Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
வாஸ்து படி வீட்டில் இந்த திசையில் குப்பைத்தொட்டி இருந்தால் உங்க வாழ்க்கையில் பணக்கஷ்டம் எப்பவுமே தீராதாம்...!
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்படும் வீட்டில் அமைதியும், செல்வமும் நிலவும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் எப்போதும் வீடு கட்டும்போதோ அல்லது குடியேறும்போதோ வீட்டில் வாஸ்துவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பெரும்பாலானவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வீட்டில் எங்கும் எதையும் வைத்திருப்பார்கள், ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி அப்படிச் செய்வது சரியல்ல. விஷயங்களை சரியான திசையில் வைக்கும் இடத்தில், நல்ல பலன்கள் கிடைக்கும், அதே நேரத்தில் தவறான திசையில் வைக்கப்படும் விஷயங்கள் தீய பலன்களைத் தரும்.

அனைத்து வீடுகளிலும் அவசியம் இருக்கும் பொருள் குப்பைத்தொட்டியாகும், இதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் உங்கள் வீட்டின் போக்கையே மாற்றும். தேவையற்ற மற்றும் பயனற்ற பொருட்களை தூக்கி எறிவதற்கு தொட்டி பயன்படுத்தப்படுகிறது, இது வீட்டிலிருந்து கழிவுகளை வெளியேற்றுவதற்கான ஒரு வழிமுறையாகும்.
வாஸ்து படி, குப்பை கொட்டுவது அல்லது தூக்கி எறிவது போன்ற செயல்கள் குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். தவறான திசையில் அல்லது தவறான மண்டலத்தில் வைத்திருந்தால், கழிவுகளுடன் சேர்ந்து நேர்மறை ஆற்றலும் உங்கள் வீட்டிலிருந்து வெளியேறும்.
குப்பைத் தொட்டிக்கான வாஸ்து டிப்ஸ்
உங்கள் வீட்டின் கல்வி மண்டலத்தில் ஒரு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டால், வீட்டில் உள்ள குழந்தைகள் படிப்பில் ஆர்வத்தை இழக்கத் தொடங்குவார்கள். அதேபோல், ஒரு குப்பைத் தொட்டி உறவுகளின் மண்டலத்தில் இருந்தால், அது தனிப்பட்ட உறவுகளைத் தடுப்பது மட்டுமல்லாமல், தொழில்முறை உறவுகளிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
வணிக வல்லுநர்கள் வாடிக்கையாளர்களை இழக்கத் தொடங்கலாம் மற்றும் அவர்களின் கொடுப்பனவுகள் சிக்கிக்கொள்ளலாம். நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மேலதிகாரிகளுடனும் சக ஊழியர்களுடனும் தவறான புரிதல்களை ஏற்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்தில் தடங்கல்களை உருவாக்கும்.
மறுபுறம், கிழக்கு-தென்கிழக்கு, தெற்கு-தென்மேற்கு மற்றும் மேற்கு-வடமேற்கு ஆகிய திசைகளில் குப்பைத்தொட்டி இருந்தால், நேர்மறை ஆற்றலின் ஓட்டம் தடைபடாது மற்றும் ஒருவருக்கு தெளிவான சிந்தனை, தொழில்முறை வாய்ப்புகள் மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கலாம். எந்தெந்த திசைகளில் குப்பைத்தொட்டியை வைக்க கூடாதென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
வடகிழக்கு
இந்த திசையில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டால் அது சிந்திப்பதை கடினமாக்குகிறது. இதனால் குடியிருப்பாளர்கள் குழப்பமாக உணர்கிறார்கள், இலக்குகளில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம், மேலும் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க முடியாது. இது அவர்களின் தொழில் வாழ்க்கையில் நேரடியான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் அவர்கள் வாழ்க்கையில் பணத்தட்டுப்பாடு ஏற்படுகிறது.
கிழக்கு-வடகிழக்கு
இந்த மண்டலத்தில்குப்பைத்தொட்டி இருப்பது குடும்பத்தினரிடையே சோம்பலை ஏற்படுத்துகிறது மற்றும் அவர்கள் விஷயங்களை எப்போதும் தள்ளிப்போடத் தொடங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் உற்சாகமோ, நிம்மதியா இருக்காது. பெரும்பாலும் அவர்கள் கடந்த கால நினைவுகளை இழக்க வாய்ப்புள்ளது.
கிழக்கு
இந்த திசையில் குப்பைத்தொட்டியை வைப்பது மக்களை உள்முக சிந்தனையாளர்களாக மாற்றும், அவர்கள் மற்றவர்களுடன் பழகுவதன் முக்கியத்துவத்தை அறிய மாட்டார்கள். அத்தகையவர்கள் பெரும்பாலும் தங்கள் அண்டை வீட்டாருடனோ அல்லது பணியிடத்திலேயோ ஆபத்தில் சிக்குவார்கள். இதனால் வணிகர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் மற்றும் முக்கியமான தொடர்புகளை இழக்க நேரிடும்.
தென்கிழக்கு
இந்த திசையில் குப்பைத்தொட்டியை வைப்பது செல்வம் உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கிறது. இந்த வீட்டில் குடியிருப்பவர்கள் பெரும்பாலான நேரங்களில் பணப் பற்றாக்குறையை உணர்வார்கள். இதனால் ஏதாவது நல்லது நடக்கப் போகும் போதெல்லாம், வாய்ப்புகளைத் தடுக்கும் சில தடைகள் தோன்றும்.



Click it and Unblock the Notifications
