Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
வாஸ்துப்படி, வீட்டு வாசலில் எந்த நிற மிதியடியை போடணும் தெரியுமா?
Vastu Tips In Tamil: நம் அனைவரது வீட்டின் வாசலிலும் மிதியடியைப் போட்டிருப்போம். இந்த மிதியடியானது காலில் உள்ள அழுக்கை வீட்டிற்குள் வருவதைத் தடுக்க மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
ஏனெனில் வாஸ்துப்படி, வீட்டு வாசலில் உள்ள மிதியடி வீட்டினுள் வரும் எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வருகிறது. வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக இருந்தால், அது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும்.

அதுவும் ஒருவரது வீட்டின் திசையைப் பொறுத்து மிதியடியை வைத்தால், அது வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு, அனைத்து வகையான எதிர்மறை ஆற்றலையும் நீக்கும். வீட்டு வாசலில் போடும் மிதியடியில் பல வடிவங்கள் உள்ளன.
எத்தனை வடிவங்களில் மிதியடிகள் இருந்தாலும், வாஸ்துப்படி செவ்வக வடிவிலான மிதியடியைத் தான் வீட்டு வாசலில் பயன்படுத்த வேண்டும். இதனால் வீடு செழிப்பாக இருப்பதோடு, குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவுகள் இன்னும் வலுவாகும்.
முக்கியமாக வீட்டு வாசலில் போடும் மிதியடியானது வீட்டின் திசைக்கேற்ப இருந்தால், இன்னும் அந்த வீட்டில் உள்ளோர் சிறப்பான பலனைப் பெறுவார்கள். இப்போது திசைக்கேற்ப எந்த நிற மிதியடியைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
வடக்கு திசை
வாஸ்துப்படி, வடக்கு திசையை நோக்கிய வீட்டின் முன் வெளிர் நீல நிற மிதியடியைப் பயன்படுத்த வேண்டும். வடக்கு திசையில் குபேரர் வசிக்கிறார். மேலும் இந்த திசையிலிருந்து தான் வீட்டில் பணம் அதிகம் சேர்கிறது. எனவே இந்த திசையை எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும்.
வடகிழக்கு திசை
வடகிழக்கு நோக்கிய வீட்டின் முன் வெளிர் மஞ்சள் நிற மிதியடியைப் பயன்படுத்துவது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். இது தவிர இந்த நிற மிதியடி வீட்டின் நிதி நிலையை மேம்படுத்துவதோடு, வீட்டில் உள்ளோருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
கிழக்கு திசை
உங்கள் வீடு கிழக்கு திசையை நோக்கி உள்ளதா? அப்படியானால் இந்த திசையை நோக்கிய வீட்டின் முன் வெளிர் நிற மிதியடிகளை பயன்படுத்த வேண்டும். இது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். ஆனால் நீலம், பச்சை மற்றும் கருப்பு நிற மிதியடிகளை மட்டும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தென்கிழக்கு திசை
வாஸ்துப்படி தென்கிழக்கு திசையை நோக்கிய வீட்டில் சிவப்பு நிற மிதியடியைப் பயன்படுத்த வேண்டும். இந்த நிற மிதியடி அந்த வீட்டில் உள்ளோருக்கு நன்மையை வழங்குவதோடு, வீட்டின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது.
தென்மேற்கு திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தென்மேற்கு திசை பார்த்த வீட்டின் முன் வெளிர் மஞ்சள் மற்றும் க்ரீம் நிற மிதியடியை பயன்படுத்துவது நல்லது. இந்த நிற மிதியடியைப் பயன்படுத்தும் போது, அது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும்.
வடமேற்கு திசை
உங்கள் வீட்டின் திசை வடமேற்கு திசையை நோக்கி இருந்தால், வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிற மிதியடியைப் பயன்படுத்த வேண்டும். இந்த நிறமானது வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்திற்கும் வழிவகை செய்யும்.



Click it and Unblock the Notifications