Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்கள் - கடுப்பேத்துகிறார் மை லார்ட்!!!
செல்ல பிராணிகள் வளர்ப்பது உங்கள் மனதை இலகுவாக்கவும், மன அலுத்தமின்றி இருக்கவும் பயனளிக்கும். ஆனால், அது வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான். ஆனால், நமக்கு நேரெதிராக பயனளிக்கும். செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் நமக்கு எவ்வளவு வேண்டியவர்களாக இருந்தாலும், அங்கு நாய்கள் இருந்தால் மட்டும். லேசாக அல்லு வாங்கும் (பேஜாரு).
ஏனெனில், வளர்ப்பவர்களுக்கு நாம் எவ்வளவு வேண்டியவர்கள் என்று தெரியும். ஆனால், அது அந்த நாய்க்கு தெரியாதே. இன்னும் சில இடங்களில், நாய் வளர்ப்பவர்களும் நாய் மாதிரியே இருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு போவதற்கு, பேசாமல் நரகத்திற்கே போய் வந்துவிடலாம். சரி, அப்படி அவர்களது வீட்டிற்கு போகாமல் இருந்தாலும், வாக்கிங், ஜாக்கிங் என்று எங்காவது போகும் போது உடன் கூட்டிவது பயமுறுத்துவார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, நாய் வளர்ப்பவர்கள், அவர்களது பிராணிகளுடன் சேர்ந்து பல அடாவடித்தனங்கள் செய்வதுண்டு, அவற்றில் சிலவன.....

உணவை பகிர்ந்து சாப்பிடுவது
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய அடாவடித்தனம், உணவை பகிர்ந்துக்கொள்வது, இவர்களது உணவை நாய்களுக்கு ஊட்டுவதுக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் உணவை இவர்கள் பகிர்ந்து சாப்பிடுவது தான் கொடுமையிலும் கொடுமை. இதனால், பல தொற்றுகள் அண்ட வாய்ப்புகள் இருக்கின்றன.

"கக்கா" பிரச்சனை
காலையில் கக்காப் போக எங்காவது அழைத்து செல்வார்கள், யாரோ ஒருவர் வீட்டின் முன்பு கக்கா இருக்க செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

குழந்தையைப் போல பாவிப்பது
தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை குழந்தைகளைப் போல பாவிப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனால், அதற்கென்று, முத்தமிடுவது, கட்டிப் பிடித்துக் கொள்வது எல்லாம் ரொம்ப ஓவர். இதன் மூலம், பல சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்டிப் பிடித்து உறங்குவது
இதன் உச்சகட்டமே, கட்டிப்பிடித்து உறங்குவது தான். இப்படி கண்டதெல்லாம் செய்துவிட்டு கடைசியில், அந்த செல்ல [பிராணிகளுக்கு ஏதேனும் சரும பிரச்சனை அல்லது நோய் பாதிப்புகள் வந்தால் ஊருக்கு வெளியில் சென்று விட்டுவிட்டு வந்துவிடுவது. (ஒரு சிலரை தவிர..)

நாய்க்கு உடை
நாய்களுக்கும் தாங்கள் உடுத்துவது போல அதே வண்ணத்தில் உடை அலங்காரம் செய்வது. ஸ்கார்ஃப், சாக்ஸ் என இவர்கள் செய்யும் லூட்டியை அடக்கவே முடியாது.



Click it and Unblock the Notifications