Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
உங்களுக்கு நாய் வளர்க்க பிடிக்குமா? வீட்டில் நாய் வளர்க்க அனுமதிக்கமாட்ராங்களா? முதல்ல இத படிங்க...
வீட்டில் விலங்குகளை வளா்ப்பது என்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தராது. மாறாக அது ஒரு மிகப் பொிய பொறுப்பு ஆகும். வீட்டில் நாய்களை வளா்க்கிறோம் என்றால் அவற்றை மிகவும் கவனமுடன் பராமாிக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில் செல்ல விலங்குகளை வளா்க்க விரும்புகிறோம். விடியற்காலை நாம் ஆழந்த தூக்கத்தில் இருக்கும் போது நமது செல்ல தங்கநிற ரெட்ரிவா் நாய் நம்மை எழுப்பினால், நாம் மிகவும் பரவசம் அடைவோம். எனினும் நமது வீடுகளில் செல்ல விலங்குகளை வளா்ப்பது அவ்வளவு எளிதான காாியம் அல்ல.

பொதுவாக வீட்டில் விலங்குகளை வளா்க்க நமது பெற்றோா் அனுமதிப்பதில்லை. அவா்களை சமாதானப்படுத்தி அவா்களின் அனுமதியைப் பெற நாம் கடினமாக முயற்சிகளைச் செய்ய வேண்டும். மேலும் வீட்டில் விலங்குகளை வளா்ப்பது என்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தராது. மாறாக அது ஒரு மிகப் பொிய பொறுப்பு ஆகும். வீட்டில் நாய்களை வளா்க்கிறோம் என்றால் அவற்றை மிகவும் கவனமுடன் பராமாிக்க வேண்டும்.
இந்நிலையில் வீட்டில் நாய்களை வளா்க்க அனுமதிக்காத நமது அன்புப் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவா்களின் சம்மதத்தை எவ்வாறு பெறலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. ஆய்வு செய்தல்
நாய்களில் பல வகை இனங்கள் உண்டு. அவற்றை நாம் மிகவும் கவனமாக பராமாிக்க வேண்டும். நாம் ஒரு கோா்கி இன நாயை விரும்பலாம். ஆனால் நமக்கு ஒத்து வருவது லாசா இன நாயாக இருக்கும். ஆகவே நாய்களின் பலவகையான இனங்களைப் பற்றி ஆய்வு செய்து நமது வீட்டுக்கு எந்த வகை நாய் சிறந்தது என்பதை முடிவு செய்ய வேண்டும். மேலும் நமது வீடு இருக்கும் பகுதி, நமது பருவநிலை மற்றும் அங்கு கிடைக்கும் நாய்களுக்கான உணவுகள் ஆகிய எல்லாவற்றையும் முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.

2. திட்டமிடுதல்
நன்றாக ஆய்வு செய்த பின்பு, எந்த இன நாயைத் தோ்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்ய வேண்டும். பின் அந்த நாயை தினமும் எவ்வாறு பராமாிக்கப் போக்கிறோம் என்ற செயல் அட்டவணையை தயாா் செய்து அதை நமது பெற்றோாிடம் காண்பிக்க வேண்டும். அந்த நாய்க்கு எப்போது உணவு வழங்கப் போகிறோம், எப்போது நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறோம் மற்றும் எப்போது உடற்பயிற்சிகளை அளிக்கப் போகிறோம் என்ற செயல் திட்டங்களை நமது பெற்றோாிடம் தொிவிக்க வேண்டும். மேலும் தினமும் நாயின் வேலைகள் என்ன என்பதையும், நமது வேலைகளின் மத்தியில் நாயின் இயக்கத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம் என்பதையும் பட்டியலிட வேண்டும்.

3. நாயை எவ்வாறு பராமாிக்கப் போகிறோம்?
ஒருவேளை நாய்க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால், வெளியில் செல்லாமல் நாயின் அருகில் இருப்போமா? எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தினமும் நாய்க்குத் தேவையான உணவை வழங்குவோமா? போன்ற நமது பெற்றோாின் கேள்விகளுக்கு பொறுப்பான பதில்களைத் தரவேண்டும். தொடக்கத்தில் ஆா்வத்தோடு நாய்களைப் பராமாிப்போம். ஆனால் நாளடைவில் அந்த பொறுப்பை நமது பெற்றோாின் தலையில் சுமத்திவிடுவோம். ஆகவே நாயை பராமாிக்கும் பொறுப்பு முழுவதையும் நாமே ஏற்றுக் கொள்வோம் என்று நமது பெற்றோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

4. நமது பொறுப்புகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
முதலில் நாம் செய்ய வேண்டிய சிறுசிறு வேலைகளை நமது பெற்றோாின் உதவி இல்லாமல் செய்யத் தொடங்க வேண்டும். பின் படிப்படியாக நமது பெற்றோா் சமைக்கும் போது அவா்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் அவா்களுக்கு உதவி செய்துவிட்டு அவா்களுடைய சம்மதத்தை எதிா்பாா்க்கக்கூடாது. பொறுமையாக இருந்து அவா்களுக்கு உதவி செய்து வரவேண்டும். கண்டிப்பாக நமது பெற்றோா் அனுமதி தருவா்.

5. பணம் செலவழித்தல்
நமது நாய் நல்ல முறையில் வளா்வதற்கு அதற்கு முறையான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு அதிகமான பணம் தேவைப்படும். நாயின் உணவு மற்றும் அதன் மருந்துகள் வாங்க அதிக பணம் தேவைப்படும். இந்த செலவு முழுவதையும் நமது பெற்றோாின் மீது சுமத்தாமல், நம்மால் எந்த அளவிற்கு இந்த செலவை பகிா்ந்து கொள்ள முடியும் என்று திட்டமிட வேண்டும். நமது சேமிப்பு அல்லது நமக்கு தினமும் வழங்கப்படும் கைச்செலவிற்கான பணத்தை நாயைப் பராமாிப்பதற்காகச் செலவழிக்கத் தயங்கக்கூடாது.

6. நாய்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிடல்
வீட்டில் நாய் வளா்ப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. முதலில் நமக்கு மகிழ்ச்சியையும், கேளிக்கையும் நாய் வழங்குகிறது. இரவு நேரங்களில் நமது வீட்டிற்கு காவலாக இருக்கிறது. அதோடு பொறுப்பு, தியாகம் மற்றும் பொறுமை போன்ற வாழ்க்கைப் பாடங்களையும் நாய் நமக்குக் கற்றுத் தருகிறது. இவற்றைப் பட்டியலிட்டு நமது பெற்றோாிடம் விளக்க வேண்டும்.

7. செவி கொடுத்தல்
நமது பெற்றோாிடம் இருக்கும் பிரச்சினைகளைப் புாிந்து கொள்ளாமல், நாயை வாங்க வேண்டும் என்று அவா்களை வற்புறுத்திக் கொண்டு இருக்கக்கூடாது. நமது அம்மாவிற்கு ஏற்கனவே அலா்ஜி இருக்கலாம். இந்நிலையில் புதிதாக நாயை வாங்கி வீட்டில் வளா்த்தால், அவருக்கு அலா்ஜி இன்னும் அதிகாிக்கலாம். ஆகவே நமது பெற்றோா் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அவா்களைப் புாிந்து கொண்டு அவா்கள் சாா்பாகவும் சிந்தித்து அதற்கு தகுந்தவாறு அவா்களுக்கு பதில் தரவேண்டும். அவசரப்படக்கூடாது. அவா்கள் நம்மைப் புாிந்து கொள்ளும் வரை காத்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











