Latest Updates
-
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
கர்ப்பமாக இருந்த கேட் மிடில்டன் அணிந்திருந்த சில அழகான உடைகள்!!!
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சரியான ஆடைகளை அணிவது என்பது எளிமையான விஷயம் அல்ல. அப்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அப்படி இருக்கையில், மிகவும் பிரபலமானவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவது என்பது அதைவிட கடினமானது. ஏனெனில் எப்போதும் பொது மக்களின் கண்கள் அவர்கள் மீது இருப்பதால், எப்போதும் அழகாகவே காட்சியளிக்க வேண்டியுள்ளது.
அந்த வகையில் மிகவும் பிரபலமான இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்திற்கு மருமகளாக வந்த கேட் மிடில்டன், கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் சிறந்த மற்றும் வசதியான ஆடைகளை அணிந்து சூப்பராக எங்கும் வலம் வந்தார். இதில் ஹை லைட் என்னவென்றால், எங்கும் மிகவும் தளர்வான ஆடைகளை அணிந்து வந்ததில்லை. அவருக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்துள்ளார். இப்போது கேட் மிடில்டன் கர்ப்பமாக இருந்த போது அணிந்திருந்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக...

நேவி ப்ளூ கோட்
இந்த படம் கேட் கர்ப்பமாக இருக்கும் போது, அதிகமான காலை சோர்வு இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து, வெளியே வந்த போது எடுத்தது. இதில் இவர் அழகான நேவி ப்ளூ கோட் அணிந்து வந்துள்ளார்.

க்யூட்டான ஆடை
என்ன தான் கேட் கர்ப்பமாக இருந்தாலும், இவருக்கு 6-7 மாதம் வரை வயிறு பெரியதாக தெரியாததால், இவருக்கு கர்ப்பமாக இருக்கும் போது போடுவதற்கு என்ற எந்த ஒரு தனி ஆடையும் இல்லை. எனவே இவர் சாதாரணமாக க்யூட்டான வெள்ளை நிற ஆடையில் வெளி வந்தது.

புனித பாட்ரிக் தினம்
புனித பாட்ரிக் தினத்தன்று கேட் மிடில்டன், அழகான பாட்டில் பச்சை நிற கோட்டில் சூப்பராக காட்சியளித்தது.

டாப்ஷாப்
பெரிய குடும்பத்து சீமாட்டிகள் ஷாப்பிங் செய்யும் ஒரு பெரிய ஷாப்பிங் கடை தான் டாம்ஷாப். அந்த கடையில் வாங்கியது தான், இந்த கருப்பு புள்ளி கொண்ட வெள்ளை நிற ஆடை.

சாதாரண ஆடை
கர்ப்பமாக இருக்கும் போது சாதாரணமாகவும் மற்றும் வசதியான ஆடைகளை அணிவதை விட பெரிய சந்தோஷம் எதுவும் இருக்காது. அதேப் போன்று தான், கேட் மிடில்டனும், நீல நிற கவுனுக்கு, பிங்க் நிற கோட் அணிந்து சாதாரண உடையிலும் சூப்பராக காணப்படுகிறார்.

சிறந்த கர்ப்பிணி உடை
இது கேட் ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போது பொடி நீல நிறம் கொண்ட ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து வந்த போது எடுத்த படம்.

காட்டன் உடை
கர்ப்பிணிகளுக்கு எப்போதுமே காட்டன் ஆடை தான் மிகவும் சிறந்ததாக இருக்கும். அப்படிதான் கோடையில் வெளியே ஷாப்பிங் செல்லும் போது, கேட் மிடில்டனும் இந்த அழகான உடையை அணிந்துள்ளார்.

அழகான சூரியகாந்தி
பொலிவிழந்த வகையில் இருக்கும் தினத்தையும் பிரகாசமானதாக மாற்றும் நிறமான மஞ்சள் நிற உடையில் கேட் வெளியே வந்த போது எடுத்தது.

பிங்க் நிற கோட்
சாதாணமாகவே கேட் மிகவும் அழகான ஒரு பூ போன்று காணப்படுவார். அத்தகைய அழகான கேட் ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போது, பிங்க் நிற கோட், தொப்பி மற்றும் முத்து வைத்த காதணியை அணிந்து தேவதைப் போன்று வந்த போது எடுத்த படம் தான் இது.

தேவாலய சேவை
இது கேட் தேவாலயத்தில் நடந்த ஒரு சேவையின் போது, க்ரீம் நிற சில்க் உடை அணிந்து வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
