Just In
- 31 min ago
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- 1 hr ago
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- 2 hrs ago
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- 3 hrs ago
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
Don't Miss
- News
குழந்தையை பிரசவித்த சில மணி நேரங்களில்.. வேலையை விட்டு தூக்கிய கூகுள் ஊழியர்.. தொடரும் சோக கதைகள்
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Technology
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
- Movies
காலில் கட்டுடன் குஷ்பூ... என்னாச்சு என பதறிய ரசிகர்கள்... திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
மீன் தொட்டியில் சுறா மீனை பராமரிக்க 10 சுலபமான வழிகள்!!!
சுறா மீனை செல்லப்பிராணியை வளர்ப்பதில் பலருக்கும் நாட்டம் இருப்பதில்லை. காரணம் அவை ஆபத்தான உயிரனம் மற்றும் நம் மீன் தொட்டியில் உள்ள மற்ற மீன்களை இரையாக்கி விடும் என்பதாலேயே. அதனால், நீங்கள் சுறாவை வளர்க்க வேண்டுமானால் அதற்கென தனிய தொட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் மகிழ்ச்சியுடன் சுற்றி திரியும்.
இன்று சுறா மீன்களை எப்படி வீட்டில் பராமரிப்பது என்பதை பற்றி விளக்க உள்ளோம். சுறா மீன்கள் திடமான வகையறாக்களை சேர்ந்ததால், அவைகளுக்கு விசேஷ கவனிப்பு தேவைப்படும். வெதுவெதுப்பான வெப்பநிலையை விரும்பும் அவைகள், குளிர்ந்த வெப்ப நிலையையும் தாக்கு பிடிக்கும்.
சுறா மீன்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை உணவளிக்க வேண்டும். காரணம் உணவளித்த இரண்டு மணி நேரத்தில் அவர்களுக்கு மீண்டும் பசிக்க தொடங்கிவிடும். சுறா மீன்களை 90 லிட்டர் அளவை கொண்ட நீரில் விடுவதே அதனை பராமரிப்பதற்கான அடிப்படை வழியாகும். அவைகளுக்கு அளவுக்கு அதிகமாக மரமும் பாறைகளும் கொடுக்க வேண்டும். அதனை வைத்து அதன் நிலப்பகுதியை அது ஏற்படுத்திக் கொள்ளும்.
இங்கு எந்த சுறா மீனிற்கு என்ன தேவை என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி வந்தால், சுறா மீனானது நீண்ட நாட்கள் இருக்கும்.

சரளை மண் தேவை - பாலா சுறா மீன்
உங்கள் மீன் தொட்டியில் சரளை மண் அடியில் இருக்க வேண்டும். ஆனால் 1/4-1/2 இன்ச் வரைக்கு மட்டுமே இது போடப்பட்டிருக்க வேண்டும். சுறாக்களுக்கு சரளை மண் என்றால் பிரியம். தொட்டியில் சுற்றி திரியும் போது அது இதனை கிளறி விட்டு விளையாடும். இதனை அது விரும்புவதால், வீட்டில் சுறா வளர்க்கும் போது சரளை மண் பயன்படுத்த வேண்டும்.

அளவுக்கு அதிகமாக பரவி கிடத்தல் - பாண்டெட் மூங்கில் சுறா
உங்கள் தொட்டி செடிகள், ஃபில்ட்டர் மற்றும் இதர மீன்களால் பரவி கிடக்கக்கூடாது. நடுத்தர அளவிலான தொட்டியில் ஒரு சுறாவும், பெரிய அளவிலான தொட்டியில் 8 சுறாவும் போடலாம்.

ஃபில்ட்டர் - வெண்ணிற புள்ளிகளை கொண்ட மூங்கில் சுறாக்கள்
சுறா மீன்களை வீட்டில் சிறப்பாக பராமரிக்க, எலெக்ரிகல் ஃபில்ட்டர்களை பயன்படுத்த வேண்டும். இது தானாகவே உங்கள் தொட்டியை சுத்தப்படுத்தும். சுறா மீன்கள் சுத்தமான மீன்கள் தான் என்றாலும் கூட, அது ஒன்றும் சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபடுவதில்லை தானே.

சுவாசிப்பதற்கு - நர்ஸ் சுறாக்கள்
உங்கள் தொட்டிக்கு ஏர் பம்ப் அவசியமானதாகும். இல்லையென்றால் உயிருடன் இருக்கும் செடிகளை தொட்டியில் போட்டு சுறாவை பராமரிக்க வேண்டும். இருப்பினும் அளவுக்கு அதிகமான செடிகளை போட வேண்டாம். இது தொட்டியை அழுக்காக்கி விடும்.

உணவு வகை - கோரல் பூனை சுறா
சுறா என்பதால் அது அதிகமாக உண்ணும் என்று பலரும் நினைக்கலாம். சீவல் உணவு, உறைந்த-காய்ந்த இரத்தப்புழுக்கள் மற்றும் ட்யூபிஃபெக்ஸ் ஆகியவைகளே இவைகளுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது. காய்கறி சம்பந்தப்பட்ட உணவுகளையும் அதற்கு அளிக்கலாம்.

தொட்டியின் அலங்காரம் - வானவில் சுறா
சுறாவை வீட்டில் வளர்க்க, உங்களிடம் பெரிய மீன் தொட்டி இருக்க வேண்டும். அதில் மரம், பாறைகள் மற்றும் அடர்ந்த செடியினத்தை விட வேண்டும். இதனால் உங்கள் தொட்டியில் அதன் நிலப்பகுத்தியை அதுவே வரைந்து கொள்ளும்.

சமுதாயங்கள் - சிகப்பு வால் சுறா
சுறாவை வீட்டில் வளர்க்க மற்றொரு சிறந்த டிப்ஸ் - மிதமான மூர்க்க குணத்துடன் இருக்கும் சுறா வகைகளை மட்டுமே உங்கள் தொட்டியில் விடுங்கள்.

தொட்டியை சுத்தம் செய்தல் - நீல டார்பெடோ சுறா
சுறாவை வீட்டில் நல்லபடியாக பராமரிக்க, ஒவ்வொரு வாரமும் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும். அப்போது தான் சரளை மண் மீது படியும் சிதைவு பொருட்கள் அகலும். நீர்ப்பாசி ஸ்கரப்பர் மூலமாக தொட்டியின் கண்ணாடியில் படிந்திருக்கும் பாசி மற்றும் அழுக்கை நீக்கலாம்.

மீன் இறக்கும் போது - அப்பலோ சுறா
மீன் இறக்கும் போது அதனை தொட்டியில் இருந்து உடனே அகற்ற வேண்டும். காரணம் இறந்த மீன் சிதைந்து, தொட்டியை மாசுப்படுத்தும். இதனால் மற்ற சுறாக்களுக்கு சுவாசிக்க சிரமமாகும்.

உணவளித்தல் - வெள்ளி சுறா
சுறாக்களை சிறந்த முறையில் பராமரிக்க அதற்கு அளவுக்கு அதிகமான உணவை அளிக்க கூடாது. சுறாக்கள் அதிகமாக உண்ணாது. அதற்கு வயிறு நிறைந்தவுடன், தொட்டியின் அடியில் உணவை தள்ளி விடும். இதனால் உங்கள் தொட்டி பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சியளிக்கும்.