Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வீட்டில் கண்ணாடியை இந்த திசையில் வெக்காதீங்க.. இல்ல அது பண இழப்பையும், கடனையும் அதிகரிக்கும்...
Vastu Tips: நாம் குடியிருக்கும் வீடானது வாஸ்து சாஸ்திரத்தின் படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, வீட்டில் உள்ளோர் நல்ல செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். வாஸ்துப்படி, நம் வீட்டில் உள்ள ஒவ்வொன்றும் ஆற்றலை வெளியிடும். இந்த ஆற்றல் வீட்டில் உள்ளோரின் மேல் நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
எனவே வீட்டில் எந்த ஒரு பொருளை வைப்பதாக இருந்தால், அவற்றை சரியான இடத்தில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தி, வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மற்றும் நிதி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதும் வீட்டில் கண்ணாடியை வைப்பதாக இருந்தால், அவற்றை வாஸ்துப்படி வையுங்கள். கீழே வீட்டில் கண்ணாடியை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

* வாஸ்துப்படி கண்ணாடியை எப்போதும் மேற்கு அல்லது தெற்கு சுவற்றில் தொங்கவிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த திசையில் கண்ணாடியை தொங்கவிட்டு முகத்தைப் பார்த்தால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்தவாறு இருக்கும்.
* கண்ணாடியை எப்போதும் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் தான் தொங்கவிட வேண்டும். வாஸ்துப்படி இந்த திசையில் கண்ணாடியை வைத்தால் தான், அது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும்.
* முகம் பார்க்கும் கண்ணாடியை எப்போதும் அழுக்காக வைத்திருக்கக்கூடாது. அழுக்கு நிறைந்த கண்ணாடி வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். எனவே கண்ணாடியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
* வீட்டில் கண்ணாடி லேசாக உடைந்திருந்தாலும், அதை உடனே அப்புறப்படுத்துங்கள். உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருக்கும் போது, அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை தான் அதிகரிக்கும். இதன் விளைவாக வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கண்ணாடிகளை வைக்கும் போது, கண்ணாடிகள் ஒன்றையொன்று நோக்கி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிரெதிரில் கண்ணாடியை வைத்தால், அது வீட்டில் பதற்றத்தை தான் அதிகரிக்கும்.
* குளியலறையில் கண்ணாடியை வைப்பதாக இருந்தால், அது கதவின் முன் சரியாக இருக்கக்கூடாது. அப்படி கதவின் முன் கண்ணாடியை வைத்தால், அது வாஸ்து தோஷத்தை உண்டாக்கி, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரத்தூண்டும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, கண்ணாடியை சமையலறையில் வைத்திருக்கக்கூடாது. அப்படி வைப்பதும் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. எனவே சமையலறையில் கண்ணாடியை வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.
* படுக்கை அறையில் கண்ணாடியை வைப்பதாக இருந்தால், அந்த கண்ணாடி படுக்கையை பார்த்தவாறு இருக்கக்கூடாது. ஒருவேளை வேறு இடம் இல்லாவிட்டால், இரவில் தூங்கும் போது கண்ணாடியை சிறிது துணியால் மூடி விடுங்கள். ஏனெனில் தூங்கும் போது உங்கள் உடலின் எந்தப் பகுதியும் கண்ணாடியில் தெரியக்கூடாது. அப்படி தெரிந்தால், அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
* வீட்டில் எப்போதும் கூம்பு வடிவ கண்ணாடிகளை வைக்கக்கூடாது. ஏனெனில் அப்படிப்பட்ட கண்ணாடிகள் வீட்டில் அசுபமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த வடிவ கண்ணாடிகளை தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications