Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வீட்டில் பண பிரச்சனை அதிகமா இருக்குதா? அப்ப ஒரு வெள்ளி நாணயத்தை இந்த இடத்துல வையுங்க..
Vastu Tips In Tamil: நாம் வாழும் வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அது ஒருவரது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரி, வாஸ்து குறைபாடு உள்ள வீட்டை அறிவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் இருந்தால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது, வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும், பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் நிறைய பண பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால், வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் குடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ஒருசில பரிகாரங்களை வீட்டில் செய்வதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். இப்போது அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் கண்போம்.
துளசி செடி
நீங்கள் செடி பிரியர் என்றால், வீட்டில் துளசி செடியை வாங்கி வளர்த்து வாருங்கள். குடியிருக்கும் வீட்டில் துளசி செடியை வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருக்கிறார். அதுவும் இந்த துளசி செடியை வீட்டில் பிரதான வாசலில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், வீட்டின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும்.
பணப்பையை காலியாக வைத்திருக்காதீர்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீங்கள் உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பை அல்லது பெட்டியை எப்போதும் காலியாக வைத்திருக்காதீர்கள். அப்படி வைத்தால், அது வீட்டில் பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் பணம் வைக்கும் பையானது லட்சுமி தேவி இருக்கும் இடம். இந்த இடத்தை காலியாக வைத்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள். எனவே பணப்பையை காலியாக வைத்திருக்காதீர்கள்.
கற்பூர பரிகாரம்
ஜோதிடத்தின் படி, தினமும் வீட்டில் சாமி கும்பிடும் போது கற்பூரத்தை ஏற்றுவதால் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது. அதாவது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட்டு, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் நிரம்பிய வீட்டில் வாஸ்து தோஷம் எதுவும் இருக்காது. இதன் விளைவாக எவ்வித பணப் பற்றாக்குறையும் ஏற்படாது. எனவே வீட்டில் பணப் பிரச்சனை வரக்கூடாதெனில், தினமும் கற்பூரத்துடன், 1 கிராம்பை வைத்து ஏற்றி வீடு முழுவதும் அதன் புகையை காட்டுங்கள்.
வெள்ளி நாணயம்
உங்கள் வீட்டில் பண பிரச்சனை அதிகமாக உள்ளதா? அப்படியானால் இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் ஒரு வெள்ளி நாணயத்தை வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், புதன் மற்றும் செவ்வாயினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இவ்விரு கிரகங்களின் தோஷங்களானது ஒருவருக்கு நிறைய கஷ்டத்தை தரும். முக்கியமாக பணப் பிரச்சனையால் அவதிப்பட வைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications