Latest Updates
-
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன்.
வாஸ்துபடி தூங்குவதற்கு முன் தலையணைக்கு கீழ் 2 ஏலக்காயை வைத்து தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா?
நம் வாழ்க்கையில் அனைத்தையும் விட மிக முக்கியமானது எதுவென்றால் அது நம்முடைய ஆரோக்கியம்தான். சீரான ஆரோக்கியத்தை அடைய நாம் கடுமையான டயட் மற்றும் கடினமான உடற்பயிற்சிகளை நாடுகிறோம். ஆனால் இவற்றுடன் நீங்கள் செய்யக் கூடிய ஒரு எளிய செயல் உங்களுக்கு ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் ஆரோக்கியத்தில் முதன்மையாக இருக்க, நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நீரேற்றத்துடன் இருக்க வேண்டும், சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும், நிறைய ஓய்வெடுக்க வேண்டும், ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற வேண்டும் மற்றும் ஒரு நிபுணரிடம் பேச வேண்டும்.

கூடுதலாக இதனையும் செய்ய வேண்டும். ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையைப் பெற தூங்குவதற்கு முன் உங்கள் தலையணைக்கு கீழ் சில பொருட்களை வைக்க வேண்டும்.
நாணயம்
நாணயம் நல்ல நிதி நிலை மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. தூங்குவதற்கு முன், நீங்கள் அதை தலையணையின் கிழக்கு திசையில் வைக்கவும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும், வாய்ப்புகளையும் ஈர்க்கும்.
கத்தி
மன அழுத்தத்தின் காரணமாக நீங்கள் தொடர்ந்து தீய கனவுகளைக் கண்டால், உங்கள் தலையணையின் கீழ் உலோக கத்திகளை வைத்திருப்பது ஒரு தந்திரம், இதன்மூலம் நீங்கள் மன அமைதியை அனுபவிக்க முயற்சி செய்யலாம். உங்கள் பாதுகாப்பிற்காக, நீங்கள் கூர்மையான பகுதியை மேல்நோக்கி வைத்து, கத்தியை ஒரு துணியில் மூடி அதற்குப்பின் தலையணைக்கு கீழ் வைத்து தூங்கலாம்.
வாசனை மிகுந்த மலர்கள்
ஒரு இனிமையான மற்றும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க மக்கள் வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதையும், ஊதுபத்தியை ஏற்றுவதையும் நாம் அதிகம் பார்த்திருப்போம். இது ஓய்வு மற்றும் மன அமைதியை ஊக்குவிக்கிறது.
இதேபோல், நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் தலையணையின் கீழ் வாசனைமிகுந்த பூக்களை வைக்கலாம். இது உங்கள் உணர்வுகளை அமைதிப்படுத்தவும், உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.
ஏலக்காய்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஏலக்காய் அல்லது பச்சை மிளகாயை தலையணைக்கு அடியில் வைத்தால், அவை தூக்கத்தின் தேவதையை அழைக்கின்றன. இது உங்களை நிம்மதியாக உணரவும், மன அழுத்தத்திலிருந்து உங்கள் மனதை விடுவிக்கவும் உதவும். மேலும் இது அதிர்ஷ்டத்தையும் வரவழைக்கும்.
குவளையில் தண்ணீர்
உறங்கச் செல்லும் முன் தலையணைக்கு அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் அதை உங்கள் நைட்ஸ்டாண்டில் அல்லது தரையில் வைக்கலாம். இது நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும், இரவில் தாகமாக எழுந்தால், தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் தூங்கலாம்.
சோம்பு
வாஸ்து சாஸ்திரத்தில், சோம்பு ராகு தோஷத்தை சரிசெய்வதோடு தொடர்புடையது. உங்கள் உடல்நலம் மற்றும் மன அமைதியை சீர்குலைக்கும் மன அழுத்தத்தை அகற்ற இது உதவும்.
பூண்டு
உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் தலையணைக்கு அடியில் பூண்டை வைத்துக் கொள்ள வாஸ்து நிபுணர் பரிந்துரைதுள்ளார்கள். இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் மற்றும் அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கும். வாசனை பிடிக்கவில்லை என்றால், பூண்டை ஒரு கொள்கலனில் வைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
