Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
Vastu tips: துளசி செடியை எந்த திசையில் நட வேண்டும்? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?
வீட்டில் துளசி செடியை வைக்க போறீங்கனா முதலில் அதற்கு ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுப்பது வாஸ்துவின் முதல் விதி. துளசி செடி கிழக்கில் வைக்கப்பட்டாலும், வாஸ்து கொள்கைகளின்படி, உங்கள் வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் பால்கனியில் அல்லது ஜன்னல் அருகில் வைக்கலாம்.
இந்து மதத்தில், துளசி செடி விலைமதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது. லட்சுமி தேவியின் அம்சமாகவும் துளசி செடி உள்ளது. வீட்டில் துளசியை நடுவது கெட்ட ஆற்றலை நீக்கும் அதே வேளையில் நல்ல ஆற்றலை ஊடுருவுச் செய்யும்..
வாஸ்து, துளசி செடியை மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதுகிறது. இதை வீட்டில் வைப்பதால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். உங்கள் வீட்டில் துளசி செடியைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஒவ்வொரு நாளையும் மிகவும் அமைதியானதாக மாற்றுவதற்கு வாஸ்துவின் சில குறுப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்..

துளசி செடியை வைப்பதற்கு ஏற்ற திசைகள்
1. வீட்டில் துளசி செடியை வளர்ப்பதற்கான வாஸ்து விதிமுறைகளின்படி, வடக்கு மற்றும் வடகிழக்கு சிறந்த திசைகள் ஆகும். இது நீரின் திசை என்பதால், இது கெட்ட சக்தியை அழித்து வீட்டில் மகிழ்ச்சியான மற்றும் இனிமையான அதிர்வுகளை உருவாக்குகிறது.
2. துளசி மூலிகையை கவனமாக வளர்க்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே, துளசி செடி வீட்டில் காய்ந்து போகக்கூடாது அல்லது சேதமடையக்கூடாது. அப்படியானல் அது ஒரு கெட்ட சகுனம்..
3. எந்த வகையிலும் நோய் மற்றும் கெட்ட ஆற்றலை நீக்கும் திறன் இதற்கு இருப்பதால், இது நல்ல ஆற்றலை ஊக்குவிக்கும் மற்றும் உங்களுக்கு மன அமைதியை அளிக்கும்.
4. வாஸ்து கொள்கைகளின்படி, வீட்டின் தென்கிழக்கு பகுதி "நெருப்பின் திசை" என்று கருதப்படுகிறது. இதனால், துளசி வளர்க்க ஏற்ற இடம் இல்லை.
துளசியை ஒருபோதும் தரையில் நடக்கூடாது.. சிறந்த பலன்களை அடைய, அதை எப்போதும் ஒரு தொட்டியில் வைக்கவும்.
5. துளசி செடியானது திருமணமான தம்பதிகள் அமைதியான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ வழிவகுக்கிறது.. வாஸ்து சாஸ்திரத்தின்படி, துளசி மிகவும் அதிர்ஷ்டமான மூலிகை.
6.வாஸ்து விதிகளின்படி, துளசி செடிகளை தூய்மையான சூழலில் வைத்திருக்க வேண்டும். துளசியை மூடாமல் இருக்க வேண்டும். குப்பைகள், விளக்குமாறு, துடைப்பம் போன்ற அசுத்தமான பொருட்களை துளசியை சுற்றியுள்ள பகுதியில் வைக்கக்கூடாது.
7. வாஸ்து கொள்கைகளின்படி, துளசி செடிகளை ஒன்று, மூன்று, ஐந்து, போன்ற ஒற்றைப்படை எண்களில் அமைத்து, உகந்த பலன்களைப் பெற வேண்டும். உங்கள் வீட்டின் தற்போதைய அடித்தளத்தை விட மிக உயரமான அமைப்பில் துளசி மூலிகையை எப்போதும் வைக்கவும்.
8. வீட்டில் துளசி மூலிகையை வளர்ப்பதற்கான வாஸ்து குறிப்புகளின்படி, இது எந்த எதிர்மறை சக்தியையும் அல்லது நோய்களையும் விரட்டலாம்.
துளசி செடி இருக்கும் பகுதி நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரக் கொள்கைகளின்படி, துளசி செடியை நடுவதற்கு ஏற்ற இடம் சூரிய ஒளி மற்றும் பிற இயற்கை கூறுகளை பெறும் இடமாகும். அப்படி ஒரு இடத்தில் துளசியை நட்டால் அது நன்றாக வளர்ந்து நீண்ட காலம் வாழ உதவும்.



Click it and Unblock the Notifications