Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
12 ராசியினரும் செய்ய வேண்டிய தானமும் தர்மமும்.. செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த ராசியில் சூரியன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால் ரத்த தானத்தை ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமையில் தானம் செய்து வருவது நல்லது. காரணம் உடலில் ஓடும் ரத்தத்திற்கு செவ்வாய் தான் அதிபதி. மேலும் இவர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அஷ்டமாதிபதி ஆவார். அதனால் குருவின் முழு அருளை பெற ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் நல்லது. செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்..

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அஷ்டமாதிபதி அவரே தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை தானமாக கொடுங்கள். கோயில்களில்தீபம் ஏற்ற நல்லெண்ணெய் வாங்கித் தானம் தரலாம். எல்லாவித செல்வமும் தேடி வரும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு அதிபதி சந்திரன். பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும்.aத்துடன் தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீரை தானம் செய்யலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிபதி சூரியன், இந்த ராசிக்கு சனி அளவு கடந்த தீமையை செய்வார். இதனால் இவர்கள் சனிக் கிழமைகளில் இரும்பை தானம் செய்யலாம். ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிபதி புதன். அத்துடன் கன்னி ராசியில் தான் புதன் உச்சம் அடைவார். குருபகவானை தவறாமல் வழிபட வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். குரு பகவானும் அனைத்து விதங்களிலும் கெடுப்பார். இவர்கள் ராசியில் சனி உச்சம் பெறுவது இன்னொரு சிறப்பு. எனினும் குரு பகவான் பாதகாதிபதி என்பதால் வியாழக் கிழமைகளில் மஞ்சள் நிறம் கொண்ட பொருள்களை தானம் செய்யலாம். ஆதரவற்ற மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பதால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.
விருச்சகம்:
விருச்சக ராசிக்காரர்களுக்கு புதன் பாதகாதிபதி. அதாவது அதிக கெடுதல்களை செய்வார். தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். விருச்சிக ராசி அன்பர்களுக்கு புதன் பாதகாதிபதி. அதாவது அதிக கெடுதல்களை செய்வார்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அந்த அளவிற்கு நன்மையை செய்ய மாட்டார். அதே போல சந்திரன் கூட அவ்வளவு நன்மைகளை செய்ய மாட்டார். அதனால் இவர்கள் திங்கட் கிழமைகளில் ஏழை - எளியவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு பச்சரிசி தானம் செய்யலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் பெரிய அளவில் தீமையை செய்யும் கிரகம் எனலாம். இதனால் இவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் கோதுமை தானியத்தை முடிந்த அளவில் வாங்கி ஏழை - எளிய மக்களுக்கு தானம் செய்யலாம்.
ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். சந்திரன் பெரிய தீமையை செய்யக்கூடிய கிரகம். அதனால் இவர்கள் திங்கட் கிழமைகளில் கோயில் ஆலயங்களுக்கு சென்று சந்திரனின் தூப தீபமான சாம்பிராணியை வாங்கி தானம் செய்யலாம். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மீனம் ராசிக்கும்சுக்கிரன் கெடுதலை செய்யும் கிரகம் என்பதால் வெள்ளிக் கிழமைகளில் கோயில் தெய்வங்களுக்கு வாசனை மிகுந்த வெள்ளை மலர் மாலையை வாங்கித் தரலாம்.



Click it and Unblock the Notifications