Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
வாஸ்துப்படி, இந்த திசையில் கேஸ் அடுப்பை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல செலவு தான் அதிகமாகும்..
Vastu Tips In Tamil: ஒரு வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமான பகுதி. ஏனெனில் இங்கு தான் உணவு தயாரிக்கப்பட்டு, வீட்டில் உள்ளோருக்கு உணவுகள் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சமையலறையானது நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருந்தால் மட்டுமே, அங்கு சமைக்கப்படும் உணவுகள் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கும்.
அதன் விளைவாக வாழ்வில் முன்னேற்றத்தைக் காண முடியும். எதிர்மறை ஆற்றல் நிறைந்த உணவை உட்கொண்டால், அது வாழ்வில் மற்றும் நிதி நிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மனநிலையை மோசமாக பாதிக்கும்.

எனவே சமையலறையில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களையும் சரியான இடத்தில், சரியான திசையில் வைக்க வேண்டும். முக்கியமாக சமையல் செய்யும் கேஸ் அடுப்பை சரியான திசையில் வைத்து சமைக்க வேண்டும்.
இதனால் உணவின் சுவை சிறப்பாக இருப்பதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றல் சீராக பரவும். இப்போது எந்த திசையில் கேஸ் ஸ்டவ்வை வைத்தால் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
தென்கிழக்கு திசை
சமையலறையில் கேஸ் அடுப்பை வைக்க சிறந்த திசை தென்கிழக்கு தான். ஏனெனில் இந்த திசையில் தான் சுக்கிரன் உள்ளார். இந்த திசையில் அடுப்பை வைத்து சமைக்கும் போது, உணவுகள் சுவையாக இருக்கும். சூரியனின் ஒளி எப்போதும் இங்கு படும். இதனால் நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருக்கும்.
மேலும் இந்த பகுதி மிகவும் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருக்காது. எனவே இந்த திசையில் உணவுகளை வைக்கும் போது அது நன்றாக இருக்கும். அதோடு இந்த திசையில் அடுப்பை வைப்பதன் மூலம், வீட்டில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும் மற்றும் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
தெற்கு திசை
கேஸ் அடுப்பை தென்கிழக்கு திசையில் வைக்கும் போது, அது ஒருவரது ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ஆனால் தெற்கு திசையானது செவ்வாய் பகவானின் திசை. இந்த திசை மிகவும் சூடாக இருக்கும். இந்த திசையில் உணவுகளை சமைக்கும் போது, அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஒருவேளை சமைத்தால், அந்த உணவை உண்டவர்கள் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
தென்மேற்கு திசை
தென்மேற்கு திசையில் கேஸ் அடுப்பை வைத்து சமைத்தால், வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். முக்கியமாக தேவையில்லாத செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். தெற்மேற்கு திசையானது ராகுவின் திசையாகும். இந்த திசையில் கேஸ் அடுப்பை வைக்கவே கூடாது. அப்படி வைத்து சமைத்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும். ஒருவேளை அடுப்பை வைக்க வேறு எந்த இடமும் கிடைக்காவிட்டால், அடுப்பைப் பார்த்தவாறு அனுமனின் போட்டோவை வையுங்கள்.
மேற்கு திசை
தென்மேற்கு திசையில் அடுப்பை வைக்கும் போது, அது செலவை அதிகரிப்பதைத் தவிர, வீட்டில் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தையும் இழக்க வைக்கும் மற்றும் குழந்தைகளின் படிப்பிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் மேற்கு திசையில் கேஸ் அடுப்பை வைக்கலாம். இது லாபத்தைத் தரும். ஆனால் இந்த திசையில் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது. வெள்ளை நிறத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். இதனால் அது சமையலறையில் உள்ள வாஸ்து தோஷத்தை நீக்கும்.
வடமேற்கு திசை
சமையலறையின் வடமேற்கு திசையில் கேஸ் அடுப்பை வைப்பதால், வீட்டில் உள்ள பெண்கள் மிகவும் விரக்தியில் இருப்பார்கள். தைராய்டு பிரச்சனையால் அவதிப்படக்கூடும். மேலும் வடமேற்கு திசையில் கேஸ் அடுப்பை வைப்பதன் மூலம், வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும்.
இல்லதரசிகள் எப்போதும் சமையலறையிலேயே இருக்கக்கூடும். கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த திசையில் உள்ள குறைபாட்டைப் போக்க, மஞ்சள் நிற பலகையின் மேல் கேஸ் அடுப்பை நிறுவுங்கள். இல்லாவிட்டால் மஞ்சள் கல்லை கேஸ் அடுப்புக்கு அடியில் வையுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications