Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
வேலைக்கு செல்வோர் வளர்ப்பதற்கு ஏற்ற செல்லப்பிராணிகள்!!!
தற்போது நிறைய பேர் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு செல்லப்பிராணிகளை வாங்கி வளர்த்தால் மட்டும் போதாது. அத்துடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். அதை விட்டு செல்லப்பிராணிகளை வாங்கி வீட்டில் விட்டு, 10 மணிநேரம் அலுவலகத்திலேயே நேரத்தை செலவழித்தால், பின் செல்லப்பிராணிகள் பாசத்திற்கு ஏங்கி தனிமையில் வாடிவிடும். ஆகவே வேலைக்கு செல்வோர், அதிகம் பாசத்திற்கு ஏங்கும் செல்லப்பிராணிகளை வாங்கி வளர்க்காமல், வேலைக்கு செல்லும் போதும் அமைதியாகவும், வளர்ப்போரை அதிகம் எதிர்பார்க்காமலும் இருக்கும் மாதிரியான செல்லப்பிராணிகளை வாங்கி வளர்க்க வேண்டும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை வேலைக்கு செல்வோருக்கு ஏற்ற வகையில் இருக்கும் சில செல்லப்பிராணிகளின் பட்டியலைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து, வேலைக்கு செல்வோராக இருந்தால், அந்த செல்லப்பிராணிகளை வாங்கி வளர்த்து வாருங்கள்.

மீன்
வேலைக்கு செல்வோர் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளில் முதன்மையானது மீன். இவை சப்தம் எழுப்பாமல் இருப்பதோடு, எப்போதும் அதனுடனேயே இருக்க வேண்டுமென்ற அவசியம் இருக்காது.

காதல் பறவைகள்
தற்போதுள்ள இளம் தலைமுறையினர் காதல் பறவைகளைத் தான் அதிகம் விரும்பி வளர்க்கின்றனர். இவை அமைதியான சப்தத்தை எழுப்பும். இந்த சப்தத்தைக் கேட்டால், மனதில் அமைதி தான் நிலவும். ஆகவே வேலைக்கு செல்வோர் இதனை வளர்ப்பது சிறந்ததாக இருக்கும்.

பர்ஸியன் பூனைகள்
இந்த பூனைகள் தனக்கென்று ஒரு சூழ்நிலையை தாமே அமைத்துக் கொண்டு, அமைதியாக இருக்கக்கூடியவை. எனவே பூனைகளை வளர்க்க விரும்புவோர், இந்த பூனையை வாங்கி வளர்க்கலாம்.

கிரே ஹவுண்ட் நாய்
இந்த வகையான நாய்கள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இந்த நாய் தான் வேலைக்கு செல்வோருக்கு ஏற்ற நாயாகும். மேலும் இந்த நாய் எப்போதும் தனது மாஸ்டர் வேண்டுமென்று நினைக்காமல், வீட்டிலேயே அமைதியாக சுற்றிக் கொண்டு இருக்கும். மேலும் இது வீட்டிற்கு சிறந்த பாதுகாப்பைத் தரக்கூடிய நாய்களுள் ஒன்றாகும்.

முயல்
முயல் எப்போதுமே சப்தம் எழுப்பி தொந்தரவு செய்யாது. ஆகவே அதிக சப்தம் எழுப்பாத மற்றும் வீட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத செல்லப்பிராணி வேண்டுமெனில், இதனை முயற்சிக்கலாம். மேலும் முயலை வளர்த்தால் ஒரே ஒரு முயலை மட்டும் வாங்கி வளர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், அவை குட்டிப் போட்டு முயல் பண்ணையை உருவாக்கிவிடும்.

கிளி
கிளி ஒரு சிறந்த துணையாக இருக்கும். கிளிக்கு பேச சொல்லிக் கொடுத்தால் மட்டுமே அது பேசும். மற்றபடி அது ஒரு அமைதியான பறவையாகும். மேலும் கிளி தனக்கு கொடுக்கும் உணவை சாப்பிட்டு, தன்னை திருப்திப்படுத்திக் கொள்ளும்.

சையாம் பூனை (Siamese cat)
சையாம் நாட்டில் வளர்க்கப்படும் குட்டை மயிர் கொண்ட பூனை தான் இது. இதற்கு இயற்கை என்றால் மிகவும் பிடிக்கும். இதற்கு அருமையான ஒரு இயற்கை சூழலை உருவாக்கிக் கொடுத்தால், அமைதியாக அந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்கும்.

கினி எலி/கினி பன்றி (Guinea Pigs)
இது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாகவும், எப்போதும் துறுதுறுவென்று இருக்கும். இதனை கூண்டில் வளர்ப்பது தான் சிறந்தது. இல்லாலிட்டால், வீடே இரண்டாகிவிடும். மேலும் இதனை செல்லப்பிராணியாக வளர்த்தால், வேலை முடிந்து வீட்டிற்கு டென்சனாக வரும் போது, இதன் அருகே சிறிது நேரம் அமர்ந்து, இதனை சேட்டைகளைப் பார்த்தால், டென்சன் குறைந்து, மனம் அமைதிப் பெறும்.

ஆங்கில புல்டாக் (English Bulldog)
நாய் இனங்களில் உள்ள அமைதியான நாய்களுள் ஆங்கில புல்டாக் முக்கியமானவை. இவை பார்ப்பதற்கு பெரியதாக இருக்கும். ஆனால் மிகவும் அமைதியானது மற்றும் தனிமையை விரும்பக்கூடியது.



Click it and Unblock the Notifications