Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல மருந்துகளை வெக்காதீங்க.. இல்ல அடிக்கடி நோய்வாய்ப்படுவீங்க..
Vastu Tips In Tamil: தற்போதைய மோசமான வாழ்க்கை முறையால் நாம் பல நோய்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம். முந்தைய காலத்தில் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
ஆனால் தற்போது ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால், அந்த குடும்பத்தில் ஒருவராவது தினமும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

அப்படி எடுக்கும் மருந்து மாத்திரைகளை நாம் சரியான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தி, ஆரோக்கிய பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும் மற்றும் மருத்துல செலவுகளை அதிகரிக்கும்.
இப்போது வாஸ்து சாஸ்திரத்தின் படி, மருந்து மாத்திரைகளை வீட்டின் எந்த இடம் அல்லது திசையில் வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்பது குறித்து காண்போம். உங்கள் வீட்டில் தவறான இடத்தில் மருந்து மாத்திரைகளை வைத்திருந்தால், உடனே அதை மாற்றி வையுங்கள்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, மருந்து மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், மருந்து மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டியிருக்கும். மேலும் அந்நபர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருக்கக்கூடும். அதோடு, வீட்டில் அதிக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
* வாஸ்து சாஸ்திரத்தில், மருந்துகளை வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் வைப்பது நல்லதல்ல. இதனால் வீட்டில் மருந்து மாத்திரைகளை எடுக்கும் நபர் தீவிரமாக நோய்வாய்ப்படக்கூடும். அதோடு, அந்நபர் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
* எக்காரணம் கொண்டும் மருந்துகளை கட்டிலுக்கு அருகே அல்லது தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது. இது ராகு-கேது தோஷத்தை ஏற்படுத்தும். இதனால் அந்நபலர் நோய்களைத் தவிர பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
* நிறைய பேர் சமையலறையில் மருந்து மாத்திரைகள் மற்றும் முதலுதவி பெட்டிகளை வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் மருந்து பொருட்களை வைத்திருக்கக்கூடாது. இது அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
எந்த திசையில் மருந்துகளை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மருந்துகளை வைக்க சிறந்த திசை கிழக்கு தான். இந்த கிழக்கு திசையில் மருந்துகளை வைத்து பயன்படுத்தினால், விரைவில் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
அதேப் போல் வடகிழக்கு திசையிலும் மருந்துகளை வைத்து பயன்படுத்துவது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் எந்த காரணம் கொண்டும் மருந்துகளை பூஜை அறையில் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், இந்த மருந்துகளை தொடர்ந்து எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications