Latest Updates
-
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா?
முழங்கால் வரை ஆண்ட்ரியா.. முழுக் 'கோட்'டில் ஜீவா!
சமீபத்தில் சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடந்த 'என்றென்றும் புன்னகை' என்னும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு பிரபலங்கள் மிகவும் அழகாகவும், சிம்பிளாகவும் வந்திருந்தனர். அதில் நடிகை த்ரிஷா, ஆண்ட்ரியா மற்றும் நடிகர்களில் ஜீவா, கிரிஷ், நடிகர் பார்த்திபன், வினய், உதயநிதி ஸ்டாலின் போன்றோர் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி, பத்மஸ்ரீ கமலஹாசன் தான், இந்த படத்தின் இசையை வெளியிட்டார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகை த்ரிஷா, மிகவும் அழகான வெள்ளை நிற ஷீர் ஆடையில் இளமை மாறாமல் மிகவும் க்யூட்டாக இருந்தார்.
அதுமட்டுமின்றி, நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா நீல நிற முழங்கால் அளவுள்ள ஆடையில் வந்திருந்தார். நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்கள் கூட அழகாக வந்திருந்தனர். அதில் நடிகர் ஜீவா வெள்ளை நிற சட்டைக்கு, சந்தன நிற கோட் போட்டு வந்திருந்தார். உலக நாயகனான கமலஹாசன் கூட கருப்பு நிற உடையில் கம்பீரமான தோற்றத்தில் சூப்பராக இருந்தார்.
சரி, இப்போது அந்த 'என்றென்றும் புன்னகை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

த்ரிஷா
த்ரிஷா ஷீர் நெக்லைன் மற்றும் இடுப்பில் ப்ரில் கொண்ட வெள்ளை நிற உடையில் அழகாக வந்திருந்தார்.

ஆண்ட்ரியா
பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா நீல நிற முழங்கால் அளவிள்ள உடையில் வந்திருந்தார்.

கமலஹாசன்
உலக நாயகன் கமலஹாசன் எப்போதுமே அழகு தான். அவருக்கு எவ்வளவு தான் வயதாகியிருந்தாலும், அவரது அழகும், இளமையும் இன்னும் அவரை விட்டு போகவில்லை என்பது இவர் பங்கு கொண்ட இந்த விழாவில் நன்கு தெரிகிறது.

ஜீவா
நடிகர் ஜீவா வெள்ளை நிற சட்டைக்கு சந்தன நிற கோட் போட்டு சிம்பிளாக இருந்தாலும், ஸ்டைலான லுக்கில் வந்திருந்தார்.

வினய்
நடிகர் வினய் லேசான தாடி மற்றும் மீசையுடன், கருப்பு நிற டி-சர்ட் அணிந்து, தலைக்கு ஜெல் தடவி, பார்ப்பதற்கு தூங்கி எழுந்து வந்தவர் போல் இருந்தார்.

கிரிஷ்
பின்னணிப் பாடகரான கிரிஷ், தனது அழகிய ஸ்டைல் மற்றும் மெல்லிய குரலால் பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இந்த விழாவிற்கு வெள்ளை டி-சர்ட் போட்டு, நேவி நீலம் கொண்ட ஸ்டைலான சட்டையை அணிந்து, அழகாக வந்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்
தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

பார்த்திபன்
நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் கூட, இந்த விழாவில் கலந்து கொண்டார்.



Click it and Unblock the Notifications
