Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
வீட்டில் செல்வம் பெருக.. யானை சிலையை எந்த இடத்தில், எந்த திசையில் வெக்கணும் தெரியுமா?
Vastu Tips In Tamil: ஒவ்வொருவருமே வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை தவறாமல் பின்பற்றுவோம். வாஸ்து சாஸ்திரத்தில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் யானை சிலை.
யானை சக்தி, சகிப்புத்தன்மை, தைரியம், அமைதி, அன்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன. இப்படிப்பட்ட யானை சிலையை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அதுவும் யானை சிலைகளை வீட்டில் சரியான திசையில் மற்றும் சரியான இடத்தில் வைத்தால், நல்ல அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றம் பாதுகாப்பு போன்றவை கிடைக்கும். யானைகள் விநாயகருடன் தொடர்புடையதாகும். விநாயகர் தடைகளை சிரமங்களையும் நீக்குபவர்.
எனவே வீட்டில் யானை சிலைகளை வைக்கும் போது, அது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் உள்ள தடைகளை நீக்கி, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யும். இப்போது வீட்டில் யானை சிலைகளை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள் குறித்து காண்போம்.
எந்த நிற யானைகளை வீட்டில் வைக்கலாம்?
யானை சிலைகளானது பல்வேறு நிறங்களில் கடைகளில் விற்கப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு மாதிரியான ஆற்றலைக் கொண்டது. எனவே உங்கள் வீட்டில் எந்த மாதிரியான ஆற்றல் ஓட்டம் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ, அந்த நிற யானை சிலையை வாங்கி வையுங்கள்.
சிவப்பு நிற யானை சிலை
சிவப்பு நிற யானை சிலை அல்லது போட்டோக்களை வீட்டில் வாங்கி வைத்தால், அது புகழ், செல்வம் மற்றும் மரியாதையைக் கொண்டு வரும். இந்த நிற யானை சிலையை வீட்டில் தெற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். இதனால் புகழும், வெற்றியும் வந்து சேரும்.
சில்வர் நிற யானை சிலை
சில்வர் நிற யானை சிலை மங்களகரமானது மற்றும் இது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இந்த யானை சிலையை வீட்டில் மட்டுமின்றி, வியாபாரம் செய்யும் இடத்திலும் வைக்கலாம். அதுவும் இந்த யானை சிலையை வழுவழுப்பான துணியால் போர்த்தி வைத்தால், அது ஏராளமான செல்வத்தையும் பணத்தையும் கொண்டு வரும்.
யானை ஜோடி சிலை
இரண்டு யானைகளின் சிலை அல்லது ஓவியத்தை வீட்டில் வைத்திருந்தால், அது பிரிந்த குடும்பத்தை ஒன்றிணைக்கும். இந்த ஜோடி யானை எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். இது வீட்டில் அமைதியையும், பாசத்தையும் கொண்டு வரும். இந்த மாதிரியான யானைகளை படுக்கையறையில் வடக்கு நோக்கி யானையின் பின்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும்.
பித்தளை யானை சிலை
வீட்டில் அல்லது அலுவலகத்தில் பித்தளையால் ஆன யானை சிலையை வைத்தால், அது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைக் காண உதவும். அதுவும் இந்த வகை யானையை வீட்டின் படுக்கையறையில் வைக்க வேண்டும். இதனால் தம்பதிகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் நீங்கும். அதுவே அலுவலகத்தில் வைத்தால், லாபம் பெருகும்.
யானை சிலைகளை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்:
* யானை சிலைகள் எப்போதும் ஜன்னல் அல்லது வீட்டினுள் உள்ள அறைகளுக்கு எதிராக வைக்கக்கூடாது.
* யானை சிலைகளை கழிவறைக்கு எதிரிலும் வைக்கக்கூடாது.
* யானை சிலைகளை எப்போதும் வீட்டின் உட்புறத்தை பார்த்தவாறு இருக்க வேண்டும். இதனால் வீட்டில் அன்பும், நேர்மறை ஆற்றலும் எப்போதும் நிறைந்திருக்கும்.
* வாஸ்துப்படி வீட்டில் யானை சிலைகளை வைப்பதாக இருந்தால், எந்த மாதிரியான ஆற்றல் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கேற்ப யானை சிலையின் நிறத்தை தேர்வு செய்து வைக்கவும்.
* உங்கள் வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், அக்குழந்தைகள் படிப்பில் சாதனை புரிய வேண்டுமானால், அவர்களின் அறையில் யானை சிலையை வையுங்கள்.
* புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க ஏழு யானை சிலைகளை வாங்கி வீட்டில் வைப்பது நற்பலனைத் தரும்.
* வீட்டில் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்க, பணம் வைக்கும் லாக்கரில் சில்வர் நிற யானை சிலையை வைப்பது நல்லது. வேண்டுமானால் வெள்ளி யானைகளால் செய்யப்பட்ட லாக்கெட்டையும் அணியலாம்.
* உங்கள் குழந்தைகள் சந்தோஷமான மனநிலையில் இருக்க வேண்டுமானால், அவர்களின் அறையில் யானை சிலையை வையுங்கள்.
யானை சிலையை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்துப்படி, யானை சிலையை வீடு அல்லது அலுவலகத்தில் பிரதான வாசலுக்கு அருகில் வைக்க வேண்டும். நல்ல அதிர்ஷ்டமும், நேர்மறை ஆற்றலும் வீட்டில் அதிகம் பாய, இந்த யானை சிலையை வடக்கு திசையை நோக்கியவாறு வைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications