Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
டெல்லி கவுச்சர் வீக்கில் அழகாக ராம் வாக் நடந்த நடிகை தபு!!!
அனைவரும் எதிர்பார்த்திருந்த டெல்லி கவுச்சர் வீக் 2013 (DCM 2013) ஆரம்பித்துவிட்டது. இந்த ஃபேஷன் விழாவின் முதல் நாளில் அஞ்சு மோடி மற்றும் சபயசாச்சி முகர்ஜியின் ஆடைகளை, மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் நடக்கின்றனர். இந்த விழாவில் அஞ்சு மோடி மிகவும் அழகான கோல்டன் வேலைபாடுகளுடன் கூடிய ஆடைகள் மற்றும் வெல்வெட் ஆடைகள் போன்றவற்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் அஞ்சு மோடி ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களை பயன்படுத்தி ஆடைகளை வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பி உடுத்தும் ஆடையின் நிறமான சிவப்பு தேர்ந்தெடுத்து அஞ்சு மோடி வெளியிட்டிருப்பது, அனைவரையும் கவர்வதற்கு அவர் ஸ்மார்ட் தனத்தை மேற்கொண்டிருப்பது வெளிப்படுகிறது. அதிலும் லெஹெங்கா, அனார்கலி மற்றும் கவுன் போன்ற பல ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அவர் தனது ஆடையை பிரபலப்படுத்துவதற்கு மிகவும் பிரலமான நடிகையான தபுவை ராம்ப் வாக் நடக்க வைத்துள்ளார். இப்போது டெல்லி கவுச்சர் வீக்கின் முதல் நாளில் அஞ்சு மோடி வடிவமைத்த ஆடைகள் உங்கள் பார்வைக்காக...

சிவப்பு அனார்கலி கவுன்
இந்த சிவப்பு அனார்கலி கவுனில் மூன்று லேயர்கள் உள்ளது. மேலும் இதில் கோல்டன் மற்றும் சிவப்பு நிற வெல்வெட் பார்டர் இருப்பது, இந்த ஆடையின் அழகை மேம்படுத்துகிறது.

ஆரஞ்சு மற்றும் சிவப்பு லெஹெங்கா
வெல்வெட்டால் ஆன சிவப்பு மற்றும் கோல்டன் நிற லெஹெங்காவிற்கு, ஆரஞ்சு நிற துப்பட்டாவை மேட்ச்சாக்கி, எப்படியோ ஆடையை அழகாக்கிவிட்டார் அஞ்சு.

ப்ரில்ஸ்
ப்ரில் அதிகம் கொண்ட இந்த கவுனையும், அஞ்சு மோடி டெல்லி கவுச்சர் வீக்கின் முதல் நாளில் வெளியிட்டார்.

சிவப்பு சில்க் அனார்கலி கவுன்
இந்த சிவப்பு நிற அனார்கலி கவுனில் ப்ரில் மற்றும் பல லேயர்கள் உள்ளன. எனவே இது ஒரு மாதிரியான தோற்றத்தைக் கொடுக்கிறது.

பலவண்ண லெஹெங்கா
இந்த ஆடையில் சிவப்பு, ஆரஞ்சு சந்தனம் மற்றும் ஆங்காங்கு கோல்டன் வேலைப்பாடுகள் என பலவண்ணங்கள் கொண்டு, ஆடையே வித்தியாசமானதாக வடிவமைத்துள்ளார் அஞ்சு மோடி.

பிரிண்டட் லெஹெங்கா
அஞ்சு மோடி மிகவும் அழகான பலவண்ணத்தால் பிரிண்ட் செய்யப்பட்ட லெஹெங்காவை கவுச்சர் வீக்கின் முதல் நாளில் வெளியிட்டுள்ளார். அதிலும் இந்த உடைக்கு போட்டிருக்கும் கோல்டன் அணிகலன்கள் மிகவும் ஸ்டைலாக உள்ளது.

அஞ்சு மோடி
இவர் தான் மேற்கூறிய ஆடைகளை வடிவமைத்த அஞ்சு மோடி.

தபு
மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகையான தபு சிவப்பு மற்றும் ஆரஞ்சு லெஹெங்காவை அணிந்து, க்யூட்டாக ராம்ப் வாக் நடந்தார்.



Click it and Unblock the Notifications
