பூமியில் இருக்கும் பலருக்கு தெரியாத சில அதிசயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இந்த உலகில் அனைவருக்கும் ஆசை என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். அதேப் போல் அந்த ஆசையில் பிடித்த இடத்திற்கு நிச்சயம் ஒரு முறையாவது சென்று விட வேண்டும் என்றும் இருக்கும். நிறைய பேருக்கு உலக அதிசயங்களில் ஏதேனும் ஒன்றையாவது பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சிலருக்கு அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹாலையாவது எப்படியாவது பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவை நிறைவேறுவதற்கு நாம் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ஒரு உண்மை தெரியுமா? உலக அதிசயங்கள் 7 மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். உலகில் பல இடங்கள், இந்த அதிசயங்களைப் போன்றே, மிகவும் அபூர்வமான தோற்றத்தில் இருக்கிறது. சொல்லப்போனால் அந்த ஏழு அதிசயங்களுடன் இந்த இடங்களை ஒப்பிடும் போது, அந்த அதிசயங்களே தோற்றுப் போய்விடும் வகையில் அவ்வளவு அழகான வகையில் உள்ளது.

ஆகவே உங்களுக்கு உலகைச் சுற்றிப் பார்க்கும் நேரம் வந்தால், அப்போது நீங்கள் பார்க்க நினைக்கும் இடங்களில், அபூர்வமான தோற்றத்தில் காணப்படும் ஒரு சில மலைகள், பாறைகள், குகைகள், ஏரிகள் போன்றவற்றையும் பார்த்து மகிழுங்கள். இப்போது அந்த அபூர்வமான அதிசயங்களில் சிலவற்றைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராண்ட் கேனியன்

கிராண்ட் கேனியன்

அமெரிக்காவில் உள்ள கொலராடோ நதியின் நீரோட்டத்தினால் உருவானது தான் கிராண்ட் கேனியன். அது பூமியில் அபூர்மான தோற்றத்துடன் காணப்படும் ஒரு அதிசயமாக உள்ளது. இந்த இடத்தை மக்கள் நிச்சயம் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று பார்த்துவிட வேண்டும் ஏனெனில் அந்த அளவு இந்த பள்ளத்தாக்கு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக உள்ளது.

வேவ் பாறை

வேவ் பாறை

ஆஸ்திரேலியாவில் உள்ள அலை பாய்வது போன்ற வடிவத்தில் ஒரு பாறை உள்ளது. இதைப் பார்க்கும் போது அலை பாயும் போது திடீரென்று அந்த அலை உறைந்துவிட்டது போன்று காணப்படும். இது 14 மீட்டர் உயரமும், 100 மீட்டர் நீளமும் கொண்டது. ஆகவே இதுவும் பூமியில் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றான ஒரு பகுதியாக உள்ளது.

பாறை காடு

பாறை காடு

புவியில் உள்ள அதிசயமான ஒன்றில் பாறை காடும் ஒன்று. இந்த காடு மடகாஸ்கரின் மேற்கு கடற்கரையின் அருகில் அமைந்துள்ளது. இந்த காட்டில் உள்ள பாறையின் வித்தியாசமான அமைப்பினால், யுனெஸ்கோ நிறுவனம் இந்த இடத்தை ஒரு உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

கிரிஸ்டல் குகை

கிரிஸ்டல் குகை

பெர்முடாவில் உள்ள கிரிஸ்டல் குகை கேஸ்டல் ஹார்பருக்கு அருகில் உள்ளது. இது சுமார் 500 மீட்டர் நீளமும், 62 மீட்டர் ஆழமும் உடையது. மேலும் இந்த குகை சுண்ணாம்புப்பாறையுடன், அழகான கிரிஸ்டல் குளங்களுடன் கண்ணை கவரும் வகையில் அருமையாகக் காணப்படுகிறது. எனவே இதுவும் ஒரு வகையான அபூர்வமான தளத்தில் ஒன்றானது.

கண்ணாடி ஏரி

கண்ணாடி ஏரி

இந்த கண்ணாடி ஏரி பொலிவியாவில் அமைந்துள்ளது. இதற்கு இந்த பெயர் வருவதற்கு இந்த ஏரியில் வறண்ட உப்பு தண்ணீரில், அதிக அளவில் லித்தியம் சேர்ந்து, உறைந்து இருப்பதால், இதைப் பார்க்கும் போது அப்படியே கண்ணாடியைப் பார்ப்பது போன்று இருக்கும். மேலும் இந்த இடத்தை மழைக்காலங்களில் பார்த்தால் தான், நன்றாக இருக்கும். மேலும் இந்த ஏரியில் நாம் நின்றால், மேகங்களே நமது காலடியில் இருப்பது போன்று அழகாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Amazing Natural Geological Wonders | பூமியில் இருக்கும் பலருக்கு தெரியாத சில அதிசயங்கள்!!!

You must have heard that there are seven wonders of the world. And we all want to visit these wonders. But there are more than seven natural wonders in the whole world that will take you with awe. Take a look at some of these world wonders. Try to visit at least some of them.
Story first published: Wednesday, November 21, 2012, 12:29 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter