேலைபாடுகளுடன் கூடிய ஷீர் நெட் அனார்கலி கவுனில் அனைவரது கண்களையும் கவரும் வண்ணம், அழகாக விருது விழாவிற்கு வந்தார்.

ராகுல் ப்ரீத் சிங்
நடிகை ராகுல் ப்ரீத் சிங், பிலிம்பேர் விழாவிற்கு பிங்க் நிற ஒற்றை தோள்பட்டை கொண்ட ஸ்லீவ் கவுனை அணிந்து க்யூட்டாக வந்தார்.

நதியா
நதியா, தான் இன்னும் இளமையுடன் தான் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தும் விதமாக, அழகான நீலம் மற்றும் சிவப்பு கலந்த ஸ்லீவ்லெஸ் சோளியில் கலந்து கொண்டார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா
சிறந்த நடிகர் என்னும் விருதை வாங்கிய தனுஷ், கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி அவரது மனைவியான ஐஸ்வர்யாவும், கருப்பு நிற ஷீர் ஸ்லீவ் அனார்கலியை அணிந்து, பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்டார்.

நாகார்ஜூன்
தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகரான நாகார்ஜூன் என்றும் இளமை மாறாத தோற்றத்தில் வெள்ளை நிற சட்டைக்கு, அடர் நீலமுள்ள கோட் அணிந்து செம ஸ்டைலாக வந்திருந்தார்.

தேவிஸ்ரீ பிரசாத்
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை இல்லாத மேடைகளை தற்போது காணவே முடியாது. அந்த அளவில் அவர் மேடைக்கு வந்தால், மேடையையே அமர்களம் செய்துவிடுவார். இத்தகையவர் தெலுங்கில் சிறந்த இசையை அமைத்தவர் என்ற விருதை பெற, நீல நிற ஜீன்ஸூக்கு, கருப்பு நிற கோட் அணிந்து வந்திருந்தார்.

சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கில் சிறந்த நடிகை என்னும் விருதை தட்டிச் சென்ற நடிகை சமந்தா, அடர் நீல நிற ஸ்லீவ்லெஸ் நெட்டட் கவுன் அணிந்து, அதற்கு அழகான கொண்டை போட்டு, விழாவில் கலந்து கொண்டார்.

ராம் சரண்
தெலுங்கு நடிகரான ராம் சரண், கருப்பு நிற கோட் சூட் அணிந்து, செம க்யூட்டாக பிலிம்பேர் விழாவிற்கு வந்திருந்தார்.

தமன்னா
தமன்னாவின் நிறத்திற்கு எந்த ஒரு ஆடையும் சூப்பராக இருக்கும். அந்த வகையில் அவர் ஒற்றை தோள்பட்டை கொண்ட சிவப்பு நிற கவுன் அணிந்து, பிலிம்பேர் விழாவின் சிவப்பு நிற கம்பளத்தில் நடந்து வந்தார்.

விஜய் ஜேசுதாஸ்
இனிமையான குரலால் தென்னிந்திய மக்களின் மனதில் இருக்கும் பாடர்களில் முக்கியமானவர் தான் விஜய் ஜேசுதாஸ். இவர் இந்த விழாவிற்கு அவரது மனைவியுடன் வந்திருந்தார். குறிப்பாக இவர் நீலம் மற்றும் கருப்பு கலந்த கோட் சூட்டையும், இவரது மனைவி நீலம் மற்றும் சந்தனம் கலந்த புடவையை அணிந்து வந்திருந்தனர்.

சுனைனா
நடிகை சுனைனா, பிங்க், கிளிப்பச்சை மற்றும் வெள்ளை கலந்த பாவாடை தாவணியை அணிந்து கலந்து கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த சட்டைக்கு, கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து சிம்பிளாக வந்தார்.



Click it and Unblock the Notifications