இன்றும் சிக்கென்று இருக்கும் சுஷ்மிதா சென்னின் சில சிறப்பு தோற்றங்கள்!!!

By Maha

முன்னாள் பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் இன்று தனது 38 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நடிகை சுஷ்மிதா சென் பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய ஒரு அழகி என்று சொல்லலாம். இவரது திறமையால் 18 வயதிலேயே பிரபஞ்ச அழகிப் பட்டத்தை 1994 ஆம் ஆண்டு பெற்றார். மேலும் இந்தியாவிலேயே முதல் பிரபஞ்ச அழகி பட்டத்தைப் பெற்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

38 வயதானாலும், நடிகை சுஷ்மிதா சென் இன்றும் இளமைத் ததும்பும் வகையில் தான் காணப்படுகிறார். மேலும் இவர் எப்போதும் சிம்பிளாகவே இருப்பார். சமீப காலமாக இவர் நடிக்காமல் இருந்தாலும், விழாக்கள் பலவற்றில் கலந்து கொண்டு தான் வருகிறார். அதுமட்டுமின்றி, இவருக்கு எந்த ஒரு ஆடையும் பொருத்தமாக இருக்கும்.

இப்போது இவரது பிறந்த நாளான இன்று அவரது சில சமீபத்திய சிறப்புத் தோற்றங்கள் உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற புடவை

சிவப்பு நிற புடவை

இது சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் சுஷ்மிதா சென், லேஸ் மற்றும் ஷீர் கொண்ட சிவப்பு நிற சபயசாச்சி புடவையை அணிந்த வந்த போது எடுத்தது.

கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்

கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்

இது 2012 ஆம் ஆண்டு நடந்த IIJW வில் கலந்து கொள்ளும் போது, கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனை சுஷ்மிதா சென் அணிந்து வந்த போது எடுத்தது.

அடர் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடை

அடர் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடை

சுஷ்மிதா சென், காலர் கொண்ட அடர் நீல டாப் மற்றும் கருப்பு நிற பென்சில் கட் பாவடையில் அழகாக உள்ளார்.

மணப்பெண் தோற்றம்

மணப்பெண் தோற்றம்

அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இந்த லெஹெங்கா உடையில் சுஷ்மிதா சென் மணப்பெண் போன்று அழகாக காட்சியளிக்கிறார். இது 2013 ஆம் ஆண்டு நடந்த IIJW-வில் சாரு ஜூவல்லரிக்காக ஷோ ஸ்டாப்பராக வந்த போது எடுத்தது.

கருப்பு நிற ஷீர் உடை

கருப்பு நிற ஷீர் உடை

சுஷ்மிதா சென் இந்த கருப்பு நிற ஷீர் உடையில் இன்னும் இளமைத் தோற்றத்துடன் காணப்படுகிறார்.

வித்தியாசமான லுக்

வித்தியாசமான லுக்

சுஷ்மிதா சென் உண்மையிலேயே இந்த உடையில் வித்தியாசமாக உள்ளார்.

கருப்பு நிற லேஸ் கவுன்

கருப்பு நிற லேஸ் கவுன்

சுஷ் இந்த கருப்பு நிற லேஸ் உடையில் கம்பீரமான தோற்றத்துடனும், அதே சமயம் அழகாகவும் உள்ளார்.

கருப்பு நிற கவுன்

கருப்பு நிற கவுன்

சுஷ்மிதா, இந்த கருப்பு நிற பாதி தோள்பட்டை கொண்ட ப்ரில் உடையில் தேவதை போன்று உள்ளார்.

சில்வர் ஆடை

சில்வர் ஆடை

இந்த சில்வர் நிற ஆடையில் சுஷ்மிதா மிகவும் ஸ்டைலாகவும், இளமைத் துள்ளலுடனும் காட்சியளிக்கிறார்.

சில்வர்-கிரே ஆடை

சில்வர்-கிரே ஆடை

சில்வர் மற்றும் கிரே கலந்த இந்த உடைக்கு, சுஷ்மிதா மேற்கொண்டுள்ள ஸ்டைல், அவரது லுக்கை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

பெங்காலி புடவை

பெங்காலி புடவை

இது துர்கா பூஜையின் போது சுஷ்மிதா சென் டசர் சில்க் புடவையை அணிந்த போது எடுத்தது.

கருப்பு நிற நெக்லைன் உடை

கருப்பு நிற நெக்லைன் உடை

என்ன தான் 38 வயதானாலும், சுஷ்மிதா சென் இன்றும் இளமையாகவே காட்சியளிக்கிறார். அதுமட்டுமின்றி, இவருக்கு கருப்பு தான் அதிகம் பிடிக்கும். அதனால் தான் இவர் எப்போதும் கருப்பு நிற ஆடைகளையே உடுத்துகிறார். இது சமீபத்தில் அவர் அணிந்த கருப்பு நிற நெக்லைன் உடை.

சிறுத்தை பிரிண்ட் கவுன்

சிறுத்தை பிரிண்ட் கவுன்

உயரமாகவும், சிக்கென்ற உடலுடனும் காணப்படும் சுஷ்மிதா சென், இந்த சிறுத்தை பிரிண்ட் போட்ட கவுனில் அட்டகாசமாக உள்ளார்.

க்ரீம் மற்றும் வெள்ளை கலந்த உடை

க்ரீம் மற்றும் வெள்ளை கலந்த உடை

சுஷ்மிதா சென் அணிந்திருக்கும் இந்த உடையானது மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்தது. இதில் உண்மையிலேயே சுஷ்மிதா க்யூட்டாக உள்ளார்.

முழங்கால் அளவுள்ள கருப்பு நிற உடை

முழங்கால் அளவுள்ள கருப்பு நிற உடை

உண்மையிலேயே சுஷ்மிதாவிற்கு கருப்பு நிற உடை அழகோ அழகு தான். அதில் இந்த முழங்கால் அளவுள்ள கருப்பு நிற உடையும் ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, November 19, 2013, 12:03 [IST]
Desktop Bottom Promotion