Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
வாஸ்துப்படி, வீட்டின் வடக்கு திசையில் இதை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டில் பணப் பிரச்சனை அதிகரிக்கும்..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் ஒவ்வொரு திசை மற்றும் மூலையும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை உருவாக்குகின்றன. எனவே தான் வீட்டை கட்டும் போது வாஸ்து பார்த்து கட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அதோடு வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களையும் சரியான திசையில், சரியான இடத்தில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வடக்கு திசை குபேரர், விநாயகர் மற்றும் லட்சுமி தேவி வசிக்கும் திசையாக கருதப்படுகிறது. அதோடு இந்த திசையில் இருந்து தான் வீட்டிற்கு பணம் வருகிறது. எனவே இந்த திசையில் வைக்கும் பொருட்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால் நம்மில் பலருக்கு இந்த வடக்கு திசையில் எதை வைக்கக்கூடாது என்பது தெரிவதில்லை. இதன் விளைவாக வீட்டில் பண பிரச்சனை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையும் ஏற்படுகிறது. இப்போது வாஸ்துப்படி, வீட்டின் வடக்கு திசையில் எதை வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
கடினமான பொருட்கள்
வாஸ்துப்படி வீட்டின் வடக்கு திசையில் கடினமான பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது இந்த திசையில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து, வீட்டிற்கு வரவுள்ள பண வரவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். பின் வீட்டில் வறுமை தலைவிரித்து ஆடும். எனவே மறந்தும் வடக்கு திசையில் கடினமான பொருட்களை வைக்காதீர்கள்.
குப்பைத் தொட்டி
அனைத்து வீடுகளிலும் குப்பை தொட்டி இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த குப்பைத் தொட்டியை வீட்டின் வடக்கு திசையில் வைக்கக்கூடாது மற்றும் வடக்கு திசையை எப்போதும் அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி, பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் மற்றும் வீட்டில் செல்வம் அதிகரிக்காது போகும்.
காலணிகள்
வடக்கு திசை செல்வத்தின் அதிபதியான குபேரனின் திசை. இந்த திசையில் காலணிகள் மற்றும் செருப்புக்களை எப்போதும் வைக்கக்கூடாது. அழுக்குகள் நிறைந்த காலணிகளை குபேரன் இருக்கும் திசையில் வைத்தால், அது குபேரனின் கோபத்திற்கு ஆளாக்கி, செல்வம், செழிப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் வடக்கு திசையில் காலணிகள் இருந்தால், உடனே அதை அகற்றுங்கள்.
கழிவறை கூடாது
நீங்கள் வீடு கட்டினாலோ அல்லது புது வீட்டிற்கு சென்றாலோ, அந்த வீட்டின் வடக்கு திசையில் கழிவறை இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வாஸ்துப்படி கழிவறையில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருக்கும். இந்த கழிவறை வடக்கு திசையில் இருந்தால், இந்த வீட்டில் செல்வம் சேராது. ஒருவேளை நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வடக்கு திசையில் கழிவறை இருந்தால், ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி,மூலையில் வைத்தால், வாஸ்து குறைபாடுகள் நீங்கும்.
எலக்ட்ரானிக் பொருட்கள்
வாஸ்துப்படி, டிவி, ஃப்ரிட்ஜ், ஏர் கூலர், டோஸ்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வடக்கு திசையில் வைக்கக்கூடாது. ஏனெனில் இந்த பொருட்கள் அனைத்தும் வெப்பத்தை உருவாக்கும். குபேர திசையில் இம்மாதிரியான பொருட்களை வைத்தால், அது வீட்டில் உள்ளோரின் வாழ்வில் கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
