Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
2013 ஆஸ்கரில் நடந்த சில சிறந்த தருணங்கள்!!!
உலகில் உள்ள அனைத்து திரையுலகினருக்கும் ஆஸ்கர் ஒரு சிறந்த, மறக்க முடியாத, மகிழ்ச்சி நிறைந்த, ஆச்சரியமூட்டும் ஒரு விருது விழாவாக இருக்கும். ஏனெனில் இது உலகின் சிறந்த கலைஞர் என்பதை வெளிப்படுத்தும் ஒரு விருது. இத்தகைய அகாடமி விருதைப் பெற ஒவ்வொருவரும் மிகவும் கடினமாக உழைத்திருப்பார்கள். அதிலும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் பலர் பல வகைகளில் மிகவும் அழகாக மற்றவர்களை கவரும் வகையில் உடைகளை அணிந்து வந்திருப்பார்கள்.
சொல்லப்போனால், இந்த விருதைப் பெறுவது தான் அனைத்து திரையுலகினரின் கனவாகவும் இருக்கும். ஏனெனில் இது உலகளவில் நடைபெறும் போட்டியாக இருப்பதால், அனைவருக்கும் இது மிகவும் பெரிய விருதாகும். இத்தகைய விழாவில் எதிர்பார்க்காத வகையில் விருதைப் பெறுவோரைப் பார்த்தால், இந்த விருதைப் பெறும் போதே, கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்துவிடும். மேலும் இந்த விருது மேடை, ஒரு பெரிய சொர்க்கம் போன்று இருக்கும்.
இப்போது 2013 ஆஸ்கரில் நடைபெற்ற சில சிறந்த தருணங்கள் உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம். சரி, அதைப் பார்ப்போமா!!!

டேனியல் டே லூயிஸ்
இது டேனியல் டே லூயிஸின் சிறந்த நடிகருக்கான மூன்றாவது ஆஸ்கர் விருது ஆகும். இது 2013 ஆஸ்கரின் ஒரு சிறந்த தருணமாக உள்ளது. இந்த விருதைப் பெறும் போது டேனியல் டே லூயிஸின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஆனி ஹாத்வே
ஆனி ஹாத்வேயின் கனவு நனவாகிவிட்டது. ஏனெனில் 2 வருட கஷ்டத்திற்கு பின், இறுதியில் 2013 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுவிட்டார்.

ஜெனீபர் லாரன்ஸ்
மிகவும் தைரியமாக நடித்து, மிகவும் கூலாக ஆனந்தக் கண்ணீருடன், ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற ஜெனீபர் லாரன்ஸ்!

சிறந்த படம்
2013 ஆஸ்கர் விருதில் சிறந்த படத்திற்கான விருதை அர்கோ (Argo) படம் பெற்றுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த படம் தான் ஆண்டின் சிறந்த படங்களில் பரிந்துரைக்கப்பட்டதில் முதலில் இருந்தது. இந்த படம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை, ஒபாமாவின் மனைவி மிஷெல் அறிவித்தார். இது, அர்கோ படத்தில் நடித்த அனைவரும் விருது வாங்கிய போது எடுத்த போட்டோ.

ஒபாமா மனைவி
இந்த வருட ஆஸ்கரின் சிறப்பு என்னவென்றால், ஆண்டின் சிறந்த படத்தை ஒபாமாவின் மனைவி, ஒயிட் ஹவுஸில் இருந்து அறிவித்தது தான்.

ஆடெல்
கிராமி விருதில் சிறந்த பாடகி என்ற விருதைப் பெற்ற ஆடெல், 2013 ஆஸ்கரிலும் ஆண்டின் சிறந்த பாடகி என்ற விருதைப் பெற்றுள்ளார்.

ஆங் லீ
11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட லைப் ஆப் பை திரைப்படத்தின் இயக்குநர் ஆங் லீ, இறுதியில் ஆண்டின் சிறந்த இயக்குநர் விருதைத் தட்டி சென்றுள்ளார்.



Click it and Unblock the Notifications
