Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மிகவும் பிரபலமான இந்திய இனிப்பு வகைகள்!!!
இந்தியா கலாச்சாரத்தில் மட்டுமின்றி, உணவுகளிலும் மிகவும் பிரபலமானது. இந்திய உணவுகளின் சுவைக்கு ஈடு இணை, இவ்வுலகில் வேறு எந்த ஒரு உணவும் இல்லை என்று சொல்லலாம். மேலும் பல்வேறு நாட்டினரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், இந்தியாவில் சமைக்கப்படும் உணவுகளின் சுவையானது இருக்கும். அதிலும் சைவ, அசைவ உணவுகளில் மட்டுமின்றி, இனிப்புக்களிலும் சிறந்ததாக உள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான இனிப்புக்கள் பிரபலமானதாக இருக்கும். உதாரணமாக, கொல்கத்தாவை எடுத்துக் கொண்டால், அங்கு ரசகுலா பிரபலமானது. மேலும் இங்கு செய்யப்படும் ரசகுலாவின் சுவை வேறு எங்கும் கிடைக்காது. அதேப் போன்று மைசூர் பாக் பார்த்தால், மைசூரில் பிரபலமானது. இதை வாங்குவதற்காகவே, இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் மக்கள், மைசூருக்கு செல்வார்கள். அதுமட்டுமின்றி, உலகில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். குறிப்பாக இந்த உணவுகள் அனைத்தும், வெளிநாடுகளிலும் பிரபலமானது.
அப்படி இந்தியாவில் பிரபலமாக இருக்கும் சில இனிப்பு உணவுகளின் பட்டியல் மற்றும் அதன் இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அங்கு சென்றால், அந்த உணவுப் பொருளை மறக்காமல் வாங்கி சாப்பிடுங்கள்.

ரசகுலா
வெள்ளை பந்துகள் போன்று மென்மையாக இருக்கும் ரசகுலா பிறந்த இடம் கொல்கத்தா. எனவே கொல்கத்தா சென்றால், ரசகுலா சாப்பிடுவதை மறக்காதீர்கள்.

ராப்ரி
பனாரஸ் பகுதிகளில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு உணவு தான் ராப்ரி. இது பால், உலர் பழங்கள் மற்றும் கேசார் கொண்டு கெட்டியாக செய்யப்படும் ஒரு இனிப்பு உணவு.

சந்தேஷ்
சந்தேஷ் என்பது ஒரு வகையான மில்க் கேக். இதில் பல வெரைட்டிகள் உள்ளன. இது பெங்காலியில் மிகவும் பிரபலமானது.

காஜூ கத்திலி
காஜூ கத்திலி ஒரு மார்வாரி இனிப்பு. இது முந்திரியால் செய்யப்படும் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு.

லட்டு
லட்டு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருப்பதி தான். அந்த லட்டுக்காகவே பலர் திருப்பதிக்கு வருவார்கள். லட்டுவில் பல வகைகள் உள்ளன. இருப்பினும் திருப்பதி லட்டுவிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

பர்ஃபி
கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்டது தான் பர்ஃபி. இதிலும் பல வெரைட்டிகள் உள்ளன. இது ஒரு வட இந்திய இனிப்பு.

மைசூர் பாக்
இதன் பெயரிலேயே, இது எங்கு தயாரிக்கப்பட்டது என்று நன்கு தெரியும். அதிலும் இதன் ஸ்பெஷலே, வாயில் போட்டதும் கரையும் படி நெய் சேர்த்து செய்திருப்பது தான்.

ரசமலாய்
வட இந்தியாவில் உள்ள ஹரித்வார், கான்பூர் போன்ற இடங்களுக்குச் சென்றால், ஒரிஜினல் ரசமலாய் ரெசிபியை சாப்பிடலாம்.

மால்புஆ
இது இனிப்பான சப்பாத்தி போன்றது. இதன் ஸ்பெஷல் என்றால், ஒருவகையான சப்பாத்தியை எண்ணெயில் போட்டு பொரித்து, சர்க்கரை பாகுவில் ஊற வைப்பது தான். இந்த இனிப்பு ரெசிபி பெங்காலில் உள்ள மால்புஆவில் கிடைக்கும்.

பேடா
பேடா என்பது சிறிய வட்ட வடிவிலான ஒரு இனிப்பு ரெசிபி. இது பலருக்கு பிடித்தமான ரெசிபியும் கூட.

கீவார்
கீவார் ராஜஸ்தானில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு ரெசிபி.

மோதகம்
மோதகம், ஒரு மகாராஷ்டிரா ரெசிபி. இதன் உள்ளே இனிப்புக்களை நிறைத்து செய்வார்கள். இது மராத்தி மக்கள் பண்டிகையின் போது செய்யக்கூடிய ரெசிபியும் கூட.

ஃபிர்னி
ஃபிர்னி என்னும் இனிப்பு ரெசிபியை சாப்பிட நினைத்தால், ரம்ஜான் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த ரெசிபியை, வட இந்தியாவில் ரம்ஜான் அன்று செய்து சாப்பிடுவார்கள்.

அல்வா
அல்வா என்றால் நினைவிற்கு வருவது நிச்சயம் திருநெல்வேலி தான். ஏனெனில் அங்கு செய்யப்படும் அல்வ, அவ்வளவு மென்மையாக சூப்பராக இருக்கும்.

பேட்டா
ஆக்ராவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு தான் பேட்டா. எனவே தாஜ்மஹாலைக் காண ஆக்ரா செல்லும் போத, அங்கு பேட்டாவை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

சோன் பப்டி
வீதிகளில் விற்றுக் கொண்டு வரும் சோன் பப்டி பிறந்த இடம் குஜராத். இது அளவான இனிப்பில் அருமையாக இருக்கும்.

கலகந்த்
வெள்ளை நிறத்தில் உலர் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கம் கலகந்த் ரெசிபி, வட இந்தியாவில் பிரபலமானது. மேலும் இது வித்தியாசமான சுவையைக் கொண்டது.

குலாப் ஜாமூன்
குலாப் ஜாமூன் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதேப் போல் இந்த குலாப் ஜாமூனை இந்தியாவில் பல பகுதிகளிலும் பொதுவாக செய்யக்கூடிய அழகான ஒரு இனிப்பு ரெசிபி.

குஜியா
ராஜஸ்தான் சென்றால், மைதா மாவு, கோதுமை மாவு, கோயா போன்றவற்றால் செய்யப்பட்ட குஜியாவை சாப்பிடலாம்.

ஜிலேபி
பார்த்தாலே நா ஊற வைக்கும் நிறத்திலும், சுவையிலும் உள்ள இந்திய ரெசிபியான ஜிலேபி, இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இனிப்பு வகையும் கூட.
சரி, இதுல உங்களுக்கு எந்த இனிப்பு ரொம்ப பிடிக்கும்???



Click it and Unblock the Notifications