For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

16 வயதில் 100 கிலோ எடை... மரணத்தை எட்டிப் பார்த்து திரும்பிய சிறுவன்...

16 வயதில் 100 கிலோ எடையுடன் மரணத்தை எட்டிப் பார்த்து விட்டு வந்த சிறுவனைப் பற்றிய கதையைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

|

ஆரோக்கியமான உணவு பொருள்கள் எத்தனையோ இருந்தாலும், உடல் நலத்திற்கு ஒவ்வாத நொறுக்குத் தீனிகளையே சாப்பிடுகிறோம். ஆரோக்கியத்திற்கு உகந்ததல்லாத உணவுகளை சாப்பிடுவதால் நேரும் பின்விளைவுகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

100 Kg Almost Died

இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக உயர்ந்து சாவின் விளிம்பு வரை சென்ற பதின்ம வயது இளைஞன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குமட்டலும் வாந்தியும்

குமட்டலும் வாந்தியும்

ஸியாவோ யிங் என்ற 16 வயது இளைஞனுக்கு அதிக தாகம் எடுத்தது. ஆகவே, அவன் தினமும் நான்கு பாட்டில் நீர் அருந்திவந்தான். தொடர்ந்து குமட்டல் ஏற்பட்டு வாந்தி பண்ணினான். அதிகமாக வாந்தியெடுத்தால் உடல் எடை குறைந்தது. இரண்டு மூன்று நாள்கள் இவ்வாறு வாந்தி இருந்தது. திடீரென நிலைகுலைந்து விழுந்தான் ஸியாவோ. உடனே அவனை ஸீஜாங் என்ற இடத்திலுள்ள மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்றார்கள்.

இருபது மடங்கு அதிக சர்க்கரை

இருபது மடங்கு அதிக சர்க்கரை

மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் ஸியாவோ யிங்கின் இரத்தத்தில் இயல்பை விட இருபது மடங்கு அதிக சர்க்கரை இருப்பது தெரிய வந்தது. 3.9 முதல் 6.1 mmol/L இருக்க வேண்டிய சர்க்கரை அளவு 124 mmol/L என்ற அளவில் உயர்ந்திருந்தது. சர்க்கரையின் அளவு தாறுமாறாக உயர்ந்ததால் அவனது உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்திருந்தன. உடலின் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாக (102.2 பாரன்ஹீட்) உயர்ந்திருந்தது.

MOST READ:மஞ்சள் காமாலை இருக்கிறவங்க என்ன சாப்பிடணும்? என்னல்லாம் சாப்பிடக்கூடாது?

போராடிய மருத்துவர்கள்

போராடிய மருத்துவர்கள்

மருத்துவர்கள் போராடி யிங்கின் உயரை காப்பாற்றினார்கள். அதிர்ஷ்டவசமாக அவன் உயிர்பிழைத்தான். பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

ஸியாவோ யிங்குக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. போதுமான அளவு இன்சுலின் சுரக்காததினால் ஏற்படும் டைப் 2 என்னும் இரண்டாவது வகை நீரிழிவு குறைபாடு அது. உடல், கொழுப்பினை அதிக வேகமாக பிரித்து, அதன் காரணமாக இரத்தமே அமில தன்மையுள்ளதாக மாறிவிடும் டயபடிக் கீட்டோஅஸிடோஸிஸ் என்ற குறைபாடும் அந்த இளைஞனுக்கு இருந்தது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

ஸியாவோ யிங்கின் உடலின் அளவுக்கதிகமான சர்க்கரை இருந்ததற்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை அவன் கடைபிடிக்காததே காரணம் என்பது தெரிய வந்தது. மரவள்ளி போன்ற காசாவா என்ற வேர் வகை கிழங்கிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டார்ச் உருண்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பப்பிள் டீ, சோடா, உலோக கம்பி அடுப்பின் மீது சமைக்கப்படும் பாபிகியூ வகையில் செய்யப்பட்ட உணவு மற்றும் பொறித்த உணவு பொருள்களை அவன் தினமும் சாப்பிட்டு வந்ததாக கூறினான்.

மகன் அதிகம் பசிக்கிறது என்று அடிக்கடி சாப்பிட்டு வந்தது மட்டுமே ஸியாவோ யிங்கின் பெற்றோருக்கு தெரிந்திருந்தது. அவன் சாப்பிடும் பொருள்களால் உடல்நலத்திற்கு இவ்வளவு பெரிய கேடு நேரும் என்பது தெரிந்திருக்கவில்லை.

மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய ஸியாவோ, இனி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதாகவும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதாகவும் உறுதி பூண்டுள்ளான்.

MOST READ:உங்க ஃபேவரட் கவர்ச்சிக்கன்னிகளுக்கு வயசானா எப்படி இருப்பாங்கனு தெரியணுமா? இத பாருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

16-year-old Weighing 100 Kg Almost Died Due To Unhealthy Lifestyle

Many a time, we don't pay attention to the food we consume. Though healthier options are available, we tend to gorge on junk and other unhealthy food. While most escape the adverse effects, some are not so lucky.
Desktop Bottom Promotion